Contents show
கோல் கிளர்ச்சி (1831 – 32)
- கோல் மக்கள் சோட்டா நாக்பூர் மற்றும் சிங்பம் (ஜார்கண்ட் & ஒரிசா) பகுதிகளில் வாழ்கின்றனர்.
- தங்கள் நிலங்களிலிருந்து வட்டிக்காரர்களால் கட்டாயப்படுத்தி வெளியேற்றபட்ட கோல் பழங்குடியினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- இக்கலகம் பிந்த்ராய் மற்றும் சிங்கராய் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது.
- முதலில் திக்காதார் எனும் வரி வசூலிப்பவர்களை தாக்குவது கொள்ளையடிப்பது என இருந்த கிளர்ச்சி பின் வட்டிகாரர்களை கொல்வது என மாறியது.
- 1832ன் முடிவில் சோட்டாநாக்பூர் பகுதி முழுவதையும் கோல் படையினர் கைப்பற்றினர். தலைவர்களின் செய்திகள் முரசு கொட்டுதல் மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
- 1832ல் பிந்த்ராயின் கைதுடன் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
முண்டா கிளர்ச்சி (1889 – 1900)
- இது உலுகுலன் கிளர்ச்சி (பெரிய கலகம்) என அழைக்கப்படுகிறது.
- முண்டா மக்கள் “குண்டக்கட்டி” (கூட்டுச் சொத்து) எனும் பொதுச் சொத்து முறையை பின்பற்றினர்.
- இம்முறையை வீழ்த்தி நிலங்களை வணிகர்களுக்கும் வட்டிக்காரர்களுக்கும் சென்று சேர பிரிட்டிசின் சட்டங்கள் உதவியது.
- இதன் விளைவாக முண்டாக்கள் கட்டாய உழைப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.
- கடவுளின் தூதராக தன்னை அறிவித்துக் கொண்ட “பிர்சா முண்டா” என்பவரின் தலைமையில் முண்டாக்கள் புரட்சியில் ஈடுபட்டனர்.
- 1889-ல் கிறிஸ்துமஸ் தினத்தன்று கிறிஸ்தவ மதபரப்புரையாளர்கள் மற்றும் மதம்மாறிய முண்டாக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
- இக்கிளர்ச்சி பிப்ரவரி 1900-ல் பிர்சா முண்டாவை கைது செய்தபோது முடிவுக்கு வந்தது.
- இக்கிளர்ச்சியின் விளைவாக 1908-ல் சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் மூலம் பழங்குடியினர் பகுதிகளில் பிறர் நுழைவது தடுக்கப்பட்டது.