Contents show
ககன்யான் திட்டம்
- ககன்யான் (Gaganyaan விண்கலம்) இந்திய விண்கலத்தின் மூலம் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது தான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
- திட்டத்தின் பெயர் சமஸ்கிருதத்தில் “வானத்தை நோக்கிச் செல்லும்” என்று பொருள்.
- இந்த விண்கலத்தில் மூன்று பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இந்த விண்கலமானது ஜி. எஸ். எல். வி மார்க் III மூலம் 2021 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்படவுள்ளது.
- இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் தயாரித்துள்ள இந்த விண்கலத்தின் சோதனை ஓட்டமானது டிசம்பர் 18,2014 இல் நடைபெற்றது
- ககன்யான் என்பது முழுமையான தன்னாட்சி கொண்ட 3.7 டன் எடையுள்ள விண்கலம் ஆகும்.
- இதில் மூன்று பேர் சுற்றுப்பாதைக்கு சென்று புவிக்கு திரும்பக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள்ளது. இந்த திட்டம் 7 நாட்கள் வரை சுற்றுப்பாதையில் இருக்கும். இது சோயூசு விண்கலம் போன்ற விண்கலம் ஆகும்
மூன்று முக்கிய கட்டங்கள்:
முதல் கட்டம்:
- இது 2024 நடுப்பகுதியில் நடைபெறும். இந்த கட்டத்தில், ஒரு சோதனை விண்கலம் மனிதர் இல்லாமல் விண்ணில் ஏவப்படும். இந்த கட்டத்தின் நோக்கம் விண்கலத்தின் செயல்திறனை சோதிப்பதாகும்.
இரண்டாம் கட்டம்:
- இது 2024 இறுதியில் நடைபெறும். இந்த கட்டத்தில், ஒரு விண்கலம் மூன்று இந்திய விண்வெளி வீரர்களுடன் விண்ணில் ஏவப்படும். இந்த கட்டத்தின் நோக்கம் மனிதர்களை பூமியின் சுற்றுப்பாதையில் கொண்டு செல்வதையும், அவர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதையும் உறுதி செய்வதாகும்.
மூன்றாம் கட்டம்:
- இந்த கட்டம் 2025 இல் நடைபெறும். இந்த கட்டத்தில், இந்திய விண்வெளி வீரர்கள் பூமியின் சுற்றுப்பாதையில் கூடுதல் ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.
ககன்யான் திட்டத்தின் நோக்கங்கள்
- நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிலையை மேம்படுத்துதல்.
- பல நிறுவனங்கள், கல்வி மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட ஒரு தேசிய திட்டமாகும்,
- தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துதல்.
- இளைஞர்களை ஊக்குவித்தல்.
- சமூக நலன்களுக்காக தொழில்நுட்பத்தில் வளர்ச்சி.
- சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.
முக்கியத்துவம்
- இதற்கு முன் இந்திய விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு சென்றிருட்பினும், இஸ்ரோவால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் மனித விண்வெளி திட்டம் இதுவாகும்.
- இது நாட்டின் இளைஞர்களுக்கிடையே மிகப்பெரிய சவால்களை எடுக்கவும், நாட்டின் கவுரவத்தை மேம்படுத்தவும் ஊக்குவிக்கும் திட்டமாகும்.
- ககன்யான் திட்டமானது இஸ்ரோவுக்கு “ஒரு திருப்பு முனையாக” இருக்கும் மற்றும் இந்திய ராக்கெட்டைப் பயன்படுத்தி, தேசிய விண்வெளி நிறுவனம் இதுவரை மேற்கொண்ட சவால்களில் இது மிகப்பெரிய சாவலாகும் மற்றும் அதுவும் ஐந்து ஆண்டுக்காலக் கெடுவுக்குள் இந்திய விண்வெளி அமைப்பு நிகழ்த்திய சாதனையாகும்.