இந்தியாவில் கிராமப்புற வறுமைக்கான காரணங்களை பட்டியலிடுக

வறுமைக்கோடு

  • இந்திய அரசு தற்பொழுது ஏழ்மை அல்லது வறுமைக்கோடு என்பதை நகர்ப்புறங்களுக்கு ரூ. 296/- ஆகவும் கிராமப்புறங்களுக்கு ரூ. 276/- ஆகவும் வரையறுத்துள்ளது.
  • நாளொன்றுக்கு ரூ. 10/-க்கு குறைவாக ஊதியம் பெறும் மக்கள் அனைவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக கருதப்படுகிறார்கள்.

ஊரக வறுமைக்கான காரணங்கள் 

  • ஊரக வறுமையை தீர்மானிக்கும் பல்வேறு காரணங்கள்

நிலங்கள் சரியாக பிரிக்கப்படாமை: 

  • ஊரக நிலப் பகுதிகள் ஒரு சிலரிடமே குவிந்து காணப்படுகின்றன.
  • பெரும்பான்மை கிராம மக்கள் தங்கள் குடும்ப தேவைகளுக்காக அந்நிலங்களில் கூலிக்கு வேலை செய்கின்றனர்.

பண்ணை சாராத தொழில்களில் வேலைவாய்ப்பின்மை: 

  • அதிகரிக்கும் உழைப்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பண்ணை சாராத தொழில்கள் வளரவில்லை.
  • மிகுதியான தொழிலாளர்கள் ஊரகப்பகுதிகளில் உள்ளபடியால் குறைவான கூலியையே பெறுகின்றனர்.
  • இது வறுமைக்கு வழி வகுக்கிறது.

பொதுத்துறைகளில் முதலீடு இன்மை:

  • மனித வளத்தை மேம்படுத்துவதற்கான முதலீடு நமது நாட்டில் மிகக் குறைவாக உள்ளது,
  • வறுமைக்கு அடிப்படையான காரணமாகும்.

பணவீக்கம்: பொருட்களின் 

  • விலை அதிகரிப்பதால் ஊரக மக்களின் வாங்கும் சக்தி குறைந்து ஊரக வறுமைக்கு வழிவகுக்கிறது.

குறைந்த உற்பத்தித் திறன்: 

  • ஊரக தொழிலாளர்கள் மற்றும் பண்ணைகளின் குறைந்த உற்பத்தித்திறன், வறுமைக்கு காரணமாக அமைந்தது.

வளர்ச்சியின் நன்மைகளில் உள்ள சமனற்ற நிலை: 

  • பொருளாதார வளர்ச்சியினால் ஏற்படும் நன்மைகளை நகர்புற பணக்காரர்களே அனுபவிப்பதால், சொத்துக்கள் அவர்களிடமே குவிந்து உள்ளன.
  • குறைபாடுள்ள பொருளாதார அமைப்புகள் மற்றும் கொள்கைகளால், வளர்ச்சியின் நன்மைகள் ஏழை மக்களை சென்றடைவது இல்லை.

குறைந்த பொருளாதார வளர்ச்சி வீதம்: 

  • இந்திய பொருளாதார வளர்ச்சி பணக்காரர்களுக்கு சாதகமாகவே உள்ளது.
  • நாடு அடைந்த வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் நன்மைகள் ஏழைமக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன.

பெரிய தொழிற்சாலைகளுக்கே முக்கியத்துவம்: 

  • இந்தியாவில் பெரிய தொழிற்சாலைகளில் செய்யப்படும் அதிக முதலீடு நகர்புறத்தின் நடுத்தர மற்றும் உயர் வருமான பிரிவினரின் தேவைகளையே பூர்த்தி செய்கிறது.
  • இந்த தொழிற்சாலைகள் இயந்திரங்களையே அதிகமாக பயன்படுத்துவதால் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறைவாகவே உள்ளது.
  • ஆதலால் கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்பினை பெற முடியாத நிலையிலும், வறுமையிலிருந்து மீள முடியாமலும் உள்ளனர்.

சமூக குறைபாடுகள்: 

  • சமுதாயத்தில் நிலவும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைள் போன்றவை ஆக்கமற்ற உற்பத்தி செலவை அதிகரிக்கிறது.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!