கணிதமும், வானவியலும்
- சுழியம் என்ற கருத்தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
- பூமி ஒரு அச்சில் தன்னைத் தானே சுற்றுகிறது என்பதைக் கண்டுபிடித்த முதல் வானவியலாளர் ஆர்யபட்டர்.
- கணிதம், கோணவியல், அல்ஜீப்ரா ஆகியவற்றைப் பேசும் ஆரியபட்டீயம் என்ற நூலில் அவர் எழுதினார்.
- வராகமிகிரரின் (ஆறாம் நூற்றாண்டு) பிருஹத் சம்ஹிதா என்ற நூல் வானவியல், புவியியல், தாவரவியல், இயற்கை வரலாறு ஆகியவற்றிற்கான கலைக்களஞ்சியமாகும்.
- பிரம்மகுப்தர் கணிதம் மற்றும் வானவியலுக்கான முக்கிய நூல்களான பிரம்மஸ்புத –சித்தாந்தா, கண்டகாத்யகா ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
மருத்துவ அறிவியல்
- நவனிதகம் என்ற மருத்துவ நூல் நோய்களுக்கான மருந்துகள், மருந்துகள் தயாரிக்கும் முறை ஆகியவற்றைக் கூறுகிறது.
- பாலகாப்யா எழுதிய ஹஸ்த்யாயுர்வேதா என்ற நூல் விலங்குகளுக்கான மருத்துவ நூலாகும்.
- மருத்துவத் துறையில் புகழ் பெற்ற அறிஞர் தன்வந்திரி ஆவார். அவர் ஆயுர்வேத மருத்துவத்தில் நிபுணராகத் திகழ்ந்தார்.
- சாரக்கர் ஒரு மருத்துவ அறிவியல் அறிஞராவார்.
- சுஸ்ருதர் அறுவைச் சிகிச்சை செய்முறையைப் பற்றி விளக்கிய முதல் இந்தியர் ஆவார்.
குப்தப் பேரரசின் வீழ்ச்சி
- குப்த வம்சத்தின் கடைசி அரசராக அறியப்படுபவர் விஷ்ணுகுப்தர். இவர் பொ.ஆ. 540 முதல் 550 வரை ஆட்சி செய்தார்.
- உள்நாட்டுப் பூசல்களும், அரச குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளும் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாயின.
- ஹூணர் படையெடுப்பால், நாட்டின் மீது குப்தர்களின் பிடி தளர்ந்தது.