பெண் சிசுக்கொலை
- பெண் சிசுக்கொலை என்பது கருவில் இருக்கும் அல்லது பிறந்த குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் அதனை கருவில் இருக்கும் காலத்திலோ அல்லது பிறந்த பின்போ கொன்றொழிப்பதை பொதுவாகக் குறிக்கும். பிறந்தது முதல் ஒரு வயது வரையுள்ள குழந்தை சிசு என அழைக்கப்படுகிறது.
காரணங்கள்
- பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் அதிகம் விரும்பப்படுவதாலும், பெண் குழந்தைகளை மதிக்காத காரணத்தாலும், பெண் குழந்தைகளைப் பெறுதல் செலவினம் எனவும் கருதப்படுவதாலும் பெண் சிசுக்கொலை நடைபெறுகிறது.
- பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளை அதிகமாகப் போற்றும் கலாச்சாரமுடைய சமுதாயத்தில் இப்பழக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.
- பெண் குழந்தைகளுக்கு எதிரான இந்த மனநிலை ஏழை, செல்வந்தர் என்ற இருநிலைகளிலும் நிலவுகிறது. இதற்கு சமூக விதிகளும், மக்களின் கலாச்சார நம்பிக்கைகளும் பெருமளவு காரணமாகின்றன.
- இந்திய நாட்டில் பெண் குழந்தைகளை விரும்பாத அல்லது தேர்ந்தெடுக்காத நிலைக்குச் சமுதாயப் பொருளாதாரக் காரணங்களைக் கூறலாம்.
இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில்
- பொருளாதாரப் பயன்பாடு,
- சமுதாய கலாச்சாரப் பயன்பாடு
- மதச் சார்புடைய நிகழ்வுகளின் பங்கு ஆகியனவற்றை மிக முக்கியக் காரணங்களாகக் கூறுகின்றன.
பிற காரணங்கள்
- கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் சமூக நெறிகள்
- ஆண் குழந்தை மோகம்
- வரதட்சணை பிரச்சனை
- பெண்களுக்கு கிடைக்கும் பொருளாதார வாய்ப்புகள் மிகக் குறைவு
- பாலியல் துன்புறுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள்
- தார்மீக மற்றும் நெறிமுறை நிலைபாடுகளின் மாறுதல்கள்
- சமூக-கலாச்சார காரணங்கள்
- இந்தியாவில் ஆணாதிக்கத்தன்மை
- மகன்களை குடும்பத்தின் கூடுதல் அந்தஸ்தாக கருதுதல்
- பாலியல் அடையாளம் மற்றும் கருக்கலைப்புக்கு உதவும் சமீபத்திய தொழில்நுட்பத்தின் எளிமையான அணுகல், PCPNDP சட்டத்தை கடுமையான செயல்படுத்துவதில் குறைபாடு.
- குழந்தை பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்தில் பாகுபாடு
- முடிவெடுக்கும், செயல்களில் பெண்கள் இணைத்துக் கொள்ளாமை.
அரசாங்க முயற்சிகள்
- பெண் சிசுக்கொலை தடுப்பு சட்டம், 1870
- முன்-கருத்தரித்தல் மற்றும் முன்னரே குழந்தைகள் பாலினம் கண்டறியும் தொழில்நுட்ப சோதனை (PCPNDT) சட்டம், 1994.
- தமிழ்நாடு அரசின் தொட்டில் குழந்தை திட்டம் 1992
- ஜனனி சுரக்ஷா யோஜனா (JSY) 2005.
- ராஜீவ் காந்தி தேசிய கிரெச் திட்டம் 2013.
- ஒன் ஸ்டாப் சென்டர் திட்டம் 2015.
- சுகன்யா சபிர்தி சேமிப்பு திட்டம் 2015.
- பேடிபச்சாவோ. பேடிபாதாவோ 2015.
- பிரதான் மந்திரி சுரக்சக்ஷித் மத்ரித்வ அபியன் 2016
- பாலிகா சம்ரிதி யோஜனா மற்றும் தனலட்சுமி திட்டம்