யசோதர காவியம்

யசோதர காவியம்

 • ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று யசோதர காவியம்
 • வடமொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றது யசோதர காவியம் ஆகும்.
 • யசோதர காவியம் நூலின் ஆசிரியர் பெயர் அறிய முடியவில்லை.
 • யசோதர காவியம் சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர்.
 • அவந்தி நாட்டு மன்னன் ‘யசோதரன்’ வரலாற்றைக் கூறுகிறது யசோதர
 • யசோதர காவியம் (ஐந்து) 5 சருக்கங்களைக் கொண்டது. யசோதர காவியம்
 • யசோதர காவியம் பாடல்கள் எண்ணிக்கை 320 அல்லது 330 என கருதுவர்

அவந்தி நாட்டு மன்னன் யசோதரன் வரலாற்றைக் கூறும் நூல்

வாழ்க்கையை வளமாக்கும் அறநெறிகள்

தொடர்களின் ஒப்பீடு

 • ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக. – அறம் செய விரும்பு ஆறுவது சினம்

பாடல்-1405 * * *

ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக போக்குவது

ஏதெனில் வெகுளி போக்குக **

நோக்குவது ஏனெனில் ஞானம் நோக்குக காக்குவது

ஏதெனில் விரதம் காக்கவே ***

சொல்லும் பொருளும்

அறம் – நற்செயல்

வெகுளி – சினம்

ஞானம் – அறிவு

விரதம் – நன்நெறி.

பாடலின் பொருள்

 • நாம் ஒரு செயலைச் செய்வதென்றால் அச்செயல் பயன் தரக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
 • நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்கிட வேண்டுமாயின் முதலில் சினம் என்னும் தீய பண்பை நீக்கல் வேண்டும்.
 • ஆராய வேண்டுமாயின் மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்.
 • இடைவிடாது போற்றிக் காக்க வேண்டுமானால் தாம் கொன்ட நன்னெறியினைக் காக்க வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!