குற்றாலக் குறவஞ்சி – திரிகூட ராசப்பக் கவிராயர்
இயற்றமிழின் செழுமையையும் இசைத்தமிழின் இனிமையையும்
நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கே கொண்ட முத்தமிழ்க் காவியம்
சிங்கனுக்கும் சிங்கிக்கும் இடையை நடக்கும் உரையாடல்
நூல்கள் பாடிவை
- வீரர்களை, அரசர்களை, வள்ளல்களை, தனி மனிதர்களைப் சங்க இலக்கியங்கள் பாடின.
- சமய நூல்கள் கடவுளைப் பாடின.
- கடவுளோடு மனிதர்களையும் பாடியது சிற்றிலக்கியங்கள் *
- அவற்றுள் இயற்றதமிழின் செழுமையையும் இசைத்தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கே கொண்டு முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது குற்றாலக் குறவஞ்சி.
குறவஞ்சி
- குறவஞ்சி என்பது ஒரு வகை நாடக (opera) இலக்கிய வடிவமாகும். *
- குறத்திப்பாட்டு என்றும் குறவஞ்சி வழங்கப்படுகின்றது.
- குறவஞ்சி சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.
- பாட்டுடைத் தலைவன் உலா வரக்கண்ட தலைவி, அத்தலைவன் மீது காதல்கொள்ள, குறவர் குல பெண்ணொருத்தி தலைவிக்குக் குறி கூறிப் பரிசில் பெறும் செய்திகளைக் கூறுவதால் குறவஞ்சி என்னும் பெயர் பெற்றது.
- பரிசில் பெற்றுவரும் சிங்கிக்கும் சிங்கனுக்கும் இடையிலான உரையாடல் இடம்பெற்றுள்ள நூல் குறவஞ்சி..
குற்றாலக் குறவஞ்சி
- தமிழ்நாட்டின் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் என்னும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து, அங்குள்ள குற்றாலநாதரைப் பற்றிப் பாடப்ப -து குற்றாலக் குறவஞ்சி.
- இயற்றமிழின் செழுமையை இசைத்தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கேகொண்டு முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது குற்றாலக் குறவஞ்சி.
திரிகூட ராசப்பக் கவிராயர்
- குற்றாலக் குறவஞ்சியை எழுதியவர் திரிகூட ராசப்பக் கவிராயர்
- திரிகூட ராசப்பக் கவிராயரின் ‘கவிதைக் கிரீடம்‘ என்று குற்றாலக் குறவஞ்சி போற்றப்பட்டது ***
- மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார் விருப்பத்திற்கு ஏற்ப பாடி அரங்கேற்றப்பட்டது குற்றாலக் குறவஞ்சி,**
- திரிகூட ராசப்பக் கவிராயர் திருநெல்வேலியில் தோன்றியவர்.
- குற்றால நாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் சைவ சமயக கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார் திரிகூட ராசப்பக் கவிராயர்.
- திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான் என்று சிறப்புப் பட்டப்பெயர் பெறறவர் திரிகூட ராசப்பக் கவிராயர்.*
திரிகூட ராசப்பக் கவிராயர் குற்றாலத்தை பாடி எழுதிய நூல்கள்
- யமக அந்தாதி ** *
- தல புராணம்
- சிலேடை
- பிள்ளத்தமிழ்
- மாலை
குற்றாலக் குறவஞ்சி – திரிகூட ராசப்பக் கவிராயர்
சிங்கனுக்கும் சிங்கிக்கும் உரையாடல்
கண்ணிகள்
சிங்கன் : இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல் எங்கே நடந்தாய் நீ சிங்கி ? (எங்கே)
சிங்கி:கொத்தார் குழலார்க்கு வித்தாரமாகக் குறிசொல்லப் போனனடா சிங்கா! (குறி சொல்ல)
சிங்கன் :பார்க்கில் அதிசயம் தோணுது சொல்லப் பயமா இருக்குதடி சிங்கி! (பயமா)
சிங்கி :ஆர்க்கும் பயமில்லைத் தோணின காரியம் அஞ்சாமல் சொல்லடா சிங்கா! (அஞ்சாமல்)
சிங்கன் :காலுக்கு மேலே பெரிய விரியன் கடித்துக் கிடப்பானேன் சிங்கி? (கடித்து)
சிங்கி: சேலத்து நாட்டில் குறி சொல்லிப் பெற்ற சிலம்பு கிடக்குதடா சிங்கா! (சிலம்பு)
சிங்கன் : சேலத்தார் இட்ட சிலம்புக்கு மேலே திருகு முருகு என்னடி சிங்கி? (திருகு)
சிங்கி:கோலத்து நாட்டார் முறுக்கிட்ட தண்டை கொடுத்த வரிசையடா சிங்கா! (கொடுத்த)
சிங்கன் :நீண்டு குறுகியும் நாங்கூழுப் போல நெளிந்த நெளிவு என்னடி சிங்கி? (நெளிந்த)
சிங்கி:பாண்டியனார் மகள் வேண்டும் குறிக்காகப் பாடகம் இட்டதடா சிங்கா! (பாடகம்)
சிங்கன் :மாண்ட தவளை உன் காலிலே கட்டிய மார்க்கம் அது ஏதடி சிங்கி ? (மார்க்கம்)
சிங்கி :ஆண்டவர் குற்றாலர் சந்நிதிப் பெண்கள் அணிமணிக் கெச்சம் அடா சிங்கா! (அணிமணி)
சிங்கன் :சுண்டு விரலிலே குண்டலப் பூச்சி சுருண்டு கிடப்பானேன் சிங்கி? (சுருண்டு)
சிங்கி :கண்டிய தேசத்தில் பண்டு நான் பெற்ற காலாழி பீலியடா சிங்கா! (காலாழி)
சொல்லும் பொருளும் ***
- கொத்து – பூமாலை
- குழல் – கூந்தல்
- கோலத்து நாட்டார் – கலிங்க நாட்டார்
- விரிசை – சன்மானம்
- நாங்கூழ் – மண் புழு
அணிகலன்கள் ***
காலுக்கு விரியன் – சேலத்து சிலம்பு
சிலம்புக்கு மேலே திருகு முருகு – கோலத்து நாட்டார் தண்டை
நாங்கூழு – பாண்டியனார் பாடகம்
மாண்ட தவளை காலிலே – ஆண்டவர் குற்றாலர் கெச்சம்
சுண்டு விரலிலே குண்டலப் பூச்சி – கண்டிய தேச காலாழி பீலி
தமிழ்
- இயற் தமிழ் – செழுமை
- இசைத் தமிழ் – இனிமை
- நாடகத் தமிழ் – எழில்
முந்தைய ஆண்டு வினாக்கள்
“ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம் ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்”
-இவ்வடி இடம் பெற்றுள்ள நூலின் பெயர் யாது?
(A) தமிழரசி குறவஞ்சி
(B) குற்றாலக் குறவஞ்சி
(C) பெத்தலகேம் குறவஞ்சி
(D) சரபேந்திர பூபாலக் குறவஞ்சி
திருக்குற்றாலக் குறவஞ்சி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I.திருக்குற்றாலக் குறவஞ்சி நூலை இயற்றிய திரிகூடராசப்பக் கவிராயர், ‘மேலகரம்’ என்னும் ஊரில் பிறந்தவர்
II. திருக்குற்றால நாதர் உலா வரும்போது அவரைக் கண்டு ஒரு பெண் அவர்மீது அன்பு கொண்டு நலிவதையும், அவளுக்குக் குறத்தி குறி சொல்வதும், ‘குற்றாலக் குறவஞ்சியின்’ மையக் கதைப்பொருள் ஆகும்
III.குறவஞ்சி தொண்ணூறு வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று
IV. ‘வசந்தவல்லி திருமணம்’ எனவும் இந்நூல் வழங்கப்படுகிறது
(A) I மற்றும் II சரியானவை
(B) III மற்றும் IV சரியானவை
(C) II மற்றும் III சரியானவை
(D) I மற்றும் IV சரியானவை
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————