இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி பற்றி சுருக்கி எழுதுக

சரக்கு மற்றும் சேவை வரி

  • இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு மற்றும் சேவை வரி கொண்டுவரப்பட்டது.
  • சரக்கு மற்றும் சேவைகள் வரி சட்டம் பாராளுமன்றத்தில் 2017 மாரச் 29-ல் நிறைவேற்றப்பட்டு. 2017 ஜுலை 1 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
  • இந்தியாவில் சரக்கு மற்றும் சேவைகள்வரி விரிவான, பல படிநிலைகளில் இலக்கு அடிப்படையில் ஒவ்வொரு மதிப்புக் கூட்டின்போது விதிக்கப்படுகிறது.
  • சரக்கு மற்றும் சேவைவரியானது பண்டங்கள் மற்றும் பணிகள் அளிப்பின் மீது விதிக்கப்படும் மறைமுகவரியாகும்.
  • நாடு முழுவதற்குமான ஒரே மறைமுகவரியாக GST – உள்ளது
  • GST-யின் கீழ், இறுதி விற்பனையின் மேல்சுமத்தப்படுகிற வரியாகும். 
  • மாநிலத்திற்குப்பட்ட விற்பனையில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST), மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) விதிக்கப்படுகிறது. மாநிலங்களுக்கிடையேயான விற்பனையில் ஒருங்கிணைந்த GST விதிக்கப்படுகிறது. 

GST – ன் உள்ளடக்கங்கள் 

  • GST மூன்று வகைப்படும். அவையாவன: 
    • CGST 
    • SGST 
    • IGST
  • CGST: மாநிலத்திற்குள்ளே நடைபெறுகிற விற்பனையில் மத்திய அரசால் வசூலிக்கப்படுவதாகும். (உ.ம்.மாநிலத்திற்குள்/யூனியன் பிரதேசம்)
  • SGST: மாநிலத்திற்குள் நடைபெறும் விற்பனையில் மாநில அரசால் வசூலிக்கப்படுவதாகும். (உ.ம்.மாநிலத்திற்குள்/யூனியன் பிரதேசம்)
  • IGST:மாநில அரசுகளுக்கிடையேயான விற்பனையில் மத்திய அரசால் வசூலிக்கப்படுவதாகும். (உ.ம்.மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு பொருள் விற்பனை). 

இந்த வரி அமைப்பு கீழ் உள்ளவாறு அமைகிறது

பேர நடவடிக்கைபுதிய ஆளுகைபழைய ஆளுகை
மாநிலத்திற்குள்ளேயான விற்பனைCGST + SGSTVAT + மத்திய ஆயத்தீர்வை / சேவை வரிவருவாயை மத்திய மற்றும் மாநில அரசுகள் சமமாக பகிர்ந்து கொள்ளும்.
மற்ற மாநிலத்தில் விற்பனையின் போதுIGSTமத்திய விற்பனைவரி + ஆயத்தீர்வை / சேவை வரிமாநிலங்களுக்கிடையேயான விற்பனையில் ஒரே ஒரு வரி மட்டும் விதிக்கப்பட்டு, மத்திய அரசு அந்த வருவாயை இட அடிப்படையில் பகிர்ந்து கொள்ளும்

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!