குப்தரின் நிர்வாக முறை

அரசர்

  • அரசர்கள் மகாராஜாதிராஜா, சாம்ராட், சக்ரவர்த்தி, பரமபட்டாரக, பரமேஷ்வர போன்ற பட்டங்களை ஏற்றார்கள்.
  • பரமதைவத (கடவுளின் பரமபக்தன்), பரமபாகவத (வாசுதேவ கிருஷ்ணனின் பரமபக்தன்) போன்ற அடைமொழிகளால் தம்மைக் கடவுளோடும் இணைத்துக் கொண்டனர்.
  • அலகாபாத் கல்வெட்டுகளில் சமுத்திரகுப்தர் புருஷா (அனைவருக்கும் மேலானவர்) என்ற கடவுளுடன் ஒப்பிடப்படுகிறார்.
  • குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர்.
  • அரசர் கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்டார். எனவே அரசர் கடவுளுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவராவார்.

அமைச்சர்கள், அதிகாரிகள்

  • குமாரமாத்யா என்ற சொல் ஆறு வைசாலி முத்திரைகளில் இடம்பெற்றுள்ளது.
  • குமாரமாத்யா என்பது அமாத்யாக்களில் மிக முக்கியமான பதவியாக, அரசகுல இளவரசர்களின் தகுதிக்குச் சமமானதாக இருக்கும் போல் தெரிகிறது.
  • அலகாபாத் பிரசஸ்தியை (மெய்க்கீர்த்தி அல்லது புகழுரைக் கல்வெட்டு) எழுதிய ஹரிசேனர் ஒரு குமாரமாத்யா, சந்திவிக்ரஹிகா, மஹாதண்டநாயகா ஆகிய பட்டங்களைக் கொண்டவராக இருந்துள்ளார்.
  • அவர் மஹாதண்டநாயகா துருவபூதியின் புதல்வர் ஆவார்.

அமைச்சர் குழு

  • மஹாசந்திவிக்ரஹா என்பவர் அமைச்சர்களில் உயர்நிலையில் இருந்துள்ளார்.
  • இவர் அமைதி மற்றும் போருக்கான அமைச்சர்.
  • நீதித்துறை, ராணுவம் ஆகியவற்றின் பொறுப்பு வகித்தவர் தண்டநாயகா அல்லது மஹாதண்டநாயகா என்றழைக்கப்பட்டுள்ளார்.

பேரரசின் பிரிவுகள்

  • குப்தர்களின் பேரரசு தேசம்அல்லதுபுக்தி எனப்படும் மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
  • உபாரிகாக்கள் அரசரால் நேரடியாக நியமிக்கப்பட்டனர்.
  • உபாரிகாக்கள் மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரிகளையும், வாரிய அதிகாரிகளையும் நியமித்தனர்.
  • உபாரிகாக்கள் நிர்வாக அதிகாரத்தோடு, யானைகள், குதிரைகள், வீரர்கள் என்று ராணுவ நிர்வாகத்தையும் கையில் வைத்திருந்தனர்.
  • லோகபாலா என்பது மாநில ஆளுநரைக் குறிப்பிடுவதாகலாம்.
  • குப்தபேரரசின் மாநிலங்கள் விஷ்யபதி என்ற அதிகாரியின் கீழ் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. இவை விஷ்யா என அழைக்கப்பட்டன.
  • தூதகா எனும் ஒற்றர்களை உள்ளடக்கிய வேவு பார்க்கும் அமைப்பும் செயல்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!