இந்தியாவில் பல்வேறு மட்டங்களில் பல்வேறு கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் கல்வியின் அனைத்து நிலைகளையும் உள்ளடக்கி, பல்வேறு வகையான மாணவர்களுக்கு கல்வி அளிக்கின்றன.
இந்தியாவில் செயல்படுத்தப்படும் கல்வித் திட்டங்கள்:
சர்வ சிக்ஷா அபியான்:
அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது கல்வி உரிமைச்சட்டம் (RTE) 2009ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படுகிறது. RTE 2009ல் கூறப்பட்டுள்ள படி, இலவசக் கல்வி வழங்குகிறது.
அனைவருக்கும் உயர்நிலைக் கல்வி என்பதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
குறைந்தபட்ச கல்வியின் அளவை எட்டாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பிற்கு உயர்த்துதல்.
அறிவியல், கணிதம் (ம) ஆங்கிலம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, நல்ல தரமான இடைநிலைக் கல்வியை வழங்குதல்.
பாலினம், சமூக பொருளாதார வேறுபாடு, உடல் ஊனம் (ம) இதரபிற காரணங்களால் எந்த குழந்தையும் உயர்நிலைப் படிப்பை தவறவிட்டுவிடாமல் செய்தல்.
அடல் டிங்கரிங் ஆய்வகம்:
இளம் குழந்தைகளுக்கு (முறை சார்ந்த கல்வி கிடைக்காத குழந்தைகளுக்கும்) STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் (ம) கணிதம்) பற்றி அறிவினைப் பெற அடல் டிங்கரிங் ஆய்வகக் கல்விக் கருவிகள் உதவுகின்றன.
இது நிதி ஆயோக்கின் அடல் புதுமை இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.
உன்னத் பாரத் அபியான்:
இந்தியாவின் கிராமப்புறங்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களை இணைப்பதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது.
கிராம சமுதாயங்களின் நிலையான வளர்ச்சியை விரைவுபடுத்த,
முன்னேற்றத்திற்கான சவால்களை கண்டு, அதற்குப் அடையாளம் பொருத்தமான தீர்வு காண உயர்கல்வி நிறுவனங்கள் கிராமப்புற மக்களோடு இணைந்து உழைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
விஷ்வஜித் திட்டம்:
உலகளாவிய உயர்கல்வி பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் உயர்ந்த தரவரிசையினைப் பெறுவதற்கு முன்னணி இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு (IIT) உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டிற்குள் இந்தியாவில் முதன்மை பெற்ற ஏழு IIT கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.1250 கோடி நிதி உதவி வழங்குதல்.
இதன் மூலம் IIT களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் (ம) வெளிநாட்டு ஆசிரியர்களை பணியமர்த்துதல் போன்றவற்றை மேற்கொள்ள இயலும்.
உடான் (பெண் மாணவர்களுக்கு கல்விச் சிறகை அளித்தல்):
தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள், ஐஐடி (ம) பொறியியல் கல்லூரிகள் போன்றவற்றில் பெண்களின் குறைந்த அளவிலான சேர்க்கை நிலையைப் போக்க முயலுதல்,
இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டில் பல்வேறு முதன்மை பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு தயாராவதற்காக மாணவர்களுக்கு 11 மற்றும் 12ம் வகுப்புகளில் தேவையான உதவிகளைச் செய்தல்.
ஸ்வயம் (இனம் விருப்பார்வ மனதினருக்கான செயலூக்கமுள்ள கற்றலுக்கான கல்வி வலைத்தளங்கள்)
ஆன்லைன் பாடமுறைகளுக்கான ஒருங்கிணைந்த தளத்தையும், வலைவாசலையும்,தகவல் (ம) தொடர்புத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி, அனைத்து உயர் கல்விப் பாடங்களையும் திறன் துறைப் பாடமுறைகளையும் உள்ளடக்கி அளிக்கும்.
ஸ்வயம் பிரபா:
GSAT – ளை செயற்கைக் கோளைப் பயன்படுத்தி 24 x 7 என்ற அளவில் உயரகர கல்வியின் திட்டத்தை ஒளிபரப்புவதற்காக ஏற்படுத்தப்பட்ட 32 DTH சேனல்களின் தொகுப்பே ஸ்வயம் பிரபா.
தேசிய டிஜிட்டல் நூலகம்:
மனிதவள அமைச்சகத்தின் திட்டமான இது, ஒரு ஒற்றைச் சாளரத் தேடும் வசதியுடன் கூடிய ஒரு மெய்நிகர் கற்கைவளக் களஞ்சியம் ஆகும்.
ஷாலா சித்தி (பள்ளி ஆய்வுத்திட்டம்);
புள்ளிகளைத் திறனாய்வு செய்து பள்ளிமேம்பாடு (ம) வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த திட்டம்
ஷாலா தர்பன்:
இது ஒரு தகவல் தொழில்நுட்பத் திட்டமாகும்.
பள்ளியில் டடிக்கும் மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் கண்காணிக்க இத்திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
சமீப் (மாணவர்கள் (ம) வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்குமான கூட்டணைவுத் திட்டம்):
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளையும், அதன் உலகளாவிய வெளியுறவு ஈடுபாட்டையும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடையே கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
வித்யாஞ்சலி யோஜனா:
அரசுப் பள்ளிகளில் கல்வியுடன் கூடிய பிற நடவடிக்கைகளை வலுப்படுத்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த தன்னார்வலர்களை ஈடுபடுத்துதல்.
கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா:
கல்வி ரீதியாக பின்தங்கிய பகுதியில் உள்ள பெண்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளி மூலம் மேல்நிலைக் கல்வி வழங்குதல்.
ஆபரேஷன் டிஜிட்டல் போர்டு:
அனைத்து பள்ளிகளிலும் சிறந்த டிஜிட்டல் கல்வியை வழங்குதல். பிரதமரின் ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித்தொகை