1772ல் நவாப் மற்றும் கம்பெனியின் படை, கர்னல் போன்ஜோர் என்பவரின் கீழ் சிவகங்கையை தாக்கியது.
காளையார் கோவில் போர் (1772)
இப்போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டு சிவகங்கை பிரிட்டிஷ் வசம் வந்தது. வேலுநாச்சியார் தன் மகளுடன் திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாச்சி பாளையத்தில் அடைக்கலம் புகுந்தார்.
விருப்பாச்சி பாளையத்தின் தலைவர் கோபால நாயக்கரின் பாதுகாப்பில் சிவகங்கையை கைப்பற்ற முயற்சிசெய்தார்.
ஹைதர் அலியிடம் உருது மொழியில் பேசி அவரிடம் படை உதவியைப் பெற்றார்.
1780ல் ஹைதர் அலி மற்றும் கோபால நாயக்கரின் உதவியில் சிவகங்கையை மீட்டு மருது சகோதரர்களால் ராணியாக முடிசூட்டப்பட்டார்.
வேங்கன் பெருவுடையார் வெள்ளச்சி நாச்சியாரை மணந்து சிவகங்கை ராஜாவாக மாறினார்.
இந்தியாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட முதல்பெண் வேலுநாச்சியார் ஆவார். இவர் வீரமங்கை அல்லது தென்னக ஜான்சி ராணி எனப்படுகிறார். ஜான்சி,
கோபாலநாயக்கர்
விருப்பாச்சி பாளையத் தலைவரான இவர் பாளையக்காரர்கள் புரட்சியில் திண்டுக்கல் பாளையம் கூட்டமைப்பினை தலைமை தாங்கி நடத்தினார்.
திண்டுக்கல் கூட்டமைப்பில் இவரோடு மணப்பாறை பாளையத் தலைவர் லட்சுமி நாயக்கர் மற்றும் தேவதானப்பட்டி பாளையத்தின் தலைவர் பூஜை நாயக்கரும் இணைந்தனர்.
திப்புசுல்தானால் ஈர்க்கப்பட்டு பிரிட்டிஷிற்கு எதிராக கோயம்புத்தூரிலிருந்து எதிர்ப்பு தெரிவித்தார். பின்பு கட்டபொம்மனின் சகோதரர் ஊமத்துரையுடன் இணைந்து போரிட்டார்.