கம்பராமாயணம்
- கம்பர். இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி “இராம அவதாரம்” எனப் பெயரிட்டார்.
- கம்பனது கவிநலத்தின் காரணமாக “இராம அவதாரம்”, “கம்பராமாயணம்” என வழங்கப்பெறுகிறது.
- கம்பராமாயணம் ஆறு (6) காண்டங்களை உடையது.
கம்பராமாயணத்தில் உள்ள 6 காண்டங்கள்
- அயோத்தியா காண்டம்
- ஆரணிய காண்டம்
- கிட்கிந்தா காண்டம்
- பால காண்டம்
- யுத்த காண்டம்
- சுந்தர காண்டம்
- கம்பராமாயணப் பாடல்கள் சந்த நயம் மிக்கவை.
- பல்வேறுவிதமான பண்புகளை அடிப்படையகாக் கொண்ட பாத்திரங்களால் படைக்கபட்டிருக்கிறது கம்பராமாயணம்
கம்பர்
- கம்பர் சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்.
- கம்பர் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர்
- கம்பரது காலம் 12ஆம் நூற்றாண்டு
கம்பர் இயற்றி உள்ள நூல்கள்
- ஏர் (70) எழுபது
- சிலை (70) எழுபது
- சரசுவதி அந்தாதி
- திருக்கை வழக்கம்
- சடேகாபர் அந்தாதி
கம்பரின் பெருமைகள்
- “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்” என்று புகழப்பெற்றவர் கம்பர்
- “கல்வியில் பெரியவர் கம்பர்”, “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” போன்ற முதுமொழிகளுக்கு உரியவர் கம்பர்;
- கம்பராமாயணம், எழுதப்பட்ட காலம்தொட்டு மக்கள் இலக்கியமாகப் போற்றப்படுவதற்குக் கவிச்சக்ரவர்த்தி கம்பனின் கவிநலமே காரணம்.
கம்பனை புகழ்ந்த பாரதி
- ‘கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்’ என்று பாரதி பெருமைப்படுகிறார்.
- ‘ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா’ என்று பாரதி.
பாத்திர படைப்பு
இராமன்
- ‘யாவரும் கேளிர்’ என்பது தமிழர் நற்பண்பின் வளர்ச்சி,
- ‘சிறியோரை இகழ்தல் இலமை’ என்பது அந்நற்பண்பின் மலர்ச்சி,
- ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்` என்பது அவ்வுயிர்ப்பண்பின் முதிர்ச்சி,
- ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்பது அத்தமிழ்ப்பண்பின் தொடர்ச்சி,
- கம்பனின் காவியம் இராமனை இப்பண்பின் படிமமாகப் படைத்திருப்பது உயர்ச்சி,
- தந்தை தாய் மீதான அன்பு, உடன் பிறப்பியம் ஆகியற்றை, எல்லைகள் அனைத்தையும் கடந்து இராமன் விரிவுப்படுத்துகிறான்.
- வேடன், பறவை, எளிய முதியவள், வானரம், எதிரியின் தம்பி என்ற வேலிகள் இராமனின் அன்பிற்கு இல்லை.
வேடுவர் தலைவன் குகன்
- பாறை உடலுக்குள் பஞ்சு உள்ளம் கொண்டவன் குகன்.
- காட்டிற்குச் செல்லும் இராமனை, கங்கையைக் கடக்க உதவுகின்றான் குகன்.
- அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை என்பதை நிறுவும் வகையில் இராமன் குகன் நட்பு முகிழ்க்கிறது.
- இராமன் இளவரசனாக இருப்பினும் வேடனான குகன் உடன்பிறப்பாக ஏற்றுக் கொள்கிறான்.
- பின்னாளில் “எனக்கும் மூத்தோன்“ எனக் குகனை சந்திக்கும் பரதனும் ஏற்கிறான்
கழுகு வேந்தன் சடாயு
- இராவணன் சீதையைச் சிறையெடுத்தபோது கழுகு வேந்தன் சடாயு தடுத்துச் சண்டையிட்டுக் காயப்படுகிறான்.
- சடாயு இராமனிடம் நடந்ததைக் கூறுகிறான், பின் இறந்துவிடுகிறான்.
- இராமன், தன் தந்தையின் நண்பனான கழுகு வேந்தன் சடாயுவையும் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறான்.
சவரி
- இராமனிடம் மிகுதியான அன்பையும் பக்தியையும் கொண்டவள் சவரி.
- சீதையைத் தேடிவரும் இராமனை, சுக்ரீவனுடன் நட்புக்கொள்ளுமாறு செய்தவள் சவரி
- அவ்வகையில் காப்பியத்தின் போக்கில் ஒரு திருப்பத்தை உருவாக்குபவள் சவரி.
- இராமன். அன்பளாகிய சவரியிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டினான்.
சுக்ரீவன்
- சீதையைத் தேடிவரும் இராம இலக்குவரைக் கண்ட அனுமன், சுக்ரீவனை அழைத்து வந்தான்.
- சுக்ரீவனை நண்பனாக ஏற்றுக் கொள்கிறான் இராமன்.
வீடணன்
- சீதையைக் கவர்ந்து வந்தது தவறென வீடணன், இராவணனிடம் கூறுகிறான்.
- வீடணன் கூற்றை மதியாத இராவணன், வீடணனைக் கடிந்தான்.
- இலங்கையை விட்டுவந்த வீடணன், இராமன் இருக்குமிடம் வந்து அடைக்கலம் வேண்டினான்.
- வீடணன் இராமன் அவனை உடன்பிறந்தவனாக ஏற்று இலங்கை அரசை அவனுக்கு உரிமையாக்கினான்.
- அயோத்தியா காண்டம் – குகப் படலம் – கலி விருத்தம்
- யுத்த காண்டம் – வீடணன் அடைக்கலப் படலம் – அறுசீரக் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ‘துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது அது அன்றிப் பின்பு உளது – பா வகை : கலி விருத்தம்
- புகல் அருங்கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை. பா வகை : அறுசீரக் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கவிதையும் கவிஞனும்
- உள்ளதை உணர்ந்தபடி கூறுவது கவிதை
- கவிஞனின் உலகம் இட எல்லை அற்றது ,கால எல்லை அற்றது
- கவிஞனின் சிந்தைக்குள் உருவாகும் காட்சியைச் சொல்லைக்கொண்டு எழுப்புகிறான்.
- கவிஞன் கண்ட காட்சிகள் அதற்குத் துணை புரிகின்றன, கேட்ட ஓசைகள் துணைபுரிகின்றன, விழுமியங்கள் துணைபுரிகின்றன, ஒப்புமைகள் துணைபுரிகின்றன.
- கலையின் உச்சம் பெறுவது தான் கவிஞனின் எல்லை ஆகிறது. கம்பன் அப்படிப்பட்ட கவிஞன்.
- அதனால்தான் ‘கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்’ என்று பாரதி பெருமைப்படுகிறார்.
பால காண்டம் – சரயு ஆற்றுப்படலம்
ஆறு இயற்கையின் தோற்றமாக இல்லாமல் ஓர் ஓவியமாக விரிகின்றது.அதை உயிரெனக் காணும் அந்த அழகுணர்ச்சி கவிதையாகி ஓடி நெஞ்சில் நிற்கின்றது
பாடல்-31 **
- தா துகு சோலை தோறுஞ் சண்பகக் காடு தோறும்
- போதவிழ் பொய்கை தோறும் புது மணற்றடங்க டோறும்
- மாதவி வேலிப் பூக வனம்தொறும் வயல்கடோறும் ஓதிய வுடம்பு தோறு முயிரென வுலாய தன்றே**
பாடலின் பொருள்
- மகரந்தம் சிந்துகின்ற சோலைகள், மரம் சொறிந்த சண்பகக் காடுகள், அரும்புகள் அவிழ்ந்து மலரும்
- பொய்கைகள், புது மணல் தடாகங்கள், குருக்கத்தி, கொடி வேலியுடைய கமுகந்தோட்டங்கள், நல்வயல்கள் இவை அனைத்திலும் பரவிப் பாய்கிறது சரயு ஆறு
- சரயு ஆறு, ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல் பல இடங்களில் பாய்கிறது * *
பால காண்டம் – கோசல நாடு – மருதம் நாட்டுப்படலம்
இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலை நிகழ்வே நடப்பதற்கான தோற்றமாகக் கம்பன் கவி காட்டுகிறது
பாடல்-35 *
- தண்டலை மயில்களாடத் தாமரை விளக்கந் தாங்க
- கொண்டல்கன் முழவினேங்கக் குவளை கண் விழித்து நோக்க
- தொண்டிரை யெழினி காட்டத்
- தேம்பிழி மகர யாழின் வண்டுகளினிது பாட
- மருதம் வீற்றிருக்கு மாதோ
பாடலின் பொருள்
- குளிர்ந்த சோலைகளில் மயில்கள் அழகுற ஆட. விரிதாமரை மலர்கள், ஏற்றிய விளக்குகள் போல் தோன்ற,
- சூழும் மேகங்கள் மத்தள ஒலியாய் எழ, மலரும் குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பதுபோல் காண,
- நீர் நிலைகள் எழுப்பும் அலைகள் திரைச்சீலைகளாய் விரிய.
- மகர யாழின் தேனிசைபோல் வண்டுகள் ரீங்காரம் பாட மருதம் வீற்றிருக்கிறது. *
பால காண்டம் – கோசல நாடு – மருதம் நாட்டுப்படலம்
ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுத்தப்படுகிறது என்ற ய்யியலைக்கொண்டு, ஒரு நாட்டின் பெருமையைப் புலப்படுத்தும் கம்பனின் உத்தி போற்றத்தக்கது.
பாடல்-84 * *
** வண்மை யில்லையோர் வறுமையின்மை
யாற்றிண்மை யில்லையோர் செறுநரின் மையால்
உண்மை யில்லை பொய்யுரை யிலாமையால் வெண்மை யில்லை பல் கேள்வி மேவலால்
பாடலின் பொருள்
* கோசல நாட்டில்
வறுமை சிறிதும் இல்லாததால், கொடைக்கு அங்கே இடமில்லை
நேருக்குநேர் போர் புரிபவர் இல்லாததால், வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை
பொய்மொழி இல்லாமையால், மெய்மை தனித்து விளங்கவில்லை
பல வகைக் கேள்விச் செல்வம் மிகுந்து விளங்குவதால் அங்கு அறியாமை சிறிதும் இல்லை **
பாடல்-1926 *
வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்
மையோமரகதமோ மறிகடலோ மழை முகிலோ
ஐயோவிவன் வடிவென்ப தொரழியா வழகுடையான்
பாடலின் பொருள்
- பகலவன் பட்டொளி இராமனின் நீலமேனி ஒளியில் பட்டு இல்லையெனும்படி மறைந்துவிட,
- இடையே இல்லையெனும்படியான நுண்ணிய இடையாள் சீதையொடும். இளையவன் இலக்குவனொடும் போனான்.
- அவன் நிறம் மையோ? பச்சை நிற மரகதமோ? மறிக்கின்ற நீலக் கடலோ? கார்மேகமோ?
- ஐயோ! ஒப்பற்ற அழியாத அழகினை உடைய வடிவு கொண்டவன் இராமன்
அயோத்தியா காண்டம் – கங்கைப்படலம்
இராமனுடைய மாநிற மேனியை வருணிக்கும் கம்பன், மை, மரகதம் என்றெல்லாம் உவமை சொல்லி, நிறைவாகச் சொல்ல இயலவில்லை என்பதை ‘ஐயோ’ என்ற சொல்லில் வைப்பதன் வாயிலாக அதை இயன்றதாக்குகிறான்
பாடல் – 1926
வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்
மையோமரகதமோ மறிகடலோ மழை முகிலோ
ஐயோவிவன் வடிவென்ப தொரழியா வழகுடையான்
பாடலின் பொருள்
- பகலவன் பட்டொளி இராமனின் நீலமேனி ஒளியில் பட்டு இல்லையெனும்படி மறைந்துவிட இடையே இல்லையெனும்படியான நுண்ணிய இடையாள் சீதையோடும் ,இளையவன் இலக்குவனொடும் போனான்
- அவன் நிறம் மையோ ?பச்சை நிற மரகதமோ ?மறிக்கின்ற நீலக் கடலோ?கார்மேகமோ ?
- ஐயோ ‼ஒப்பற்ற அழியாத அழகினை உடைய வடிவு கொண்டவன் இராமன்
அயோத்தியா காண்டம் – குகப் படலம்
வேடுவர் தலைவன் குகன். இராமனை, கங்கையைக் கடக்க அவன் உதவுகின்றான். இராமன் குகன் நட்பு முகிழ்க்கிறது.
இராமன் வேடனான குகனை உடன்பிறப்பாக ஏற்றுக் கொள்கிறான், தனும் “எனக்கும் மூத்தோன்” எனக் ஏற்கிறான்.
பாடல்-1994 **
அன்னவன் உரை கேளா அமலனும் உரை நேர்வான்
என் உயிர் அனையாய் நீ, இளவல் உன் இனையா
இந் நன்னுதலவள் நின் கேள்;
நளிர் கடல் நிலம் எல்லாம் உன்னுடைய
நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன். **
பாடலின் பொருள்
- குகன் கூறியவற்றைக் கேட்ட இராமன் ”என் உயிர் போன்றவனே! நீ என் தம்பி; இலக்குவன் உன் தம்பி
- அழகிய நெற்றியைக் கொண்ட சீதை, உன் அண்ணி
- குளிர் கடலும் இந்நிலமும் எல்லாம் உனதேயாகும்.
- குகனே நான் உன்னுடைய ஏவலுக்கேற்பப் பணிபுரிபவன் என்று இராமன் கூறினான்.
பாடல்-1995 **
‘துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது? அது
அன்றிப் பின்பு உளது
இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல்
முன்பு உளெம் ஒரு நால்வேம்
முடிவு உளது என உன்னா அன்பு உள்,
இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்* *
பாடலின் பொருள்
இராமன் காட்டிற்குச் சென்று துன்புறுவானே என்று குகன் வருந்தினான்.அதை உணர்ந்த கூறுகிறான், குகனே! இராமன்
துன்பம் என்று ஒன்று இருந்தால் தானே இன்பம் என்பது புலப்படும். துன்பத்திற்குப் பின் இன்பம் உறுதியாக உண்டு
நமக்கிடையே இப்போது இப்பிரிவு நேர்கிறது என்று எண்ணாதே. இதுவரை நாங்கள் நால்வரே உடன்பிறந்தவர் என்றிருந்தோம். உறவு என்பது எங்கள் நால்வரோடு நின்றுவிடவில்லை.
குகனே! இப்போது உன்னையும் சேர்த்து நாம் ஐவர் ஆகின்றோம்**
பா வகை : கலி விருத்தம் *
அயோத்தியா காண்டம் – கங்கை காண் படலம்
கவிதைகள் மூலம் பெறும் இன்பங்கள் எத்தனையோ! அதில் ஒன்று சந்த இன்பம். பொருள் புரியாவிடினும் சந்த இன்பம் மகிழ்ச்சியூட்டுகிறது. ‘ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா’ என்று பாரதி சொல்வதை இதில் உணரமுடியும்.
பாடல்-2317 * *
ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு நடுங்கிடும் வில்லாளோ
தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல் அன்றோ
ஏழமை வேட னிறந்தில் னென்றெனை யேசாரோ
பாடலின் பொருள்
- ஆழமும் பெரிய அலைகளையும் உடைய கங்கை ஆற்றை பரதன் முதலானோர் கடந்து செல்வார்களா?
- யானைகள் கொண்ட சேனையைக்கண்டு, புறமுதுகுக் காட்டி விலகிச் செல்கின்ற வில்வீரனோ நான்!
- தோழமை என்று இராமர் சொன்ன சொல், ஒப்பற்ற சொல் அல்லவா?
- தோழமையை எண்ணாமல் இவர்களைக் கடந்து போகாவிட்டால் இறந்திருக்கலாமே சொல்ல மாட்டார்களா?** இந்த வேடன் உலகத்தார் என்னைப் பழி சொல்ல மாட்டார்களா ?
சொல்லும் பொருளும்
- அன்னவன் – இராமன்
- அமலன் – இராமன்
- இளவல் – தம்பி
- நளிர் கடல் – குளிர்ந்த கடல்
- துன்பு – துன்பம்
- உன்னேல் – எண்ணாதே
ஆரணியகாண்டம் – சடாயு உயிர் நீத்த படலம்
இராவணன் சீதையைச் சிறையெடுத்தபோது கழுகு வேந்தன் சடாயு தடுத்துச் சண்டையிட்டுக் காயப்படுகிறான். பின் இறந்துவிடுகிறான்.
இராமன், தன் தந்தையின் நண்பனான கழுகு வேந்தன் சடாயுவையும் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறான்.
பாடல் – 3356
இந்தனம் எனைய என்ன கார் அகில் ஈட்டத்தோடும் சந்தனம் குவித்து
வேண்டும் தருப்பையும் திருத்தி, பூவும் சிந்தினன்
மணலின் வேதி தீது அற இயற்றி, தெண் நீர் தந்தனன்
தாதை தன்னைத் தடக் கையான் எடுத்துச் சார்வான்.
பாடலின் பொருள்
- “எப்படிப்பட்ட சிறப்பான விறகுகள் இவை” என்று கண்டவர் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும் சந்தனக் கட்டைகளையும் இராமன் கொண்டுவந்து வைத்தான்.
- தேவையான அளவு தருப்பைப் புற்களையும் ஒழுங்கு பட அடுக்கினான் பூக்களையும் கொண்டுவந்து தூவினான்.
- மணலினால் மேடையைத் திருத்தமாக அமைத்தான். நன்னீரையும் எடுத்து வந்தான்.
- இறுதிச்சடங்கு செய்யப்படக்கூடிய மேடைக்குத் தன் சடாயுவைப் பெரிய கைகளில் தூக்கிக் கொண்டு வந்தான்.
ஆரணிய காண்டம் – சவரி பிறப்பு நீங்கு படலம்
இராமனிடம் மிகுதியான அன்பையும் பக்தியையும் கொண்டவள் சவரி, சுக்ரீவனுடன் நட்புக்கொள்ளுமாறு செய்தவள் சவரி. அவ்வகையில் காப்பியத்தின் போக்கில் ஒரு திருப்பத்தை உருவாக்குபவள் சவரி.
இராமன், அன்பளாகிய சவரியிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டினான்.
பாடல்-3700
அன்னது ஆம் இருக்கை நண்ணி, ஆண்டு நின்று.
அளவு இல் காலம் தன்னையே நினைந்து நோற்கும் சவரியைத் தலைப்பட்டு, *
அன்னாட்கு இன்னுரை அருளி, தீது இன்று இருந்தனை போலும் என்றான்
முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது ஓர் மூலம் இல்லான்.
பாடல் – 3701* *
இவனுக்கு முன்னே இப்படியொருவர் இருந்தார் என்று பிறிதொருவரைக் காட்ட இயலாத நிலையிலுள்ள முதற்பொருளாகிய இராமன், சவரியிடம் இனிதாகப் பேசினான்.
தன்னையே நினைத்துத் தவமிருந்த சவரியிடம். “இவ்வளவு காலம் நீ துன்பம் ஏதுமின்றி நலமுடன் இருந்தாய் அல்லவா?” என்று பரிவுடன் கேட்டான்*
பாடல் – 3701* *
ஆண்டு, அவள் அன்பின் ஏத்தி, அழுது இழி அருவிக் கண்ணள், மாண்டது என் மாயப் பாசம்**
வந்தது, வரம்பு இல் காலம் பூண்ட மா தவத்தின் செல்வம் போயது, பிறவி, என்பாள்
வேண்டிய கொணர்ந்து நல்க. விருந்து செய்து இருந்த வேலை
பாடலின் பொருள்
சவரி இராமனைப் புகழ்ந்து அன்பின் கனிவினால் அருவி இழிவது போலக் கண்ணீர் வடித்தாள்.
(இராமனைக் கண்டதால்) “என் பொய்யான உலகப்பற்று அழிந்தது **
அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் பலித்தது என் பிறவி ஒழிந்தது” என்று கூவரி கூறினாள்.**
வேண்டிய எல்லாம் கொண்டு வந்து அவள் இராம இலக்குவனுக்கு விருந்து செய்விக்க. அவர்களும் விருந்தை ஏற்றனர்.
கிட்கிந்தா காண்டம் – நட்பு கோட்படலம்
சீதையைத் தேடிவரும் இராம இலக்குவரைக் கண்ட அனுமன், சுக்ரீவனை அழைத்து வந்தான். சுக்ரீவனை நண்பனாக ஏற்றுக் கொள்கிறான் இராமன்.
பாடல் 3806**
தவா வலி அரக்கர் என்னும் தகா இருள் பகையைத் தள்ளி, * *
குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற காலத்தின் கூட்டம் ஒத்தார்
அவா முதல் அறுத்த சிந்தை அனகனும், அரியும் வேந்தும்
உவா உற வந்து கூடும் உடுபதி, இரவி ஒத்தார். * *
பாடலின் பொருள்
- குறையாத வலிமை உடையவர்களும் வேண்டாத இருள் போன்றவர்களுமாகிய பகைவர்களை அழித்து
- அறங்கள் அனைத்தையும் நிலைபெறச் செய்வதற்கு ஏற்ற உரிய காலம் போல் இராமனும் சுக்ரீவனும் ஒருங்கிருந்தார்கள் **
- ஆசையை அறவே அழித்த சிந்தையான் இராமனும் வானரத் தலைவன் சுக்ரீவனும்
- அமாவாசைக் காலத்தில் ஒன்றாக இணைந்திருக்கிற சந்திரனையும் சூரியனையும் ஒத்து இருந்தார்கள். **
பாடல்-3812**
மற்று இனி உரைப்பது என்னே?
வானிடை மண்ணில், நின்னைச் செற்றவர் என்னைச் செற்றார்
தீயரே எனினும் உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார் உன் கிளை எனது என் காதல் சுற்றம் உன் சுற்றம்
நீ என் இன் உயிர்த் துணைவன் என்றான். **
பாடலின் பொருள்
- இராமன் சுக்ரீவனிடம், “இனி நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது
- விண்ணிலும் மண்ணிலும் உள்ள உன் பகைவர் என் பகைவர்
- தீயவராக இருப்பினும் கூட உன் நண்பர்கள் என் நண்பர்கள்
- உன் உறவினர் என் உறவினர்
- அன்பு மிகுந்த என் சுற்றத்தினர் உன் சுற்றத்தினர்
- நீ, என் இனிய உயிர் நண்பன்!” என்றான்**
சொல்லும் பொருளும்
- அனகன் – இராமன்
- உவா – அமாவாசை
- உடுபதி – சந்திரன்
- செற்றார் – பகைவர்
- கிளை – உறவினர்
யுத்த காண்டம் – வீடணன் அடைக்கலப் படலம்
- சீதையைக் கவர்ந்து வந்தது தவறென வீடணன், இராவணனிடம் கூறுகிறான். அவன் கூற்றை மதியாத இராவணன், வீடணனைக் கடிந்தான்.
- இலங்கையை விட்டு வந்த வீடணன், இராமனிடம் அடைக்கலம் வேண்டினான். இராமன் அவனை உடன்பிறந்தவனாக ஏற்று இலங்கை அரசை அவனுக்கு உரிமையாக்கினான்.
பாடல் – 6503
ஆழியான் அவனை நோக்கி, அருள் சுரந்து, உவகை கூர
ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பேரும் எந்நாள்,வாழும் நாள், அன்று காறும்,
வாள் எயிற்று அரக்கர் வைகும் தாழ்கடல் இலங்கைச் செல்வம் நின்னதே, தந்தேன் என்றான். **
பாடலின் பொருள்
- ஆணைச்சக்கரத்தை உடைய இராமன் உள்ளத்தில் கருணை பொங்க வீடணனிடம்.
- “ஒளித்பொருந்திய பற்களை உடைய அரக்கர் வாழ்வதும் ஆழியான் கடல் நடுவே உள்ளதுமான இலங்கை அரசாட்சி,
- ஏழேழாகிய பதினான்கு உலகங்களும் எனது பெயரும் இங்கு எவ்வளவு காலம் இருக்குமோ அவவ்ளவு காலம் உனக்கே உரிமை எனக் கொடுத்தேன்” என்று கூறினான்.
பாடல்-6507
குகனோடும் ஐவர் ஆனேம் முன்பு;
பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவர் ஆனேம்;
எம்முழை அன்பின் வந்த அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்
புகல் அருங்கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை * * *
பா வகை : அறுசீரக் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்**
பாடலின் பொருள்
- நாங்கள் நால்வர் உடன்பிறந்தவர்களாக இருந்தோம். குகனுடன் சேர்த்து நாங்கள ஐவர் ஆனோம்.
- பின்னர் மேரு மலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் அறுவர் ஆனோம்.
- உள்ளத்தில் அன்புகொண்டு எங்களிடம் வந்த அன்பனே, வீடணனே உன்னுடன் சேர்த்து எழுவர் ஆனோம்.
- புகுதற்கரிய கானக வாழ்வை மேற்கொள்ளும்படி என்னை அனுப்பிய உன் தந்தையாகிய தயரதன்,
- இதனால் புதல்வர்களைக் கூடுதலாக அடைந்து பெருமை பெறுகிறான்.
யுத்த காண்டம் – கும்பகருணன் வதைப் படலம்
உலக்கையால் மாறிமாறி இடிக்கும் ஒத்த ஓசையில் அமைந்த சந்தம், கும்பகருணனை எழுப்பும் காட்சியைக் கண் முன் நிறுத்துகிறது.
பாடல்-7316
உறங்குகின்ற கும்பகன்ன வுங்கண் மாய வாழ்வெலாம் இறங்குகின்றதின்று காண ழுந்திரா யெழுந்திராய்
கறங்கு போல விற்பிடித்த கால தூதர் கையிலே **
உறங்குவாயுறங்குவாய்னிக் கிடந்துறங்குவாய்.
பாடலின் பொருள்
உறங்குகின்ற கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது. அதனைக் காண்பதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்!
காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையில் இனிப்படுத்து உறங்குவாயாக.
முந்தைய ஆண்டு வினாக்கள்
கம்பர் அவைப்புலவராக விளங்கிய அரசவை
(A) பாண்டியன்
(B) குலோத்துங்க சோழன்
(C) சேரன்
(D) பல்லவன்
(E) விடை தெரியவில்லை
“மையோ? மரகதமோ? மறி கடலோ? மழை முகிலோ? ஐயோ! இவன்வடி வென்பதோர் அழியா அழகுடையான்” என்று வருணித்தவர்.
(A) இளங்கோவடிகள்
(B) பாரதியார்
(C) கம்பர்
(D) பாரதிதாசன்
(E) விடை தெரியவில்லை
திருமணம் செல்வக்கேசவராயரால், ‘தமிழுக்கு கதியாவார் இருவா என்று குறிப்பிடப்படுபவர்கள்
(A) கம்பர், இளங்கோ
(B) கம்பர், திருவள்ளுவர்
(C) திருவள்ளுவர், இளங்கோ
(D) இளங்கோ, பாரதியார்
(E) விடை தெரியவில்லை
கூற்று 1: ஏரெழுபது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று
கூற்று 2: ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்
(A) கூற்று 1 மட்டும் சரி
(B) கூற்று 2 மட்டும் சரி
(C) கூற்று 1ம் கூற்று 2ம் சரி
(D) கூற்று 1ம் கூற்று 2ம் தவறு
(E) விடை தெரியவில்லை
இராமாயணத்தில் கம்பர் எழுதாத காண்டம்
(A) உத்திர காண்டம்
(B) சுந்தர காண்டம்
(C) பால காண்டம்
(D) அயோத்தியா காண்டம்
(E) விடை தெரியவில்லை
‘கல்வியில் பெரியவர்’, ‘கவிச்சக்ரவர்த்தி’ என்றெல்லாம் புகழப்படுபவர்
(A) ஒட்டக்கூத்தர்
(B) கம்பர்
(C) இளங்கோவடிகள்
(D) புகழேந்தி
(E) விடை தெரியவில்லை
கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் யாது?
(A) கம்பராமாயணம்
(B) இராமாயணம்
(C) இராமாவதாரம்
(D) இராம காதை
(E) விடை தெரியவில்லை
“மலை உருவி மரம் உருவி மண் உருவிற்று ஒருவாளி” இவ்வரி இடம்பெற்ற நூல்
(A) மகாபாரதம்
(B) கலிங்கத்துப்பரணி
(C) பெரியபுராணம்
(D) இராமாயணம்
‘தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்தவன்றே’ – என்ற வரிகள் இடம்பெற்ற நூல்
(A) சிலப்பதிகாரம்
(B) சீவகசிந்தமாணி
(C) கம்பராமாயணம்
(D) மணிமேகலை
நெடுநீர்வாய்க் கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்” -இவ்வடிகள் இடம்பெறும் நூல்
(A) பெரியபுராணம்
(B) மணிமேகலை
(C) கம்பராமாயணம்
(D) சீவக சிந்தாமணி
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்வு செய்க,
(A) கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்
(B) கம்பராமாயணத்தின் பெரும் பிரிவிற்கு ‘காண்டம்’ என்று பெயர்
(C) கம்பராமாயணத்தின் உட்பிரிவு ‘காதை’ என அழைக்கப்படுகிறது
(D) கம்பராமாயணம் ஒரு வழிநூல் ஆகும்
கம்பராமாயணம் _________ நூல்.
(A) முதல்நூல்
(B) நாடகநூல்
(C) வழிநூல்
(D) மொழிபெயர்ப்புநூல்
துன்பம் உண்டாயின் அதனையடுத்து இன்பமும் தோன்றுவது இயற்கை என்ற பொருள் தரும் வரிகள் அமைந்த நூல்
(A) தேம்பாவணி
(B) கம்பராமாயணம்
(C) சீவகசிந்தாமணி
(D) மணிமேகலை
“அன்புள இனிநாம் ஓர் ஐவர்கள் உளரானோம்” இப்பாடலடி இடம் பெற்ற நூல் எது?
(A) சீவக சிந்தாமணி
(B) சிலப்பதிகாரம்
(C) பாஞ்சாலி சபதம்
(D) கம்பராமாயணம்
“கைவண்ணம் அங்குக் கண்டேன்; கால்வண்ணம் இங்குக் கண்டேன்”. இப்பாடலடி இடம் பெற்ற நூல் எது?
(A) சிலப்பதிகாரம்
(B) மகாபாரதம்
(C) நளவெண்பா
(D) கம்பராமாயணம்
‘தமிழுக்குக் கதி’ என்று அழைக்கப்பட்ட இரண்டு நூல்கள் (4 times Asked)
(A) சங்க இலக்கியம், மகாபாரதம்
(B) சிலப்பதிகாரம், மணிமேகலை
(C) கம்பராமாயணம், திருக்குறள்
(D) தமிழ்விடு தூது. நந்திக்கலம்பகம்
‘ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்’ என்று பாடியவர் யார்?
(A) ஒளவையார்
(B) கம்பர்
(C) பாரதியார்
(D) பாரதிதாசன்
முழுதும் விருத்தபாக்களால் ஆன காப்பியம்
(A) சிலப்பதிகாரம்
(B) மணிமேகலை
(C) கம்ப இராமாயணம்
(D) குண்டலகேசி
“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று கம்பரைப் புகழ்ந்து பாடியவர்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) புகழேந்தி
(D) சடையப்பவள்ளல்
கீழ்க்கண்ட கூற்றுக்களில் எவை சரியானவை?
I. கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்
II. இரணியன் வதைப்படலம் வான்மீகி இராமாயணத்தில் இடம்பெறவில்லை
III. மாயாசனகப் படலம் கம்பராமாயணத்தில் இல்லாதது
IV. கம்பர் நூறு பாடல்களுக்கு ஒரு முறை தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் போற்றி உள்ளார்
(A) I, II சரியானவை
(B) II, III சரியானவை
(C) III, IV சரியானவை
(D) I, IV சரியானவை
கம்பரது காலம்
(A) கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டு
(B) கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு
(C) கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு
(D) கி.பி. எட்டாம் நூற்றாண்டு
கம்பரால் ‘பண்ணவன்” எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
(A) இராமன்
(B) இலக்குவன்
(C) குகன்
(D) பரதன்
கம்பராமாயணம் – அயோத்தியா காண்டத்திலுள்ள படலங்கள்
(A) 14
(B) 10
(C) 11
(D) 13
உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர் -இத்தொடரைக் கூறியவர்
(A) இளங்கோவடிகள்
(B) சீத்தலை சாத்தனார்
(C) கம்பர்
(D) வால்மீகி
சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர் யார்?
(A) உமறுப்புலவர்
(B) கம்பர்
(C) நாமக்கல் கவிஞர்
(D) பாரதியார்
கம்பரைப் புரந்தவர் யார்?
(A) ஒட்டக்கூத்தர்
(B) சடையப்ப வள்ளல்
(C) சீதக்காதி
(D) சந்திரன் சுவர்க்கி
‘கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம்’
(A) சுந்தர காண்டம்
(B) அயோத்திய காண்டம்
(C) ஆரண்ய காண்டம்
(D) யுத்த காண்டம்
பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க:
(A) கம்பர் தேரழுந்தூரில் பிறந்தவர்
(B) கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி
(C) சரசுவதி அந்தாதியை இயற்றியவர் கம்பர்
(D) கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு
கம்பன் சொன்ன வண்ணங்கள் எத்தனை?
(A) 96
(B) 95
(C) 94
(D) 97
உலகம் தோன்றியபோதே தோன்றிய தமிழை அதன் தொன்மை கருதி ‘என்றுமுள தென்தமிழ்’ எனக் கூறியவர்
(A) திருநாவுக்கரசர்
(B) தொல்காப்பியர்
(C) கம்பர்
(D) திருவள்ளுவர்
கீழ்க்காண்பவற்றுள் கம்பர் எழுதாத நூல் எது?
(A) சடகோபரந்தாதி
(B) சரஸ்வதி அந்தாதி
(C) திருக்கை வழக்கம்
(D) தொன்னூல் விளக்கம்
கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டம்
(A) முதற்காண்டம்
(B) ஐந்தாங்காண்டம்
(C) ஏழாங்காண்டம்
(D) மூன்றாம் காண்டம்
‘என்றுமுள தென்தமிழ்’ எனக் குறிப்பிட்டவர் யார்? (3 times Asked)
(A) மாக்ஸ் முல்லர்
(B) கபிலர்
(C) கம்பர்
(D) காளமேகப்புலவர்
“உழவர் ஏரடிக்கும் சிறு கோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்” எனக் கூறியவர்
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) வில்லிப்புத்தூரார்
(D) கம்பர்
கம்பராமாயணத்தில் அமைந்திராத காண்டம்
(A) அயோத்தியா காண்டம்
(B) மதுரைக் காண்டம்
(C) ஆரணிய காண்டம்
(D) யுத்த காண்டம்
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————