பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சிக்கான காரணங்கள்

வகுப்புவாதம் மற்றும் பிரிவினை

அறிமுகம்

 • 1857 கிளர்ச்சி கொடூரமாக ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்லாமியர் தங்கள் நிலம், வேலை மற்றும் பிற வாய்ப்புகளை அனைத்தையும் இழந்து வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
 • 1870களில் வங்காள அரசாங்கம் நீதிமன்றங்கள் மற்றும் அலுவலகங்களில், உருது மொழிக்கு பதிலாக இந்தி மொழியையும் மற்றும் பெர்சிய-அரேபிய எழுத்துமுறைக்கு பதிலாக நாகிரி எழுத்துமுறையையும் மாற்றியது இஸ்லாமிய மக்களிடம் வேலைவாய்ப்பு தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தியது.
 • காலனித்துவத்தால் திறக்கப்பட்ட புதிய வழிகளை நாடிய இந்துக்களுடன் போட்டியிட நேர்வதை எண்ணி வெறுப்படைந்தனர்.
 • இந்திய தேசியவாதம் குறிப்பாக படித்த இந்து உயர் சாதியினரிடையே தோன்றியவுடன், காங்கிரஸைக் கட்டுக்குள் வைத்திருக்கும் சக்தி இஸ்லாமிய நடுத்தர வர்க்கத்தினரிடம் இருப்பதை ஆங்கிலேயர்கள் கண்டனர்.

தேசியவாதத்தின் மூன்று கிளைகள்

 1. இந்திய தேசியவாதம்,
 2. இந்து தேசியவாதம்,
 3. முஸ்லிம் தேசியவாதம்.

பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சிக்கான காரணங்கள்

இந்து மறுமலர்ச்சி

 • ஆரம்பகால தேசியவாதிகள் சிலர் தேசியவாதத்தை இந்து அடித்தளத்தில் மட்டுமே கட்டியெழுப்ப முடியும் என்று நம்பினர்.
 • சர்வபள்ளி கோபால் சுட்டிக்காட்டியபடி, 1875ல் நிறுவப்பட்ட ஆர்ய சமாஜ் இந்து மதத்தின் உயர்ந்த பண்புகளை வலியுறுத்தியதன் மூலம், இந்து மறுமலர்ச்சி அரசியலில் அதன் இடத்தைக் கண்டது.
 • பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வட இந்தியாவின் பெரும் பகுதிகளில் நடைபெற்ற பசு பாதுகாப்புக் கழகங்கள் இந்து வகுப்புவாதத்திற்கு வலுவூட்டியது.
 • ஆர்ய சமாஜ் போன்ற அமைப்புகளின் முயற்சி 1891 முதல் அன்னி பெசன்ட் தலைமையிலான பிரம்மஞான சபையினால் வலுப்பெற்றது.

முஸ்லிம்களின் உணர்வு எழுச்சி

 • ஆங்கிலேயர்கள், அலிகார் கல்லூரியைக் கட்டியதன் மூலமும், சையத் அகமது கானை ஆதரித்ததன் மூலமும், ஒரு முஸ்லீம் தேசியக் கட்சி மற்றும் முஸ்லீம் அரசியல் சித்தாந்தத்தின் பிறப்பிற்கு உதவினார்கள்.
 • வாஹாபி இயக்கம் இந்து-முஸ்லிம் உறவுகளில் பிளவை ஏற்படுத்தியது.
 • வாஹாபிகள் போன்ற அடிப்படைவாத இயக்கம் முதல் கிலாஃபத் இயக்கம் வரை முஸ்லிம்களை அரசியலாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தன.
 • அலி சகோதரர்கள் போன்ற முக்கியமான முஸ்லீம் தலைவர்கள் கூட எப்போதும் முதலில் கிலாஃபத் இயக்கவாதிகளாகவும், இரண்டாவதாகவே காங்கிரஸ்காரர்களாக இருந்தனர்.

பிரிட்டிஷாரின் பிரித்து ஆளும் கொள்கை

 • பிரித்தானிய ஏகாதிபத்தியம் பிரித்து ஆளும் கொள்கையை பின்பற்றியது.
 • பம்பாய் கவர்னர் எல்பின்ஸ்டோன், ‘பிரித்தல் ஆளுதல் என்பது பழைய ரோமானிய பொன்மொழி, அது இனி நம்முடையதாக இருக்க வேண்டும் என்று எழுதினார்.
 • வகுப்புவாதக் கலவரங்கள் முன்வைத்த நிர்வாகச் சவாலுக்கு மத்தியிலும் பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்புவாத சித்தாந்தத்திற்கும் அரசியலுக்கும் சட்டப்பூர்வ கௌரவத்தை வழங்கியது.
 • அனைத்துக் கட்சிகளின் இத்தகைய மதவெறி அணுகுமுறைகளின் விளைவு, வட இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பகையை அதிகரிக்க வழிவகுத்தது, இது இந்தியாவின் பிற பகுதிகளிலும் பரவியது.
 • பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகள் பல இந்து-முஸ்லிம் கலவரங்கள் நடைபெற்றன. தென்னிந்தியாவில் கூட 1882 ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் சேலத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது.

பசு வதை மற்றும் வகுப்புவாத கலவரங்கள்

 • கௌராக்ஷினி சபைகள் (பசு பாதுகாப்பு சங்கங்கள்) போர்க்குணமிக்கதாக மாறியது மேலும் பசுக்களை விற்பனை செய்வதில் வலுக்கட்டாயமாக தலையிடுவதாக செய்திகள் வந்தன.
 • 1893க்குப் பிறகு பசுவதை தொடர்பான கலவரங்கள் எல்லா மாகாணங்களுக்கும் பரவி, 1883 முதல் 1891 வரை பஞ்சாபில் மட்டும் 15 பெரிய கலவரங்கள் வெடித்தன.

வகுப்புவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் காங்கிரஸ் மற்றும் அரசாங்கத்தின் தோல்வி

 • இந்திய தேசிய காங்கிரஸில், மதச்சார்பற்ற மற்றும் தேசியவாத கூற்றுக்கள் இருந்தபோதிலும், அதன் உறுப்பினர்கள் இந்து வகுப்புவாத அமைப்புகளின் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க முடியவில்லை.
 • ஆர்ய சமாஜத்தின் சுத்தி மற்றும் சங்கதன் பிரச்சாரங்களில் காங்கிரஸார் பங்கேற்பது இந்துக்களையும் முஸ்லிம்களையும் மேலும் பிரித்தது.
 • மறுமலர்ச்சி மற்றும் வகுப்புவாத நடவடிக்கைகளில் காங்கிரஸார் அடையாளம் காணப்பட்டதால், வட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் காங்கிரஸுக்கு எதிரான உணர்வு ஏற்பட்டது இதனால் ஆங்கிலேயர்கள் வேண்டுமென்றே இந்தப் பிரச்சினையைத் தட்டிக்கழித்தனர்.

காங்கிரஸின் நகர்வுகள்

 • ஆர்ய சமாஜ் போன்ற இந்து அமைப்புகளில் காங்கிரஸின் ஈடுபாடு இருந்தாலும், காங்கிரஸ் தலைமை மதச்சார்பற்றதாகவே இருந்தது.
 • இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது அமர்வில் பசுவைக் கொல்வதை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கித் தீர்மானம் நிறைவேற்ற சில காங்கிரஸ்காரர்கள் முயற்சித்தபோது, காங்கிரஸ் தலைமை அதை ஏற்க மறுத்தது.
 • வங்காளத்தில் சுதேசி இயக்கத்தின் போது (1905-06), சுதேசி இயக்கத்தின் முஸ்லீம் ஆதரவாளர்கள்துரோகிகள்” என்று கண்டிக்கப்பட்டனர்.
 • காங்கிரஸின் மௌனமும், அத்தகைய கூறுகளை கையாள மறுப்பதும் வகுப்புவாத அரசியலுக்கு ஊக்கமளித்ததோடு மட்டுமல்லாமல், தேசியவாத முஸ்லீம்களை மனச்சோர்வடையச் செய்தது.
 • திலகர், அரவிந்த கோஷ் மற்றும் லஜபதி ராய் ஆகியோர் மதச் சின்னங்கள், திருவிழாக்கள் மற்றும் மேடைகளைப் பயன்படுத்தி காலனித்துவ எதிர்ப்பு உணர்வைத் தூண்டினர்.
 • கணபதி விழாவின் மூலம் இந்துக்களை அணிதிரட்ட திலகர் எடுத்த முயற்சி மிகவும் மோசமானது.
 • இந்திய தேசிய காங்கிரஸ் முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் கொள்கையை பின்பற்றுவதை லால் சந்த் கண்டித்தார்.
 • இந்து மற்றும் முஸ்லீம் வகுப்புவாதம் என்பது இந்து மற்றும் முஸ்லீம் பொது மக்ககளுக்கு தொடபில்லாத நடுத்தர வர்க்க உட்பூசல்களின் தயாரிப்புகளாகும். -ஜவஹர்லால் நேரு.

சையத் அகமது கானின் பங்கு

 • அலிகார் இயக்கத்தின் நிறுவனர் சர் சையத் அகமது கான் ஆரம்பத்தில் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்தார்.
 • காங்கிரஸின் முதல் அமர்வில் கலந்து கொண்ட எழுபத்திரண்டு பிரதிநிதிகளில் சர் சையத் அகமது கான் மற்றும் சையத் அமீர் அலி இருவர் மட்டுமே முஸ்லிம்கள்.
 • பின்னர் சர் சையத் அகமது கான் மற்றும் லண்டன் பிரைவி கவுன்சிலில் இடம் பெற்ற முதல் இந்தியரான சையத் அமீர் அலி போன்ற முஸ்லிம் தலைவர்கள் காங்கிரஸை இந்துக்களின் பிரதிநிதித்துவ அமைப்பாக முன்னிறுத்தினர்.
 • எனினும், பதுருதீன் தியாப்ஜி, மும்பையில் ரஹ்மத்துல்லா சயானி, சென்னையில் நவாப் சையது முகமது பகதூர், வங்காளத்தில் ஏ.ரசூல் போன்ற முஸ்லிம் தலைவர்கள் காங்கிரஸை ஆதரித்தனர்.
 • ஆனால் வட இந்தியாவில் பெரும்பான்மையான முஸ்லீம்கள் சையத் அகமதுவின் வரிசையைப் பின்பற்றி ஆங்கிலேயர்களை ஆதரிக்க விரும்பினர்.
 • அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதன் மூலம் சையத் அகமது கான் தனது சமூகத்திற்கு ஒரு பெரிய பங்கைப் பெறலாம் என்று நம்பினார்.

 உள்ளாட்சி தேர்தல்களில் மதம்

 • 1880களில் உள்ளூர் நிர்வாக அமைப்புகள் வகுப்புவாத அரசியலைத் தொடரும் வாய்ப்பை வழங்கின.
 • முனிசிபல் வாரியங்களின் கட்டுப்பாட்டை இந்துக்கள் முஸ்லீம்களிடம் இருந்தும், முஸ்லீம்கள் இந்துக்களிடம் இருந்தும் கைப்பற்ற செய்த முயற்சி உள்ளூர் அரசியலை வகுப்புவாதமயமாக்க வழிவகுத்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!