- அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- நெடுந்தொகை நானூறு என்றும் அகநானூறினை அழைப்பர்.
- பாடல் வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் அகநானூறு.
- ‘உள்ளுறை‘, ‘இறைச்சி‘ வழியாக சொல்ல வந்த கருத்தை உரைப்பது அகநானூற்றுப் பாடல்களின் சிறப்பு.
- அகநானூறு 145 புலவர்களால் பாடப்பட்ட நானூறு (400) பாடல்களைக் கொண்ட தொகுப்பு.
- அகநானூறின் தொகுப்பு முறையில் ஓர் ஒழுங்கு உண்டு.
அகநானூறு மூன்று (3)பிரிவுகளை உடையது. அவை
- களிற்றியானை நிரை
- மணிமிடை பவளம்
- நித்திலக்கோவ
அகநானூற்றின் மூன்று பிரிவுகளும் – பாடல்களின் எண்ணிக்கையும்
- களிற்றியானை நிரை – 120
- மணிமிடை பவளம் – 180 (அதிகம்)
- நித்திலக்கோவை – 100 (குறைவு)
மொத்த பாடல்கள்– 400
- திணை வாரியாக பாடல்களின் எண்ணிக்கை
திணை | பாடல் வரிசை | பாடல் எண்ணிக்கை |
குறிஞ்சி | 2, 8, 12, 18… (2,8…+10) | 80 |
முல்லை | 4, 14, 24, 34…(4..+10) | 40 குறைவு – ஒரே அளவு |
மருதம் | 6, 16, 26, 36…(6..+10) | 40 குறைவு – ஒரே அளவு |
நெய்தல் | 10, 20,30,40 …(10..+10) | 40 குறைவு – ஒரே அளவு |
பாலை | 1,3,5,7…….((ஒற்றைபடை) | 200 அதிகம் |
மொத்த பாடல்கள் | 400 |
அகநானூற்றுப் பாடல்களில் ‘உள்ளுறை‘, ‘இறைச்சி‘
- சொல்ல வந்த கருத்தை ‘உள்ளுறை‘, ‘இறைச்சி‘ வழியாக உரைப்பது அகநானூற்றுப் பாடல்களின் சிறப்பு
- ‘உள்ளுறை‘, ‘இறைச்சி‘ பாடும் கவிஞர் சொல்லின் பயன்பாடு குறையாமலும் மரபின் நாகரிகம் குறைவுபடாமலும் கூற வேண்டும். அன்பை மறைக்கவும் வேண்டும்; பயன்பாடு கருதி வெளிப்படுத்தவும் வேண்டும்.
- தலைவியைத் தலைவன் சந்திக்க வேண்டிய குறியிடத்தைப் பற்றிய குறிப்பைப் பொதிந்து வெளியிடுவது தோழியின் பொறுப்பு.
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————