நந்திக் கலம்பகம் – 3ம் நந்தி வர்மனின் வீரச்சிறப்பு
கலம்பகம்
- கலம்பகம் என்பது 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
- பல்வேறு வகையான உறுப்புகள் இந்த இலக்கிய வகையில் அகத்தே(உள்ளே) கலந்து வருவதால் கலம்பகம் என்று அழைக்கப்படுகின்றது **
- கலம்பகம் என்பதற்குக் கலவை என்ற பொருளும் உண்டு **
- (பதினெட்டு) 18 உறுப்புகளைக் கொண்டதால் கலம்பகம் என்னும் பெயர் பெற்றது **
கலம் + பகம் – கலம்பகம்
- கலம்பக உறுப்புகள் – 18 (பதினெட்டு )
- கலம் – 12 (பன்னிரண்டு)
- பகம் – 6 (ஆறு)
நந்திக்கலம்பகம்
- தமிழில் முதல் கலம்பக நூல் நந்திக்கலம்பகம் ஆகும். ***
- கலம்பக இலக்கியங்களில் ஒன்று நந்திக்கலம்பகம்
- நந்திக்கலம்பகம் காஞ்சி பல்லவ மன்னன் எறிந்த (மூன்றாம்) 3ம் நந்திவர்மன் குறித்து பாடப்பட்டுள்ளது.
- (மூன்றாம்) 3ம் நந்தி வர்மனின் காலம் மற்றும் நந்திக் கலம்பகத்தின் காலம் கிபி 9 ஆம் நூற்றாண்டு (கிபி-825-850) ஆகும்.
- நந்திக் கலம்பகம் ஆசிரியர் ஊரும் பெயரும் அறியப் பெறவில்லை.
பாடல்
திருவின் செம்மையும் நிலமகள் உரிமையும் பொது இன்றி ஆண்ட பொலன் பூண் பல்லவ! *
தோள் துணை ஆக மா வெள்ளாற்று மேவலர்க் கடந்த அண்ணால்! நந்தி*
நின் திருவரு நெடுங்கண் சிவக்கும் ஆகில் செருநர் சேரும் பதி சிவகும்மே
நிறம் கிளர் புருவம் துடிக்கில் நின் கழல் இறைஞ்சா மன்னர்க்கு இடம் துடிக்குமே
மையில் வாள் உறை கழிக்கும் ஆகில் அடங்கார் பெண்டிர் *
கடுவாய் போல் வளை அதிர நின்னொடு மன்னர் மனம் துடிக்கும்மே மறுவா
மாமத யானை பண்ணின் உதிரம் மன்னு நின் எதிர் மலைந்தோர்க்கே *
பாடலின் பொருள்
- திருமகளின் செழுமையும் நிலமகளின் உரிமைஅயும் ஒன்றாகக் கொண்டு ஆட்சி புரியும் அணிகள் அணிந்த பல்லவ மன்னனே.
- உன்னுடைய தோள் வலிமையை மட்டுமே துணையாகக் கொண்டு வெள்ளாறு என்னுமிடத்தில் நடைப்பெற்ற போரில் பகைவர்களை அழித்து வெற்றி பெற்ற நந்திவர்மனே,
- உன் அழகிய நீண்ட கண்கள் சிவந்தால் பகைவர் நாடுகள் குருதியினாலும் தீயினாலும் சிவக்கும்.
- உன் புருவம் துடித்தால் உன் பாதங்களை வணங்காத பகைவரின் இடப்பாகம் அபசகுனத்தை உணர்த்த துடிக்கும்.
- உன் வாள் உறையிலிருந்து வெளிப்பட்டால் உன் வெற்றியைப் பறை சாற்ற முரசொலிக்கும்.
- அவ்வொலி பகைவரின் பெண்கள் அணிந்துள்ள வளையல் உடைக்கும் ஒலியை ஒத்திருக்கும்.
- மதயானையின் மீதமர்ந்து போருக்குக் கிளம்பினால் பகைவர்களுக்குக் குருதி கொப்புளிக்கும்.
முந்தைய ஆண்டு வினாக்கள்
நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் பெயர் (2 முறை கேட்கப்பட்டுள்ளது)
(A) நந்திவர்மன்
(B) ஜெயங்கொண்டார்
(C) குமரகுருபரர்
(D) பெயர் தெரியவில்லை
நந்திக்கலம்பகம் யார் மீது பாடப் பெற்றது
(A) பாண்டிய மன்னன்
(B) குலசேகர ஆழ்வார்
(C) மூன்றாம் நந்திவர்மன்
(D) பல்லவ மன்ன்ன்
கூற்று: 1 தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் நந்திக்கலம்பகம்
கூற்று:2 நந்திக்கலம்பகத்தை இயற்றியவர் நந்திவர்மன்
(A) கூற்று இரண்டும் சரி
(B) கூற்று 1 மட்டும் சரி
(C) கூற்று 2 மட்டும் சரி
(D) கூற்று இரண்டும் தவறு
மூன்றாம் நந்திவர்மன் எந்நூலின் பாட்டுடைத் தலைவன்?
(A) உலா
(B) அந்தாதி
(C) கலம்பகம்
(D) பரணி
“நிதிதரு கவிகையும் நிலமகள் உரிமையும் இவையிவை யுடை நந்தி” -இத்தொடரில் ‘நந்தி’ என்ற சொல் குறிப்பிடும் சான்றோர் யார்?
(A) நந்தீஸ்வரன்
(B) நந்திவர்மன்
(C) நந்திதெய்வம்
(D) நந்தியின் பக்தன்
“மதியிலி அரசர்நின் மலரடி பணிகிலர் வானகம் ஆள்வாரே” – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
(A) நற்றிணை
(B) அகநானூறு
(C) புறநானூறு
(D) நந்திக் கலம்பகம்
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————