அப்துல் ரகுமான்

  • அப்துல் ரகுமான் ஆலாபனை என்னும் கவிதைத் தொகுப்பிற்குச் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
அப்துல் ரகுமான் எழுதியுள்ள நூல்கள்
  • பால் வீதி
  • பித்தன்
  • சுட்டு விரல்
  • நேர் விருப்பம்
  • ஆலாபை
அப்துல் ரகுமான் பெற்றுள்ள விருதுகள்
  • ஆலாபனை என்னும் கவிதைத் தொகுப்பிற்குச் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
  • தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது.
  • பாரதிதாசன் விருது
  • அப்துல் ரகுமான் புதுக்கவிதை, வசனகவிதை, மரபுக்கவிதை என்று பல வடிவங்களிலும் எழுதியுள்ளார்.
  • அப்துல் ரகுமான் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழப் பேராசிரியராக பணியாற்றியவர்.
  • அப்துல் ரகுமான் வாணம்பாடிக் கவிஞர்களில் ஒருவர்.
ரூமியன் மஸ்னவி – அப்துல் ரகுமான் தொடர்பு
  • 1207ல் ஆப்கானிஸ்தானில் பிறந்த மௌலானா ரூமி ஆன்ம ஞானியாக மாறி சூஃபி பிரிவைத் தழுவினார்.
  • உலகப்புகழ் பெற்ற பாரசீக ஞான காவியமான மஸ்னவி நூலை எழுதியவர் மௌலானா ரூமி.
  • புல்லாங்குழலை ஆன்மாவாகக் குறியீடு செய்து கவிதைப் படைத்திருக்கிறார் ரூமி.
  • என்னை மூங்கிற்காட்டிலிருந்து வெட்டி வீழ்த்திப் பிரித்ததற்காக நான் எழுப்பும் கூக்குரல் கேட்டு ஆடவர் பெண்டிர் அனைவரும் அழுது புலம்புகின்றனர். மௌலானா ரூமி
  • அப்துல் ரகுமான் மஸ்னவி நூலை தமிழில் மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார்.
  • இதை, “தீய குணங்கள் என்ற கறைகள் படியாத தூய உலகம் அது. அப்போது ஆன்மா இறைத்தரிசனம் என்ற பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது. இத்தகைய நிலையிலிருந்த ஆன்மாவைப் போர். பொறாமை, பூசல், அகந்தை, கள்ளம் கபடம், பேராசை, சினம், காமம் நிறைந்த சடவுலகுக்கு அனுப்பினால அது அழாமல் எனன செய்யும்?” என அப்துல் ரகுமான் விளக்குகிறார்.

 

தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
  • ‘சுட்டு விரல்’ என்னும் கவிதைத் தொகுப்பில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.

சிந்து பா கவிதை

கவிதை

விடிந்தது என்பாய் நீ அனுதினமும் – வான் வெளுப்பது உனது விடியலில்லை **

முடிந்தது என்பாய் ஒரு காரியத்தை இங்கு முடிதல் என்பது எதற்குமில்லை.

கற்றேன் என்பாய் கற்றாயா? வெறும் காகிதம் தின்பது கல்வியில்லை பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய் ?

வெறும் பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல. குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ கொண்ட அழுக்கோ போகவில்லை

அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ அளித்த தெதுவும் உனதல்ல.

உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும் உடலுக் கணிவது உடையல்ல விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் ஒரு வினாவாய் நீயே நிற்கின்றாய். ***

தின்றேன் என்பாய் அணுஅணுவாய் உனைத் தின்னும் பசிகளுக் கிரையாவாய் வென்றேன் என்பர் மனிதரெல்லாம் பெறும் வெற்றியிலே தான் தோற்கின்றார். ***

‘நான்’ என்பாய் அது நீயில்லை – வெறும் நாடக வசனம் பேசுகிறாய் 

ஏன்? என்பாய் இது கேள்வியில்லை அந்த ஏன் என்னும் ஒளியில் உனைத் தேடு. ***

-அப்துல் ரகுமான்

பா வகை: சிந்து

முந்தைய ஆண்டு வினாக்கள்

கீழுள்ள நூற்பட்டியலில் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிடாத நூலின் பெயர் என்ன?
(A) நேயர் விருப்பம்
(B) சொந்தச் சிறைகள்
(C) பால் வீதி
(D) இன்னொரு சிகரம்

மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர்:
புதுக் கவிதையில் மலர் பார்த்தவர் – என்று பாராட்டப்படுபவர் (4)
(A) உமறுப்புலவர்
(B) அப்துல் ரகுமான்
(C) ந. பிச்சமூர்த்தி
(D) ஞானக் கூத்தன்

“தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழ் அன்னை விருது” பெற்ற பெருமைக்குரியவர் யார்?
(A) கவிக்கோ அப்துல் ரகுமான்
(B) வாணிதாசன்
(C) கண்ணதாசன்
(D) வண்ணதாசன்

ஆலாபனை என்னும் கவிதைத் தொகுப்பிற்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் யார்?
(A) மேத்தா
(B) பாரதிதாசன்
(C) சிற்பி
(D) அப்துல் ரகுமான்

நேயர் விருப்பம், விலங்குகள் இல்லாத கவிதை ஆகிய நூல்களை இயற்றியவர்
(A) தாரா பாரதி
(B) அப்துல் ரகுமான்
(C) ஆலந்தூர் கோ.மோகனரங்கன்
(D) மீரா

கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பொருத்தமான இணையைத் தேர்வு செய்க.
(A) தினங்களை கொண்டாடுவதை விடுங்கள் – கவிக்கோ
(B) மண்புழுவல்ல மானிடனே – பாரதி
(C) கன்று குரல் கேட்ட பசு – தாராபாரதி
(D) தண்ணீர் போல் பணத்தை செலவு செய்தல் – ஆலந்தூரார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!