இந்தியப் பொருளாதாரத்தின் பலங்கள் மற்றும் பலவீனங்கள்

இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள்

  • உலகின் வலிமையான மற்றும் பெரிய பொருளாதார வரிசையில் இந்தியா 6வது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தின் பலங்கள்

  1. இந்தியா ஒரு கலப்பு பொருளாதாரம்: இதன் பொருள் தனியார் துறையும் பொதுத்துறையும் இணைந்து சீரியமுறையில் செயல்படுவது.
  2. வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது: இந்தியாவில் 60% மக்கள் தங்கள் வாழ்க்கை ஆதாரமாக வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தியாவில் 17% மொத்த உள்நாட்டு உற்பத்தி வேளாண் துறையிலிருந்தே கிடைக்கிறது.
  3. வளர்ந்து வரும் சந்தை
  4. வளர்ந்து வரும் பொருளாதாரம்
    • உலகப் பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஏழாவது இடத்தையும், வாங்கும் சக்தியில் (PPP) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
    • விரைவான பொருளாதார வளர்ச்சியின் விளைவாக இந்தியப் பொருளாதாரம் G20 நாடுகளில் இடம் பெற்றுள்ளது.
  1. வேகமாக வளரும் பொருளாதாரம்: இந்திய பொருளாதாரம் வேகமாக நிலையான வளர்ச்சியினை கொண்டது.
  2. வேகமாக வளரும் பணிகள் துறை: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு பணிகள் துறையின் பங்களிப்பாகும்.
  3. பேரளவு உள்நாட்டு நுகர்ச்சி
  4. நகரப்பகுதிகளின் விரைவான வளர்ச்சி
  5. நிலையான பேரளவு பொருளாதாரம்: பொருளாதார ஆய்வறிக்கை இந்தியப் பொருளாதாரத்தை “நிலைத்த உறுதிவாய்ந்த, சிறந்த எதிர்காலம் கொண்ட பேரியல் பொருளாதாரத்திற்கான சொர்க்கம்” என்று குறிப்பிடுகிறது.
  6. மக்கள் தொகை பகுப்பு: இந்தியா, அதிக அளவு இளைஞர்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தின் பலவீனம்

  1. அதிக மக்கள் தொகை
    • மக்கள் தொகைப் பெருக்கத்தில் இந்தியா, சீனாவிற்கு அடுத்த இரண்டாவது நாடாக உள்ளது.(2011)
    • மக்கள்தொகை அதிகரிப்பு ஒவ்வொரு 1000 பேருக்கும் 7 என்ற வீதத்தில் அதிகரிக்கிறது.
  1. ஏற்றத்தாழ்வு மற்றும் வறுமை
    • பணக்காரர்கள் தொடர்ந்து பணக்காரர்களாகவும், ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவும் நீடிக்கின்றனர்.
  1. அத்தியாவசியப் பண்டங்களின் விலை உயர்வு
  2. உள்கட்டமைப்பு பலவீனம்:
      • மின் ஆற்றல், போக்குவரத்து, பண்டங்கள் பாதுகாப்பு பெட்டகம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்றளவும் பற்றாக்குறையாக உள்ளது,
  1. வேலைவாய்ப்பை உருவாக்க திறனற்ற நிலை
    • இந்தியப் பொருளாதாரம் “வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி” என்ற பண்பைக் கொண்டுள்ளது.
  1. பழமையான தொழில்நுட்பம்
    • வேளாண்மை மற்றும் சிறுதொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப நிலை இன்னும் பழமையானதாகவும், வழக்கொழிந்ததாகவும் உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!