மழைச்சோறு

மழைச்சோறு அ. கௌரன்

கொங்கு நாட்டு மழைச்சோற்று வழிபாடு

மழை பொய்ததால் பசியும் பஞ்சமும் தலை விரித்தாடியதால் மழை வேண்டி வழிபாட்டு பாடல்

கொங்கு நாட்டு மழைச்சோற்று வழிபாடு -அ. கௌரன்

  • பழந்தமிழர் வழுபாட்டு மரபுகள் என்னும் நூலை அ. கௌரன் பதிபித்துள்ளார்.
  • கொங்கு நாட்டு மழைச்சோற்று வழிபாடு கட்டுரையை அ. கௌரன் எழுதியுள்ளார்.
  • பழந்தமிழர் வழுபாட்டு மரபுகள் என்னும் நூலில் கொங்கு நாட்டு மழைச்சோற்று வழிபாடு கட்டுரையில் இருந்து இப்பாடல் எடுக்கப்பட்டுள்ளது.

வழிபாடு பாட்டு – மழைச்சோற்று நோன்பு

  • சிற்றூர் மக்கள் மழை பெய்யாமல் ஊரில் பஞ்சம் ஏற்படும் காலங்களில், ஒவ்வொரு வீடாகச் சென்று உப்பில்லாதச் சோற்றை ஒரு பானையில் வாங்கி ஊர்ப் பொது இடத்தில் சேர்த்து அனைவரும் பகிர்ந்து உண்பர்
  • கொடிய பஞ்சத்தைக் காட்டும் அடையாளமாக நிகழும் இதனைக் கொண்டு வானம் மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்நிகழ்வே மழைச்சோற்று நோன்பு என்பர்.

பாடலின் பின்னனி

  • மழை பொய்த்ததால் மக்கள் வருந்திப் பாடுகின்றனர்.
  • இவ்வாறு மூன்று அல்லது ஐந்து நாள்க பாடி வழிபாடு செய்கின்றனர். அதன் பிறகும் மனழ பெய்யாததால் காட்டிற்குச் செல்ல முடிவெடுக்கின்றனர்
  • இவ்வாறு பாடிக் கொண்டே சோறு வாங்கிய பானை ,அகப்பை, பழைய முறம் போன்றவற்றைத் தலையில் வைத்தவாறு ஊரை விட்டு வெளியேற முனைகின்றனர். அப்பொழுது மனழ பெய்யத் தொடங்குகிறது.

மழை பொய்த்ததால் மக்கள் வருந்திப் பாடுவது

வாளியிலே மாக்கரைச்சு வாசலெல்லாம் கோலம் போட்டு கோலம் கரையவில்லை கொள்ளை மழை பேயவில்லை

பானையிலே மாக்கரைச்சு பாதையெலாம் கோலம் போட்டு கோலங் கரையவில்லை கொள்ளை மழை பேயவில்லை

கல்லு இல்லாக் காட்டில தான் கடலைச் செடி போட்டு வச்சோம் கடலைச் செடி வாட வாட ஒரு கனத்த மழை பேயவில்லை

முள்ளு இல்லாக் காட்டுல தான் முருங்கைச் செடி நட்டு வச்சோம் முருங்கைச் செடி வாட வாட ஒரு முத்துமழை பேயவில்லை

கருவேலங் காட்டுல் தான் கனமனழயும் இல்லாமே கருவேலும் பூக்கலையை கமகமன்னும் மணக்கலையே

காட்டுமல்லி வெலியிலே கனமனழயும் இல்லாமே காட்டு மல்லியும் பூக்கலையை காததூரம் மணக்கலையே

மானத்தை நம்பி நாங்க மக்களைத் தான் பெற்றெடுத்தோம் மானம் செய்த பாவமுங்க மக்கள் பசி தீரலையே

கலப்பைப் பிடிக்கும் தம்பி கை சோர்ந்து நிக்குதம்மா! ஏற்றம் இறைக்கும் தம்பி ஏங்கி மனம் தவிக்குதம்மா!

காட்டிற்குச் செல்ல முடிவெடுக்கின்றனர்

கண்மணியே பெண்டுகளே கனத்த மழை பெய்யவில்லை கதறி அழுது விட்டோம் கடிமழையும் பெய்யவில்லை

மண்ணு வறண்டும் நம் மாரியாத்தா இரங்கலையே வாடிகளா பெண்களே நாம் வனவாசம் சென்றிடுவோம்

மனழ  பெய்யத் தொடங்குகிறது

பேயுதைய்யா  பேயுது பேய்மழையும்  பேயுது ஊசி போலக் காலிறங்கி உலகமெங்கும் பேயுது

சிட்டுப் போல மின்னி மின்னி சீமையெங்கும் பேயுது சீமையெங்கும் பேஞ்ச மழை செல்ல மழை பேயுது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!