வரதட்சணை
- வரதட்சணை என்பது ஒரு பெண், திருமணமான நேரத்தில் பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேறி கணவனின் வீட்டில் சேரும் பொழுது அப்பெண்ணுக்கு பரிசுப்பொருள்கள் வழங்கப்படும் நடைமுறையாகும்.
- ஆனால் காலப்போக்கில், இதுவே ஒழுங்கற்ற பண்பாடாக மாறியது, இதன் விளைவாக பெண் சிசுக்கொலை, தற்கொலை, தீக்குளிப்பு மற்றும் பிற கொடுமைகளும் நிகழ்கின்றன.
காரணங்கள்
- கல்வியறிவின்மையே முதன்மைக் காரணமாகும்
- வரதட்சணை பெறுவதை கௌரமாக கருதினர்
- சட்டங்களை பின்பற்ற விருப்பம் இல்லாமை.
- இந்திய சமுதாயத்தின் ஆணாதிக்க இயல்பு
- பரம்பரையாக பின்பற்றி வருதல்.
- மணப்பெண்ணின் பொருளாதார நிலை.
- பேராசை
விளைவுகள்
- வரதட்சணையால் ஏற்பட்ட இறப்புகள்
- பெண்களுக்கு எதிரான உளவியல் உடலியல் ரீதியான
- மற்றும் சித்திரவதைகள் உள்ளிட்ட குடும்ப வன்முறைச் செயல்கள்.
- பெண்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறல் (விதிகள் -14,15,21).
- பாலின விகித குறைவு
- மனநல கோளாறுகள்
- பெண் சிசுக்கொலை
- ஏழை மக்களை கடனில் சிக்க வைக்கிறது