பசுவய்யா (சுந்தர ராமசாமி)
- பசுவய்யா (சுந்தர ராமசாமி) நாகர்கோவில் ஊரைச் சேர்ந்தவர்.
- பசுவய்யா என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியவர் சுந்தர ராமசாமி.
பசுவய்யா (சுந்தர ராமசாமி) எழுதியுள்ள சிறுகதைகள்
- ரத்னாபாயின் ஆங்கிலம்
- காகங்கள்
பசுவய்யா (சுந்தர ராமசாமி) எழுதியுள்ள புதினங்கள்
- ஜே.ஜே. சில குறிப்புகள்
- ஒரு புளிய மரத்தின கதை
- குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
பசுவய்யா (சுந்தர ராமசாமி) மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த புதினங்கள்
- தோட்டியின் மகன்
- செம்மீன்
பசுவய்யா (சுந்தர ராமசாமி) எழுதிய காற்றில் கலந்த பேரோசை (கம்யூனிஸ்ட் தோழர் ஜீவா) கட்டுரை 1963ல் தாமரை இதழில் ஜீவா பற்றிய சிறப்பு மலரில் வெளியானது.
- நவீனத் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர் பசுவய்யா (சுந்தர ராமசாமி).
காற்றில் கலந்த பேரோசை (கம்யூனிஸ்ட் தோழர் ஜீவா)
பசுவய்யா (சுந்தர ராமசாமி)
ஜீவா
- மேடையில் வாழ்ந்த மனிதர் என்று ஜீவா போற்றப்படுகிறார்.
- ஜீவா அவர்களின் இயற்பெயர் பெ. ஜீவானந்தம்.
- தொடக்கத்தில் காந்தியவாதியாகவும் பிறகு சுயமரியாதை இயக்கப் போராளியாகவும் பொதுவுடமை இயக்கத் தலைவராகவும் செயல்பட்டவர் ஜீவா.
- ஜனப்பிரளயத்தின் முன்னால் நின்று சங்க நாதம் எழுப்பிக் கொண்டிருக்கும்போதே. குழுவிற்குத் தலைவராக இருந்தவர் ஜீவா.
- சிறந்த தமிழ்ப் பேச்சாளர், எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்தவர்.
- ஜீவா 18 ஜனவரி 1963 ம் தேதி மறைந்தார்.
- அவரை அறிஞர் என்கிறோம், கற்றுக்கொடுக்க யாருமில்லை. பழந்தமிழ் இலக்கியத்தை யாரும் அவர் காதில் ஓதவில்லை.
- சொரிமுத்துவுக்கும் தலைவர் ஜீவாவுக்குமுள்ள இடைவெளி கொஞ்சம் தூரமில்லை.
சமூக நலனுக்கான முதல் நிகழ்வு – திருவாங்கூரில் வெள்ளப் பெருக்கு
- திருவாங்கூர் நாஞ்சில் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள தோவாளை என்னும் இடத்திற்கு வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட துன்பத்தைத் துடைக்கப் நிதி திரட்டிய பள்ளி மாணவர் குழுவுக்கு தலைவராக இருந்தவர் ஜீவா.
- ஜீவா பள்ளி இறுதிப்படிப்புப் படித்துக்கொண்டிருந்த போதே மாணவர் குழுவிற்குத் தலைவராக இருந்தார்.
- அரசியல் சிந்தனையிலும் பொதுவுடைமைச் சிந்தனையிலும் கூர்வாளாய் மெருகேற்றிக்கொண்ட ஜீவா, சமூக நலனுக்காகத் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட முதல் நிகழ்வு அது.
நெஞ்சோடு வளர்ந்த கனவு
- தமக்கென ஒரு தத்துவத்தைச் சிருஷ்டித்துக்கொண்டவர் அல்லர் ஜீவா.
- அவர், தான் நம்பிய தத்துவத்தை, அச்சில் உயிரிழந்து கிடக்கும் அதன் சித்தாந்தக் கருத்துகளைத் தமது அரிய திறமையால். கலை நோக்கால், கற்பனையால், உயிர்பெறச் செய்து, மனிதன் முன் படைத்தவர்.
- மின்சக்திக்கு ஒளியுருவம் கொடுத்தவர் அவர்.
கொள்கையும் நம்பிக்கையும்
- ‘மனிதச் சிந்தனையே. கற்பனைக்கும் எட்டாத பேராற்றலே. நீ சிந்தித்தவற்றில் சிறந்தவற்றை என்னிடம் ஒரே ஒருமுறை கூறு.
- அதனை நான் எட்டுத் திசையிலும் பரப்பி மனித ஜாதியை நீ சொன்ன இடத்திற்கு அழைத்து வருகிறேன். சந்தேகப்படாதே. செய்துகாட்டுகிறேன்.
- என்னைப் பயன்படுத்திக்கொள். முடிந்த மட்டும் என்னைப் பயன்படுத்திக்கொள். கைமாறு வேண்டாம்.
- என்னை நீ பயன்படுத்திக்கொள்வதே நீ எனக்குத் தரும் கைமாறு’. இதுவே அவருடைய பிரார்த்தனை.
- இந்த அடிப்படையான மனோபாவத்திலிருந்து பிறந்தது அவருடைய கொள்கை, அவருடைய நம்பிக்கை.
- நான் ஒரு பள்ளி மாணவன், படித்துக் கொண்டிருக்கிறேனே, படித்துக் கொண்டே இருப்பேன் என்ற எண்ணம் எப்பொதும் ஜீவா மனசில் பசுமையாக இருந்தது.
பேச்சு நடை
- பேச்சுக்கலை. அவர் பெற்ற வரம் என்று தான் சொல்ல வேண்டும்.
- அதோடு அவர் பேசுகையில் வெளிப்படும் உத்திகளும், பேச்சை அமைக்கும் அழகும் வெகு நூதனமாகவும் நளினமாகவும் இருக்கும்.
- பேச்சுக்கலையை விளக்கும் பாடப்புத்தகங்கள் எத்தனையோ விதிகள் கூறும். ஜீவா அவற்றைக் காலடியில் போட்டு மிதித்தவர்.
- அவருடைய பாணி இரவல் பாணி அல்ல, கற்று அறிந்ததும் அல்ல.
இரண்டு கைப்பிடி விசயம்
- விசயத்தை வண்டி வண்டியாகக் குவித்துச் சின்ன மூளைகளைக் குழப்பி வாதனைக்கு உள்ளாக்குவது பல பிரசங்கிகளுக்குப் பொழுதுபோக்கு. ஜீவா இதற்கு எதிரி.
- ஒரு சில கருத்துகளை விரிவாகச் சொல்லிப் புரியவைத்துவிட்டால் போதும் என்பதே அவருடைய எண்ணம்.
- வாண வேடிக்கைக்காரன் நாழிக்குள் திணிக்கும் மருந்து போல் இரண்டு கைப்பிடி விசயம் தான் எடுத்துக்கொள்வார்.
- மேடை மீது ஏறி அதற்கு நெருப்பு வைத்ததும் அதிலிருந்து வர்ண ஜாலங்கள் தோன்றும். பச்சையும் சிவப்பும் மஞ்சளும் உதிரும், குடை குடையாய் இறங்கி வரும். மாலை மாலையாய் இறங்கி வரும்.