திருமலை முருகன் பள்ளு

திருமலை முருகன் பள்ளு – பெரியவன் கவிராயர்

பள்ளு

  • 96 வகையான சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று பள்ளு
  • உழத்திப் பாட்டு எனவும் பள்ளு அழைக்கப்படும். **
  • தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது பள்ளு **
  • பள்ளுச் சிற்றிலக்கியத்தின் உட்கோள் உழவர், உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் நயம்பட வெளிப்படுத்துவதே.
  • ‘நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது’ என்பர். **
  • பள்ளு ஒரு வேளாண்மை இலக்கியம் ஆகும்..
  • வேளாண்மை அரிய பல செய்திகளின் கருவூலமாக விளங்குகிறது பள்ளு.*

 திருமலை முருகன் பள்ளு

  • திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் பெரியவன் கவிராயர்.
  • திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்திற்கு அருகில் உள்ளது பண்புளிப் பட்டணம்.
  • பண்பை என்றும் பண்பொழில் என்றும் பண்புளிப் பட்டணம் அழைக்கப்படும்.
  • பண்புளிப் பட்டணத்தில் உள்ள சிறு குன்றின் பெயர் திருமலை
  • பண்புளிப் பட்டண குன்றின் மேலுள்ள முருகக் கடவுளைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு திருமலை முருகன் பள்ளு பாடப்பட்டுள்ளது.
  • திருமலை முருகன் பள்ளுவில் சிந்து கலிப்பா, கலித்துறை ஆகிய பா வகைகள் விரவி வந்துள்ளன.
  • பள்ளிசை என்றும் திருமலை அதிபர் பள்ளு எனவும் திருமலை முருகன் பள்ளு வழங்கப்படுகிறது.

பெரியவன் கவிராயர்

  • திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் பெரியவன் கவிராயர்.
  • பெரியவன் கவிராயரின் காலம் 18 ஆம் நூற்றாண்டு.

 திருமலை முருகன் பள்ளு -பெரியவன் கவிராயர்

  • வடகரை திருமலைச் சேவகன் முருகனையும் தென்கரை சிவபெருமானாகிய குற்றால நாதரையும் போற்றும் இசை பாடல்
  • வடகரை நாடு திருமலைச் சேவகன் முருகன்

பாடல்

மலரில் ஆரளி இந்துளம் பாடும் மடை இடங்கணி வந்து

உளம் ஆடும்

சலச வாவியில் செங்கயல் பாயும் தரளம் ஈன்ற வெண் சங்கயல் மேயும்

குலமின்னார் மழை பெய்யெனப் பெய்யும் குடங்கை ஏற்பவர் செய்யெனச் செய்யும்

புலவர் போற்றும் திருமலைச் சேவகன் புகழ் வட ஆரி நாடெங்கள் நாடே **

பெரியவன் கவிராயர்

பாடலின் பொருள்

  • வடகரை நாட்டில் மலரில் மொய்க்கும் வண்டுகள் இந்தளம் என்ற பண்ணை ரீங்காரமிட்டுப் பாடும்.
  • வண்டின் இசைகேட்டு வாய்க்காலின் மதகுகளிடையே கட்டப்பட்ட சங்கிலியில் மீனைப் பிடித்து உண்பதற்காக வந்த உள்ளான் பறவை வாலை ஆட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும்.
  • தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும். முத்துக்ளை ஈன்ற வெண்மையான சங்குகள் பரவிக் காணப்படும்.
  • மின்னலையொத்த பெண்கள், பெய் என்றால் மழை பெய்யும் உள்ளங்கை ஏந்தி இரந்து உண்ணும் இயல்புடைய முனிவர்கள் கூறும் வார்த்தைகள் மெய்யாகும்
  • இத்தன்மை கொண்ட திருமலையில் புலவர்கள் போற்றுகின்ற திருமலைச் சேவகன் முருகன் வீற்றிருக்கின்றார்.

தென்கரை நாடு சிவபெருமான் குற்றால நாதர்

பாடல்

வளருங்காவில் முகில்தொகை ஏறும் பொன் மாடம்

எங்கும் அகிற் புகை நாறும்

குளிரும் மஞ்ஞையும் கொண்டலும் காக்கும்

கோல்முறை மன்னர் மண்டலங் காக்கும்

இளமின்னார் பொன்னரங்கில் நடிக்கும் முத்(து) ஏந்தி வாவித் தரங்கம் வெடிக்கும்

அளியுலாம் கொன்றை சூடுங் குற்றாலத் தென் ஐயன் தென் ஆரி நாடெங்கள் நாடே

-பெரியவன் கவிராயர்

பாடலின் பொருள்

  • தென்கரை நாட்டின் நீண்டு வளர்ந்த சோலையில் மேகக் கூட்டங்கள் தங்கிச் செல்லும்.
  • இந்நாட்டில் உள்ள பொன்னால் ஆன மாட மாளிகைகளில்
  • அகில் புகையின் நறுமணம் பரவிச்கொண்டே இருக்கும்.
  •  இம்மாளிகைகளைக் மயில்களும் கார்கால மேகங்களும் சூழ்ந்து காக்கும்.
  •  செங்கோலைக் கொண்ட மன்னர் தென்கரை நாட்டை நீதி தவறாது காவல் காப்பார்
  • இளைய பெண்கள் பொன்னால் ஆன அரங்கில் நடித்து விளையாடி மகிழ்ந்திருப்பர்.
  • இங்குள்ள குளங்களின் அலைகள் முத்துகளை ஏந்தி வரும். அவ்வலைகள் கரைகளில் மோதும் பொழுது முத்துகள் சிதறி வெடிக்கும்.
  • இத்தன்மை கொண்ட குற்றாலத்தில் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலரைச் சூடிய தென்னாடுடைய சிவபெருமான் ஆகிய குற்றால நாதர் வீற்றிருக்கின்றார்.

 சொல்லும் பொருளும்

  • வட ஆரி நாடு – திருமலை
  • ஆரளி – மொய்க்கின்ற வண்டு
  • இடங்கணி – சங்கிலி
  • சலச வாவி – தாமரைத் தடாகம்
  • கா – சோலை
  • மஞ்ஞை – மயில்
  • அளி உலாம் – வண்டு மொய்க்கின்ற
  • தென் ஆரி நாடு – குற்றாலம்
  • இந்துளம் – ஒரு வகைப் பண்
  • உளம் – உள்ளான் பறவை
  • தரளம் – முத்து
  • முகில்தொகை – மேகக் கூட்டம்
  • கொண்டல் – கார் கால மேகம்
  • வாவித் தரங்கம் – குளத்தில் எழுந்த அலை

மாடு வகைகள்

  • செம்மறையான்
  • கருமறையான்
  • காரி
  • மால் காளை
  • மறை காளை
  • தொந்திக் காளை
  • மயிலைக் காளை
  • மேழைக் காளை

 உழவுக் கருவிகள்

  • கொழு
  • நுகம்
  • பூட்டு
  • வள்ளக்கை
  • வடம்
  • கய மரம்
  • கயிறு
  • உழக்கோல்
  • கலப்பை
  • மண் வெட்டி

 நெல் வகைகள்

  • பைங்குழலாள்
  • சீதா போகம்
  • ரங்கஞ் சம்பா
  • மணல் வாரி
  • அதிக் கிராதி
  • முத்து வெள்ளை
  • புழுகு சம்பா
  • சொரி குரம்பை
  • புத்தன் வாரி
  • சிறை மீட்டான்
  • கருங் சூரை
  • பூம் பாளை
  • குற்றாலன்
  • பாற் கடுக்கன்
  • கற்பூரப் பாளை
  • காடை கழுத்தன்
  • மிளகு சம்பா
  • பனை முகத்தன்

கண்காணம் கண்காணி

  • கண்காணம் (கங்காணம்) என்பது பயிர்த்தொழிலில் கையாளப்படும் ஒரு சொல்
  • கண்காணம் என்பதன் பொருள், நாள்தோறும் வயலில் நெல் அறுவடை செய்து களத்தில் ஒப்படி செய்யப்படும் நெல் அளவு என்பதாகும்.
  • கண்காணி பேச்சு வழக்கில் கங்காணி என்று பயன்படுத்தப்படுகிறது.
  • கண்காணி என்பது இந்த ஒப்படியை மேற்பார்வை செய்பவரைக் குறிக்கும்.

முந்தைய ஆண்டு வினாக்கள்

திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் குறிப்பிடுக
(A) திரிகூடராசப்ப கவிராயர்
(B) அழகிய பெரியவன்
(C) பெரியவன் கவிராயர்
(D) இவர்களில் யாருமிலர்

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!