பாரதிதாசன்

  • பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.
  • பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.
  • பாவேந்தர் என்றும் பாரதிதாசன் சிறப்பிக்கப்படுகிறார்.
  • பாரதிதாசன் குயில்என்னும் இலக்கிய இதழை நடத்தியுள்ளார்.
  • பாரதிதாசன் எழுதிய பிசிராந்தையார் சாகித்திய அகாதமி
  • நாடகத்துக்குச்விருது வழங்கப்பட்டது.
  • வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயேஎன பாரதிதாசனின் தமிழ் வாழ்த்துப் பாடலைப் தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக புதுவை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
  • பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் நலச் சட்டத்தைத் தமிழ் வடிவில் தந்தவர் பாரதிதாசன். தமிழக அரசு பாரதிதாசன் பெயரில் திருச்சியில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.

பாரதிதாசன் எழுதியுள்ள நூல்கள்

  • அழகின் சிரிப்பு
  • இசையமுது
  • பாண்டியன் பரிசு
  • இருண்ட வீடு
  • தமிழியக்கம்
  • குடும்ப விளக்கு
  • சேர தாண்டவம்
  • கண்ணகி புரட்சிக் காப்பியம்

 

  • மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் ஆகியவற்றை பற்றித் தம் பாடல்களில் உரக்க வெளிப்படுத்தியமையால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பாரதிதாசன் அழைக்கப்பட்டார்.
  • தம் கவிதைகளில் பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளதால் புரட்சிக்கவி என்று பாரதிதாசன் போற்றப்படுகிறார்.
  • கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதிதாசன்.
  • கவிதை, கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்தில் வல்லவர் பாரதிதாசன். பாரதிதாசன் இயற்றிய கவிதைகள் அனைத்தும் பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

குடும்ப விளக்கு – பாரதிதாசன்

  • (இரண்டாம்) 2ம் பகுதியில், விருந்தோம்பல் தலைப்பிலுள்ள தலைவியின் பேச்சில் இடம்பெற்றுள்ள பெண் கல்வி பற்றி பேசும் கவிதைகள்.

மறுமலர்ச்சி இலக்கியங்கள்

  • புதுமைக் கருத்துகளை இயம்பும் வகையில் (இருபதாம்) 20ம் நூற்றாண்டில் எழுந்தவையே மறுமலர்ச்சி இலக்கியங்கள்.

பெண்கள் விடுதலை பற்றி புரட்சி கவிஞர்கள்

  • பட்டங்கள் ஆள்வதும் பட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் – பாரதி பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது-பாவேந்தர் பாரதிதாசன்
  • மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

குடும்ப விளக்கு

  • இயற்கையைப் போற்றுதல், தமிழுணர்ச்சி ஊட்டுதல், பகுத்தறிவு பரப்புதல், பொதுவுடைமை பேசுதல், விடுதலைக்குத் தூண்டுதல், பெண் கல்வி பெறுதல் போன்ற பாடுபொருள்களில் தோன்றிய இலக்கியம் பாவேந்தர் பாரதிதாசனின் குடும்ப விளக்கு.
  • குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை குடும்ப விளக்கு, உணர்த்துகிறது.
  • கற்ற பெண்ணின் குடும்பம் பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக் குடும்ப விளக்கு காட்டுகிறது.
  • குடும்பம் தொடங்கி உலகினைப் பேணுதல் வரை தன் பணிகளைச் சிறப்பாகச் செய்யும் பெண்ணுக்குக் முதன்மையானதும் இன்றியமையாததும் கல்வி ஆகும் என்று குடும்ப விளக்கு கூறுகிறது.
  • குடும்ப விளக்கு ஐந்து 5 பகுதிகளாக பகுக்கப்பட்டுள்ளது.
  • குடும்ப விளக்கு நூலில் (இரண்டாம்) 2ம் பகுதியில், விருந்தோம்பல் தலைப்பிலுள்ள தலைவியின் பேச்சில் இடம்பெற்றுள்ள கவிதைகள் பாடப்பகுதியாக உள்ளன.

குடும்ப விளக்கு கவிதை

பெண் கல்வி

  • கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம் அந்நிலத்தில் புல் விளைந்திடலாம் நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை ** 
  • கல்வியை உடைய பெண்கள் திருந்திய கழனி அங்கே நல்லறிவு உடைய மக்கள் விளைவது நவிலவோ நான்! (பாரதிதாசன்) **

ஆண் பெண் சமம்

  • வானூர்தி செலுத்தல் வைய மாக்கடல் முழுதுமளத்தல் ஆன எச்செயலும் ஆண் பெண் அனைவர்க்கும் பொதுவே!
  • இன்று நானிலம் ஆடவர்கள் ஆணையால் நலிவு அடைந்து போனதால் பெண்களுக்கு விடுதலை போனது அன்றோ! **
  • இந்நாளில் பெண்கட்கு எல்லாம் ஏற்பட்ட பணியை நன்கு பொன்னே போல் ஒருகையாலும் விடுதலை பூணும் செய்கை இன்னொரு மலர்க்கை யாலும் இயற்றுக! கல்வி இல்லா மின்னாளை வாழ்வில் என்றும் மின்னாள் என்றே உரைப்பேன்! (பாரதிதாசன்) **

பெண்கள் உணவு சமைப்பது

சமைப்பதும் வீட்டு வேலை சலிப்பின்றிச் செயலும் பெண்கள் தமக்கே ஆம் என்று கூறல் சரியில்லை, ஆடவர்கள் நமக்கும் அப்பணிகள் ஏற்கும் என்றெண்ணும் நன்னாள் காண்போம்!

சமைப்பது தாழ்வா? இன்பம் சமைக்கின்றார் சமையல் செய்வார்! **

உணவினை ஆக்கல் மக்கட்கு! உயிர் ஆக்கல் அன்றோ? **

வாழ்வு பணத்தினால் அன்று! வில்வாள் படையினால் காண்பதன்று! * * தணலினை அடுப்பில் இட்டுத் தாழியில் சுவையை இட்டே அணித்து இருந்திட்டார்

உள்ளத் (து) அன்பிட்ட உணவால் வாழ்வோம் ! **

சமைப்பது பெண்களுக்குத் தவிர்க்க ஒணாக் கடமை என்றும் சமைத்திடும் தொழிலோ, நல்ல தாய்மார்க்கே தக்கது என்றும் தமிழ்த் திருநாடு தன்னில் இருக்குமோர் சட்டந் தன்னை இமைப்போதில் நீக்க வேண்டில் பெண் கல்வி வேண்டும் யாண்டும்! **

-பாவேந்தர் பாரதிதாசன்

சொல்லும் பொருளும்

  • களர் நிலம்பண்படாத நிலம்
  • நவிலல் – சொல்லல்
  • வையம்உலகம்
  • மாக் கடல்பெரிய கடல்
  • இயற்றுக – செய்க
  • மின்னாள் – ஒளிர மாட்டாள்
  • மின்னாளைமின்னலைப் போன்றவளை
  • தணல்நெருப்பு
  • தாழி – சமைக்கும் கலன்
  • யாண்டும் – எப்பொழுதும்
  • அணித்துஅருகில்
  • தவிர்க்க ஒணா- தவிர்க்க இயலாத

பாடலின் பொருள்

  • கல்வியறிவு இல்லாத பெண்கள் பண்படாத நிலத்தைப் போன்றவர்கள். அந்நிலத்தில் புல் முதலானவை தான் விளையலாம். நல்ல பயிர் விளையாது.
  • அது போல கல்வி அறிவிலாத பெண்கள் வாயிலாக அறிவுடைய மக்கள் உருவாகமாட்டார்கள். கல்வியைக் கற்ற பெண்கள் பண்பட்ட நன்செய் நிலத்தினைப் போன்றவர்கள். அவர்கள் மூலம் சிறந்த அறிவுடைய மக்கள் உருவாகின்றனர் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ?
  • வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல் போன்ற எந்தச் செயலும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானவை.
  • இன்று உலகமானது ஆண்களின் கட்டுப்பாட்டில் நலிந்து போனதால் தான் பெண்களுக்கு விடுதலை பறிபோனது.
  • இன்று பெண்களுக்கென உள்ள வேலைகளையும் அவர்களின் விடுதலைக்கான செயலையும் பெண்களே செய்தல் வேண்டும்.
  • மின்னல் போல் ஒளிரும் இயல்புடையவள் பெண், ஆனால் கல்வியறிவு இல்லாத பெண் தன் வாழ்வில் என்றும் ஒளிரமாட்டாள் என்றே நான் சொல்வேன்
  • சமைப்பது, வீட்டு வேலைகளைச் சலிப்பில்லாமல் செய்வது போன்றவை பெண்களுக்கே
  • உரியவை என்று கூறுவது பொருத்தமற்றது. அவை நமக்கும் உரியவை என்று ஆண்கள் ஏற்றுக்கொள்ளும் எண்ணம் வரவேண்டும். அந்த நன்னாளைக் காண்போம்.
  • சமைப்பது தாழ்வென எண்ணலாமா? சமைப்பவர் உணவை மட்டும் சமைப்பதில்லை. அதற்கும் மேலாக இன்பத்தையும் படைக்கின்றார்.
  • உணவைச் சமைத்துத் தருவது என்பது உயிரை உருவாக்குவது போன்றதாகும்.
  • வாழ்க்கை” என்பது பொருட் செல்வத்தாலோ வீரத்தாலோ அமைவதன்று.
  • அடுப்பில் நெருப்பு மூட்டி சமைக்கும் கலத்தில் சுவையை இட்டு, அருகில் இருந்து உள்ளத்து அன்போடு உணவு பரிமாறுதலில் தான் வாழ்வு நலம் பெறுகிறது.

சமைக்கும் பணி, பெண்களுக்குத் தவிர்க்க முடியாத கடமை எனவும் அப்பணி நல்ல தாய்மார்களுக்கே உரியது எனவும் தமிழ்த்திரு நாட்டில் இருக்கின்ற வழக்கத்தினைக் கண் இமைக்கும் நேரத்தில் நீக்க வேண்டுமாயின் பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும்.

முந்தைய ஆண்டு வினாக்கள்

“இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” இத்தொடரைப் பாடிய கவிஞர் யார்?
(A) பாரதி
(B) தாரா பாரதி
(C) சுத்தானந்த பாரதி
(D) பாரதிதாசன்

“உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” என்ற கொள்கையை உயிர்மூச்சாய்ப் பெற்றவர்-யார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) சுரதா
(D) கவிமணி

தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை இது யார் கூற்று?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) கண்ணதாசன்
(D) வாணிதாசன்

“இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே”
– இது யாருடைய பாராட்டுரை
(A) பாரதிதாசன்
(B) பாரதியார்
(C) நாமக்கல் கவிஞர்
(D) கவிமணி தேசிக விநாயகம்

“கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு: நானோர் தும்பி!” என்று தமிழ்க் காதல் கொண்டு வாழ்ந்தவர் யார்?
(A) வரதராசனார்
(B) பாரதியார்
(C) வாணிதாசன்
(D) பாரதிதாசன்

“தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும்” – யார் யாரைப் பாடிய வரிகள்?
(A) பாரதியார் – பெரியாரை
(B) பாரதிதாசன்- பெரியாரை
(C) சுரதா – வீரமாமுனிவரை
(D) மு. மேத்தா-திருவள்ளுவரை

தொண்டு செய்து பழுத்த பழம் என்று பாரதிதாசன் போற்றுவது
(A) பாரதியார்
(B) தந்தை பெரியார்
(C) காந்தியார்
(D) அண்ணாதுரையார்

தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும் இப்பாடல் அடிகள் யார் யாரைப் பற்றிப் பாடியது?
(A) பாரதியார், பெரியாரைப் பற்றிப் பாடியது
(B) பாரதிதாசன், பெரியாரைப் பற்றிப் பாடியது
(C) கவிமணி, இரவீந்திரநாத் தாகூரைப் பற்றிப் பாடியது
(D) நாமக்கல் கவிஞர், இரவீந்திரநாத் தாகூரைப் பற்றிப் பாடியது

பொருத்தமான விடையைத் தேர்வு செய்க.
‘தெள்ளு தமிழ்நடை சின்னஞ்சிறிய
இரண்டடிகள்’ -திருக்குறள் குறித்து இப்படிக் கூறியவர் யார்?
(A) திரு வி க
(B) ஔவையார்
(C) பாரதியார்
(D) பாரதிதாசன்

பாரதிதாசன் வெளியிட்ட இதழ்
(A) தேன்மழை
(B) குயில்
(C) தென்றல்
(D) இந்தியா

“இருட்டறையில் உள்ளதடா உலகம்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) கவிமணி
(D) நாமக்கல் கவிஞர்

பாரதிதாசன் எழுதிய ‘பிசிராந்தையார்’ என்னும் நூல்
(A) கவிதை
(B) உரைநடை
(C) சிறுகதை
(D) நாடகம்

பாரதிதாசன் நூல்களில் பொருந்தாத நூல்
(A) குடும்ப விளக்கு
(B) பாண்டியன் பரிசு
(C) இருண்ட வீடு
(D) கள்ளோ காவியமோ

‘குறிஞ்சித் திட்டு’ எனும் நூலை இயற்றியவர்
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) சுரதா
(D) கவிமணி

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) வாணிதாசன்
(D) கம்பதாசன்

‘இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே’ எனப் பாடியவர் யார்?
(A) பாரதியார்
(B) சுரதா
(C) பாரதிதாசன்
(D) கண்ணதாசன்

‘இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே’ எனப் பாடியவர்
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) சுரதா
(D) திருவள்ளுவர்

எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால் இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்.- எனப் பாடியவர்.
(A) பாரதிதாசன்
(B) பாரதியார்
(C) சுரதா
(D) கண்ணதாசன்

‘குயில்’ என்ற இதழை நடத்தியவர்
(A) சுரதா
(B) வாணிதாசன்
(C) பாரதியார்
(D) பாரதிதாசன்
‘சூரிய ஒளி பெறாத செடியும், பகுத்தறிவு ஒளிபெறாத சமுதாயமும் வளர்ச்சி அடையாது’ என உணர்ந்தவர்
(A) பாரதி
(B) சுரதா
(C) பாரதிதாசன்
(D) கவிமணி

பாவேந்தர் பாரதிதாசன் பாடியது
(A) பழமையிருந்த நிலை கிளியே பாமரர் ஏதறிவர்”
(B) ‘தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி”
(C) “சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்”
(D) “தோள்கள் உனது தொழிற்சாலை நீ தொடுமிடமெல்லாம் மலர்ச்சோலை”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!