ஆசாரக்கோவை – பெருவாயின் முள்ளியார்

ஆசாரக்கோவை

  • ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்.
  • ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள்.
  • ஆசாரக்கோவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
  • ஆசாரக்கோவை நூறு 100 வெண்பாக்களைக் கொண்டது

பெருவாயின் முள்ளியார்

  • ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்.
  • பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் கயத்தூர்

 – ஆசாரக்கோவை

பாடல்

  • நன்றியறிதல் பொறையுடைமை
  • இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை
  • கல்வியோடு ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
  • நல்லினத் தாரோடு நட்டல்
  • இவையெட்டும் சொல்லிய ஆசார வித்து

 – பெருவாயின் முள்ளியார்

பாடலின் பொருள்

  1. பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்
  2. பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்
  3. இனிய சொற்களைப் பேசுதல்
  4. எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்
  5. கல்வி அறிவு பெறுதல்
  6. எல்லோரையும் சமமாகப் பேணுதல்
  7. அறிவுடையவராய் இருத்தல்
  8. நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல் ஆகிய எட்டும் நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகள் ஆகும்.

சொல்லும் பொருளும்

  • நன்றியறிதல்   –  பிறர் செய்த உதவியை மறவாமை
  • ஒப்புரவு  –  எல்லோரையும் சமமாகப் பேணுதல்
  • நட்டல்  -நட்புக் கொள்ளுதல்

முந்தைய ஆண்டு வினாக்கள்

பொருத்துக:
(a) திரிகடுகம் 1. பெருவாயின் முள்ளியார்
(b) ஆசாரக்கோவை 2. நல்லாதனார்
(c) பழமொழி நானூறு 3. காரியாசான்
(d) சிறுபஞ்சமூலம் 4. முன்றுறை அரையனார்
(A) 2 1 4 3
(B) 2 3 4 1
(C) 3 2 1 4
(D) 3 1 4 2

 பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க
(A) ஏலாதி
(B) ஆசாரக் கோவை
(C) திரிகடுகம்
(D) சிறுபஞ்சமூலம்

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!