நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

  • காந்தியடிகளின் கொள்கையால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் காந்தியக்கவிஞர் என்று நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் அழைக்கப்படுகிறார்.
  • தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் நாமக்கல் கவிஞர்

கவிஞர் வெ. இராமலிங்கனார் எழுதியுள்ள நூல்கள்

  • என் கதை
  • சங்கொலி
  • மலைக்கள்ளன்
  • நாமக்கல் கவிஞர் பாடல்கள்
  • தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்.

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனாரின் விடுதலை எழுச்சிப்பாடல்

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது **

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!… (கத்தியின்றி…)

கண்டதில்லை கேட்டதில்லை சண்டையிந்த மாதிரி

பண்டு செய்த புண்ணியந்தான் பலித்ததே நாம் பார்த்திட!… (கத்தியின்றி…) **

எங்கள் தமிழ்

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

  • காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்று, என்றும் இளமையோடு திகழும் தமிழின் சிறப்பை கூறும் பாடல்.
  • நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது

கவிதை

அருள் நெறி அறிவைத் தரலாகும் அதுவே தமிழன் குரலாகும் ***

பொருள் பெற யாரையும் புகழாது போற்றாதாரையும் இகழாது (தமிழ்மொழி) ***

கொல்லா விரதம் குறியாகக் கொள்கை பொய்யா நெறியாக எல்லா மனிதரும் இன்புறவே என்றும் இசைந்திடும் அன்பறமே (தமிழ்மொழி) * **

அன்பும் அறமும் ஊக்கிவிடும் அச்சம் என்பதைப் போக்கிவிடும் (தமிழ்மொழி) * * *

இன்பம் பொழிகிற வானொலியாம் எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்

சொல்லும் பொருளும்

  • விரதம்நோன்பு
  • குறிகுறிக்கோள்
  • ஊக்கிவிடும்ஊக்கப்படுத்தும்
  • பொழிகிறதருகின்ற

தமிழ் மொழி

  • உலக மொழிகளில் தொன்மையானது நம் தமிழ்மொழி.
  • தமிழ்மொழி மென்மையும் இனிமையும் வளமையும் உடையது.
  • வாழ்வுக்குத் தேவையான அன்பையும் அறத்தையும் கூறுவது தமிழ்மொழி.

முந்தைய ஆண்டு வினாக்கள்

நாமக்கல் கவிஞருக்கு “பத்மபூஷண் விருது வழங்கிச் சிறப்பித்தது யார்?
(A) நடுவணரசு
(B) மாநில அரசு
(C) ஆங்கில அரசு
(D) பிரெஞ்சு அரசு

“அயலார் தமக்கும் அன்பே செய்யும் நாணம் கெடாமல் நட்ட கொண்டாடும்” பெண்மையை இப்படிப் புகழ்ந்தவர்
(A) நாமக்கல் கவிஞர்
(B) சவிமணி
(C) பாரதிதாசன்
(D) வைரமுத்து

உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்கள் வழிநடைப் பாடலாக பாடக்கூடிய “கத்தியின்றி ரத்தமின்றி யுத்த மொன்று வருகுது” என்று வழிநடைப் பாடலை இயற்றியவர்
(A) மகாகவி பாரதியார்
(B) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
(C) அ. வரதநஞ்சையப்ப பிள்ளை
(D) புரட்சி கவிஞர் பாரதிதாசனார்

கீழ்க்கண்டவற்றுள் நாமக்கல் கவிஞரின் கவிதைத் தொகுப்புகளை மட்டும் தேர்வு செய்க.
(A) திருமலர், இசைமலர், சமுதாய மலர், பல்சுவை மலர்
(B) பாரதகீதம், கவிக்கனவுகள், அருட்செல்வம், புதுயுகப்பாட்டு
(C) தமிழச்சி, கொடிமுல்லை, எழிலோவியம், இன்ப இலக்கியம்
(D) பூத்ததுமானுடம், வீறுகள் ஆயிரம், சிரிப்பின் நிழல், தமிழ்ச்சிட்டு

நாமக்கல் கவிஞரின் படைப்புகளின் எண்ணிக்கையை பொருத்துக
(a) இசை நாவல்கள் 1. நான்கு
(b) புதினங்கள் 2. பத்து
(c) கவிதைத் தொகுப்புகள் 3. மூன்று
(d) மொழி பெயர்ப்புகள் 4. ஐந்து
(a) (b) (c) (d)
(A) 2 4 1 3
(B) 3 4 2 1
(C) 2 1 3 4
(D) 3 2 4 1

தமிழக மக்களால் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுபவர்
(A) திரு.வி.க
(B) வெ.இராமலிங்கனார்.
(C) பாரதிதாசன்
(D) வே. இராமசாமி

தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?
(A) கவிஞர் முத்துலிங்கம்
(B) கவியரசர் கண்ணதாசன்
(C) கவிஞர் வெ. இராமலிங்கனார்.
(D) கவிஞர் பாரதிதாசன்
“பெண்மைக்குப் பன்முகங்கள் உண்டு” எனக் கூறியவர்
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) வெ. இராமலிங்கனார்
(D) சுரதா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!