காவடிச்சிந்து

காவடிச்சிந்து அறிமுகம்

  • தமிழ்நாட்டில் பண்டைக் காலம் முதல் வட்டார வழக்கிலுள்ள நாட்டார் இசை மரபே காவடிச் சிந்து எனலாம்.
  • காவடி எடுததுச் செல்பவர், அதைச் சுமையாக எண்ணாமல் பாடியவாறே செல்வதற்கு வழிநடைப் பாடல்களை இயற்றியுள்ள்னர்.
  • முருகன் ஆலயங்களை நோக்கிச் ஆடல் பாடல்களுடன் செல்லும் பக்தர்களின் வழிநடைப் பாடல் வகைகளிலிருந்து காவடிச் சிந்து என்ற படிவம் தோன்றியது.

காவடிச்சிந்து

  • சென்னிகுளம் அண்ணாமலையார் பாடியது காவடிச்சிந்து
  • அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கததால் விளைந்த சிறந்த சந்த இலக்கியம் சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய காவடிச்சிந்து
  • காவடிச்சிந்து பாடலின் மெட்டுகள் அண்ணாமலையாராலேயே அமைக்கப்பட்டதாகும்.

சென்னிகுளம் அண்ணாமலையார்

  • தமிழில் முதன் முதலில் வண்ணச்சிந்து பாடியதால் ,காவடிச் சிந்தின் தந்தை என சென்னிகுளம் அண்ணாமலையார் அழைக்கப்பட்டார்
  • சென்னிகுளம் அண்ணாமலையார் 18 வயதிலேயே ஊற்று மலைக்குச் சென்றார்.
  • ஊற்று மலை குறுநிலத் தலைவராக இருந்த இருதயாலய மருதப்பத் தேவரின் அரசவைப் புலவராகவும் சென்னிகுளம் அண்ணாமலையார் இருந்தார்.

சென்னிகுளம் அண்ணாமலையார் இயற்றியுள்ள நூல்கள்

  • கோமதி அந்தாதி
  • சங்கரன் கோவில் திரி பந்தாதி
  • கருவை மும்மணிக் கோவை
  • வீரைத் தல புராணம்
  • வீரை நவநீத கிருஷணசாமி பதிகம்
  • காவடிச்சிந்து

 காவடிச்சிந்து – சென்னிகுளம் அண்ணாமலையார்

பாடல்

சென்னிகுள நகர் வாசன், தமிழ் தேறும் அண்ணாமலை தாசன் * *

செப்பும் செகமெச்சிய மதுரக் கவியதனைப் புய

வரையில் புனை தீரன்; அயில் வீரன்

வன்ன மயில் முருகேசன், குற வள்ளி பதம் பணி நேசன்

உரை வரமே தரு கழுகாசல பதி கோயிலின் வளம் நான்

மறவாதே சொல்வன் மாதே!**

 

கோபுரத்துத் தங்கத் தூவி, தேவர் கோபுரத்துக்கப்பால் மேவி

கண்கள் கூசப் பிரகாசத்தொளி மாசற்று விலாசத்தொடு குலவும் புவி பலவும்

நூபுரத்துத்தொனி வெடிக்கும் பத நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் **

அங்கே நுழைவாரிடு முழவோசைகள் திசை மாசுணம் இடியோ என நோக்கும் படி தாக்கும்

சந்நிதியில் துஜஸ்தம்பம், விண்ணில் தாவி வருகின்ற கும்பம் எனும் சல ராசியை ***

வடிவார் பல்கொடி சூடிய முடி மீதிலே தாங்கும்; உயர்ந் தோங்கும்.

உன்னத மாகிய இஞ்சி, பொன்னாட்டு உம்பர் நகருக்கு மிஞ்சி மிக உயர்வானது பெறலால். ***

அதில் அதிசீதள புயல் சாலவும் உறங்கும்; மின்னிக் கறங்கும்

அருணகிரி நாவில் பழக்கம் தரும் அந்தத் திருப்புகழ் முழக்கம்*

பல அடியார் கணம் மொழி போதினில் அமராவதி இமையோர் செவி அடைக்கும், அண்டம் உடைக்கும்.

 

கருணை முருகனைப் போற்றித் தங்கக் காவடி தோளின் மேல் ஏற்றிக் * *

கொழும் கனல் ஏறிய மெழுகாய் வருபவர் ஏவரும்,

இகமே கதி காண்பார், இன்பம் பூண்பார் ***

பாடலின் பொருள்

  • சென்னிகுளம் என்னும் நகரில் வாழ்கின்ற அண்ணாமலை தாசன் ஆகிய நான்
  • பாடிய உலகம் போற்றும் காவடிச்சிந்து என்னும் மதுரமான கவிமாலையைத்
  • தன் மலை போன்ற அகன்ற தோளில் சார்த்திக் கொள்கிறான் முருகன்.
  • அந்தக் கழுகுமலைத் தலைவன் முருகனின் கோவில் வளத்தை நான் சொல்கிறேன் பெண்ணே!
  • கடலில் வாழும் மீன், மகரம் போன்ற உருவ அமைப்புகள் கொண்ட கொடிகள் எல்லாம் சிறக்க, முருகன் கோவில் திகழ்கிறது.
  • காவடி எடுக்கும் அடியார்கள் பாடும் திருபபுகழ் முழக்கமானது.
  • பட்டினத்தில் உள்ள தேவர்களின்
  • அமராவதிப் பட்டினத்தில் உள்ள தேவர்களின் செவியைச் சென்று அடைகிறது.
  • நெஞ்சம் நெகிழ்ந்துருக, தங்கத்தினும் மேலான காவடியைத் தோளில் தூக்கிக் கனலில் உருகிய மெழுகென
  • முருகனை நோக்கி வரும் பக்தர்கள்
  • அருளைப் பெறுவார், இன்பம் அடைவார்.

சொல்லும் பொருளும்

  • ஜகம் -உலகம்
  • வரை – மலை
  • விலாசம் – அழகு
  • நூபுரம் – சிலம்பு
  • த்வஜஸ் தம்பம் – கொடி மரம்
  • இஞ்சி – மதில்
  • புயம் – மேகம்
  • பயம் – தோள்
  • வன்னம் – அழகு
  • கழுகா சலம்  – கழுகு மலை
  • மாசுணம் – பாம்பு
  • சல ராசி – கடலில் வாழும் உயிரினங்கள்
  • உம்பர் – தேவர்
  • கறங்கும – சுழலும்

முந்தைய ஆண்டு வினாக்கள்

‘காவடிச் சிந்தின் தந்தை’ என அழைக்கப்படுபவர் (3 முறை கேட்கப்பட்டுள்ளது)
(A) பாரதியார்
(B) சென்னிகுளம் அண்ணாமலையார்
(C) அருணகிரியார்
(D) விளம்பி நாகனார்

கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க:
(A) பண்டை தமிழகம் சேரர், சோழர் பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப் பெற்றது
(B) நகை, அழுகை, உவகை பெருமிதம் முதலான பல சுவைகள் தோன்றுமாறு பாடப்படும் பாடல்கள் பல்சுவைப் பாடல்களாம்
(C) தேர், யானை குதிரை, காலாள் படைகளின் வலிமை, வீரச் சிறப்புகளைப் போற்றுவது புறப்பாடல்கள்
(D) நாட்டு வளம், செல்வ வளம், செங்கோல் மாண்பு உரைக்கும் அரசு ஆவணமாக, ‘காவடிச் சிந்து’ திகழ்கிறது

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!