- வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, இந்திய அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளது அவை:
வரதட்சணை தடைச் சட்டம், 1961:
- வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றமாகும். இக்குற்றத்திற்கு,ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
- வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ.10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
- வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
- ஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.
இந்திய தண்டனைச் சட்டம் – 304 பி மற்றும் இந்திய சாட்சிய சட்டம், 1872
- இதில் வரதட்சணை இறப்புகளின் வரையறை குறிப்பிடப்பட்டுள்ளது.
- தண்டனை – பெண்களின் கணவர் மற்றும் உறவினர்கள் ஏழு ஆண்டுகளுக்கு குறையாத, ஆனால் ஆயள்.வரை தண்டனை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனை.
இந்திய தண்டனைச்சட்டம் 498 ஏ
- பெண்களுக்கான வன்கொடுமைகள் எவை என்று வரையறுக்கப்பட்டது.
- தண்டனை – மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005:
- அனைத்து வகையான உடலளவிலோ, மனதளவிலோ, பொருளாதார ரீதியிலோ மற்றும் பாலியல் ரீதியிலோ தீங்கு விளைவித்தலை உள்ளடக்கியது.
- குடும்ப வன்முறை வரையறையின் கீழ் வரதட்சணைக்கான கோரிக்கை அடங்கும்.
மகளிர் காவல் நிலையங்கள்
- தமிழ்நாட்டில் இது போன்ற வரதட்சணைக் குற்றங்களைத் தடுக்கவும், பெண்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளைக் குறைக்கவும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்காவல் நிலையங்களில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் போன்ற பணிகளில் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.