இந்தியாவில் சோசியஸிச இயக்கங்கள்

சோசலிச இயக்கங்களின் ஆரம்பம்

  • இந்திய தேசிய காங்கிரஸில் இடதுசாரிகளின் செல்வாக்கு சுதந்திரப் போராட்டத்தில் 1920களின் பிற்பகுதியில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் வளர்ந்துவந்தது.
  • 1917 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியால் ஈர்க்கப்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் அக்டோபர் 1920ல் தொடங்கப்பட்டது.
  • நிறுவன உறுப்பினர்கள் – M.N. ராய், அபானி முகர்ஜி, M.P.T. ஆச்சார்யா, முகமது அலி மற்றும் முகமது ஷபிக்.
  • இந்த உறுப்பினர்களால் 1920களில் பல வேலைநிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
  • புரட்சிக்கரவாதிகளின் முதல் பிரிவு 3 ஜூன் 1921ல் பெஷாவரை அடைந்தது.
  • போல்ஷிவிக் (ரஷ்ய கம்யூனிஸ்ட் பிரதிநிதிகள்) இந்தியாவிற்கு வந்து பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
  • 1922 மற்றும் 1927 க்கு இடையில் அவர்களுக்கு எதிராக ஐந்து சதி வழக்குகள் தொடரப்பட்டன.

கம்யூனிஸ்ட் கட்சியின் அடித்தளம்

  • அகில இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு 1925ல் கான்பூரில் நடைபெற்றது.
  • தலைமை உரை – சிங்காரவேலர்.”
  • இந்திய மண்ணில் 1925ல் பம்பாயில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முறையாக நிறுவப்பட்டது
  • 1928ல் அகில இந்திய தொழிலாளர் மற்றும் விவசாயிகள் கட்சி நிறுவப்பட்டது. 
  • முசாபர் அகமது, எஸ்.ஏ.டாங்கே, எஸ்.வி. காட், ஜி.அதிகாரி, பி.சி. ஜோஷி, எஸ்.எஸ்.மிராஜ்கர், ஷௌகத் உஸ்மானி, பிலிப் ஸ்ட்ராட் மற்றும் இருபத்தி மூன்று பேர் ரயில்வே வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்ததற்காக கைது செய்யப்பட்டனர்.

கான்பூர் சதி வழக்கு, 1924

  • 1924 ஆம் ஆண்டின் கான்பூர் சதி வழக்கு இந்தியாவில் கம்யூனிசத்தின் வளர்ச்சியை நசுக்கும் நடவடிக்கையாகும்.
  • கம்யூனிஸ்டுகள் மற்றும் தொழிற்சங்கவாதிகள் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
  • அவர்கள் மீதான குற்றச்சாட்டு “ஏகாதிபத்திய பிரிட்டனில் இருந்து இந்தியாவை முழுமையாகப் பிரிப்பதன் மூலம், பிரிட்டிஷ் இந்திய பேரரசரின் உரிமையைப் பறிக்க முயற்சி செய்ததார்கள்” என்பதாகும்.
  • கோரக்பூரின் நீதிபதியாக பணியாற்றிய போது சௌரி சௌரா வழக்கில் தொடர்புடைய 172 விவசாயிகளுக்கு மரண தண்டனை விதித்தத நீதிபதி H.E. ஹோம்ஸ் என்பவரின் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
  • கான்பூர் சதி வழக்கில் முசாபர் அகமது, சவுகத் உஸ்மானி, நளினி குப்தா மற்றும் எஸ்.ஏ.டாங்கே ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
  • விசாரணை மற்றும் சிறைவாசம், இந்தியாவில் கம்யூனிச செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
  • 8 பேர் மீது குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது: எம்.என். ராய், முசாபர் அகமது, எஸ்.ஏ.டாங்கே, நளினி குப்தா, குலாம் ஹுசைன், சிங்காரவேலு, சவுகத் உஸ்மானி மற்றும் ஆர்.எல்.சர்மா
  • (குலாம் ஹுசைன் ஒப்புதல் அளிப்பவராக மாறினார். எம்.என். ராய் மற்றும் கே.எல். ஷர்மா ஆகியோர் முறையே ஜெர்மனி மற்றும் பாண்டிச்சேரியில் (பிரான்ஸ் பிரதேசம்) இருந்ததால் அவர்கள் ஆஜராகவில்லை.
  • சிங்காரவேலு உடல்நலக்குறைவால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ககோரி சதி வழக்கு, 1925

  • ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி திடீரென வாபஸ் பெற்றதால் விரக்தியடைந்த இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
  • 1924ல் கான்பூரில் இந்துஸ்தான் குடியரசு இராணுவம் (HRA) உருவாக்கப்பட்டது.
  • 1925 ஆம் ஆண்டு ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்பகுல்லா கான் மற்றும் பலர் லக்னோவிற்கு அருகிலுள்ள காகோரி என்ற கிராமத்தில் அரசாங்கப் பணத்தை ஏற்றிச் சென்ற ரயிலைக் கொள்ளையடித்தனர்.
  • அவர்கள் காகோரி சதி வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
  • அவர்களில் நால்வருக்கு மரண தண்டனையும் மற்றவர்களுக்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

மீரட் சதி வழக்கு, 1929

  • பிரிட்டிஷ் அரசால் நிறுவப்பட்ட கம்யூனிச சதி வழக்குகளில் மீரட் சதி வழக்கு மிகவும் பிரபலமானது.
  • 1920களின் பிற்பகுதி பல தொழிலாளர் எழுச்சிகளைக் கண்டது மேலும்இந்த காலம் பெரும் மந்தநிலையின் (1929-1939) தசாப்தமாக நீடித்தது.
  • தொழிற்சங்கவாதம் பல நகர்ப்புற மையங்களுக்கு பரவியது மேலும் தொழிலாளர் வேலைநிறுத்தங்களை ஒழுங்குப்படுத்தப்பட்டது.
  • இந்தக் காலகட்டம் முழுவதும் தொழிலாளி வர்க்கத்தை ஒழுங்கமைப்பதில் கம்யூனிஸ்டுகள் முக்கியப் பங்காற்றினர்.
  1. காரக்பூர் ரயில்வே பணிமனை வேலைநிறுத்தம் – 1927,
  2. லிலுவா ரயில் பணிமனை வேலைநிறுத்தம் – 1928,
  3. கல்கத்தா தோட்டக்காரர்களின் வேலைநிறுத்தம் – 1928,
  4. வங்காளத்தில் சணல் ஆலைகள் வேலைநிறுத்தம் – 1929,
  5. தென்னிந்திய ரயில்வே கோல்டன் ராக் பணிமனை வேலைநிறுத்தம், திருச்சிராப்பள்ளி, – 1928,
  6. பம்பாயில் ஜவுளித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் – 1928.

பிரிட்டிஷ் அரசு இரண்டு கொடூரமான சட்டங்களைக் கொண்டு வந்தது

  • தொழிற் தகராறுகள் சட்டம் , 1928
  • பொதுமக்கள் பாதுகாப்பு மசோதா, 1928.
  • இந்தச் சட்டங்கள் பொதுவாக பொதுமக்கள்உரிமைகளைக் குறைக்கவும் குறிப்பாக தொழிற்சங்க நடவடிக்கைகளை நசுக்கவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளித்தன.
  • பிரிட்டிஷ் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் 32 முன்னணி செயல்பாட்டாளர்களை அவர்கள் கைது செய்தனர்.
  • அவர்களில் பெரும்பாலோர் தொழிற்சங்க செயல்பாட்டாளர்கள் மேலும் எட்டு பேர் இந்திய தேசிய காங்கிரஸைச் சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுகளும் அடங்குவர்

  1. பிலிப் ஸ்ப்ராட்
  2. பான் பிராட்லி 
  3. லெஸ்டர் ஹட்சின்சன்
  • அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 121A பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
  • இதற்கிடையில், இந்த வழக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தேசிய மீரட் சிராய்வாசிகளின் பாதுகாப்புக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.
  • பிரபல இந்திய வழக்கறிஞர்கள் கே.எஃப். நாரிமன் மற்றும் எம்.சி. சாக்லா ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
  • காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தேசிய தலைவர்கள் கூட குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையில் சென்று பார்த்தனர்.
  • விசாரணையின் போது, கம்யூனிஸ்டுகள் அரசியல் அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் தங்கள் தரப்பை பிரச்சாரத்திற்கான தளமாக பயன்படுத்தினர்.
  • மீரட்டில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் கைது செய்யப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1933 ஜனவரி 16 அன்று கடுமையான தண்டனைகளை வழங்கியது.
  • தண்டனைக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இந்த வழக்கில் மூன்று பிரிட்டிஷ் பிரஜைகளும் குற்றம் சாட்டப்பட்டதால், இந்த வழக்கு சர்வதேச அளவில் அறியப்பட்டது.
  • மிக முக்கியமாக, ரோமன் ரோலண்ட் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட குற்றவாளிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.
  • மேல்முறையீட்டில், ஜூலை 1933ல் தண்டனைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டன.

1930களில் இடதுசாரி இயக்கம்

  • 1930களில் உலக அளவில் பெரும் மந்தநிலையால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பலம் பெற்றது.
  • வர்த்தக வருவாயில் சரிவு மற்றும் விவசாய விலைகள் வீழ்ச்சி ஆகியவற்றில் மந்தநிலையின் விளைவுகள் பிரதிபலித்தன.
  • இச்சூழலில், வருமான இழப்பு, ஊதியக் குறைப்பு மற்றும் வேலையின்மை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காக கம்யூனிஸ்ட் கட்சி போராடியது.
  • இதன் விளைவாக 1934ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது.
  • 1934 ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆச்சார்யா நரேந்திர தேவ் மற்றும் மினு மசானி ஆகியோரால் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது.
  • தேசியவாதமே சோசலிசத்திற்கான பாதை என்றும் காங்கிரஸுக்குள் தாங்கள் செயல்படுபடுவோம் என்றும் அவர்கள் நம்பினர். அவர்கள் காங்கிரசை விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ஆதரவாக மாற்ற உழைத்தனர்.

லாகூர் சதி வழக்கு & வெடிகுண்டு வழக்கு

  • பகத் சிங், சுக்தேவ் மற்றும் அவர்களது தோழர்கள் பஞ்சாபில் ஹிந்துஸ்தான் ரிபப்லிக்கன் அசோசியேசனை மறுசீரமைத்தனர்.
  • சோசலிசக் கருத்துக்களால் தாக்கம் பெற்ற அவர்கள் அதை 1928 இல் இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்லிக்கன் அசோசியேசன் (HSRA) என்று மறுபெயரிட்டனர்.
  • லாலா லஜபதி ராயின் மரணத்திற்கு காரணமான பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரி சாண்டர்ஸ் படுகொலை செய்யப்பட்டார்.
  • பகத் சிங்குடன் பி.கே. தத் 1929ல் மத்திய சட்டப் பேரவைக்குள் புகை குண்டை வீசினார்.
  • துண்டுப் பிரசுரங்களை வீசி இன்குலாப் ஜிந்தாபாத், பாட்டாளி வர்க்கம் வாழ்க என்று முழக்கமிட்டனர்.
  • காந்தி-இர்வின் பேச்சுவார்த்தையின் போது பகத்சிங் மற்றும் ராஜ்குருவின் வழக்கையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது, ஆனால் வைஸ்ராய் மரண தண்டனையை குறைக்க விரும்பவில்லை.
  • பகத் சிங் மற்றும் ராஜ்குரு, சுக்தேவ், ஜதீந்திர நாத் தாஸ் மற்றும் 21 பேர் கைது செய்யப்பட்டு சாண்டர்ஸ் கொலைக்காக விசாரணை செய்யப்பட்டனர் (இந்த வழக்கு இரண்டாவது லாகூர் சதி வழக்கு என்று அறியப்பட்டது).
  • சிறையில் உள்ள பாரபட்சமான நடைமுறைகள் மற்றும் மோசமான நிலைமைகளுக்கு எதிராக 64 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு ஜதீந்திர நாத் தாஸ் சிறையில் இறந்தார்.
  • லாகூர் சதி வழக்கு விசாரணை முடியும் வரை வெடிகுண்டு வீச்சு வழக்கின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
  • இந்த வழக்கில்தான் பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோருக்கு 1930 அக்டோபர் 7 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
  • முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன. யுத்தம் எங்களுடன் ஆரம்பிக்கவில்லை, எங்களுடைய வாழ்வோடு முடியப்போவதுமில்லை… உங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி நாங்கள் யுத்தம் செய்தோம் எனவே நாங்கள் போர்க் கைதிகள். அதன்படி எங்களை தூக்கிலிடுவதற்கு பதிலாக சுட்டுக் கொல்லுங்கள்” என்று கைதிகள் பஞ்சாப் ஆளுநருக்கு கடிதம் எழுதினர்.
  • பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோர் லாகூர் சிறையில் மார்ச் 23, 1931 அன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டனர்.
  • அவர்கள் இறுதி மூச்சு வரை இன்குலாப் ஜிந்தாபாத் என்றும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவோம் என்றும் முழக்கமிட்டு, தூக்கு மேடையை தைரியமாக எதிர்கொண்டனர்.

வெள்ளையனே வெ ளியேறு இயக்கத்தின் போது சோசலிஸ்டுகளின் பங்கு

  • காந்தி மற்றும் காங்கிரஸின் பிற முக்கிய தலைவர்கள் சிறையில் இருந்த நிலையில், சோசலிஸ்டுகள் இயக்கத்திற்கு தலைமை தாங்கினர்.
  • ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் ராமானந்த் மிஸ்ரா ஆகியோர் சிறையிலிருந்து தப்பித்து, தலைமறைவு இயக்கத்தை ஏற்பாடு செய்தனர்.
  • அருணா ஆசப் அலி போன்ற பெண் ஆர்வலர்கள் வீரப் பாத்திரம் வகித்தனர்.
  • உஷா மேத்தா காங்கிரஸ் வானொலியை தலைமறைவில் நிறுவினார்.

கல்பனா தத்

  • 1920களின் பிற்பகுதியில், கல்பனா தத் (கம்யூனிஸ்ட் தலைவர் பி.சி. ஜோஷியை திருமணம் செய்த பிறகு கல்பனா ஜோஷி என்று அழைக்கப்பட்டார்) என்ற இளம் பெண், சிட்டகாங் ஆயுதக் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் இளைஞர்களின் தேசபக்தியைத் தூண்டினார்.
  • கல்பனா தத் தற்போதுள்ள ஆணாதிக்க அமைப்பை மீறி, தங்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய இளம் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
  • புரட்சிகர சிட்டகாங் இயக்கத்தில் கல்பனா தத்தின் தீவிர பங்கேற்பு அவர் கைதுக்கு வழிவகுத்தது.
  • சூர்யா சென்னுடன் சேர்ந்து கல்பனாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
  • அரச சக்கரவர்த்திக்கு எதிராக போர் தொடுத்தது” என்பது குற்றச்சாட்டு. இந்த வழக்கு சிட்டகாங் ஆயுதக் கிடங்கு வழக்கு என்று அறியப்பட்டது.
  • கல்பனா தத் தனது சுயசரிதை Chittagong Armory Raiders Reminiscences என்ற புத்தகத்தில், சிட்டகாங்கின் புரட்சிகர இளைஞர்கள் “வெளியுதவி இல்லாமல் கூட அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவது சாத்தியம் என்பதை நிரூபிப்பதன் மூலம் தன்னம்பிக்கையைத் தூண்ட விரும்பினர் என நினைவு கூர்ந்தார்.

சிட்டகாங் ஆயுதக் கிடங்கு தாக்குதல்

  • சிட்டகாங் ஆயுதக் கிடங்கு தாக்குதலின் தலைவர் சூர்யா சென்.
  • சூர்யா சென்னின் புரட்சிக் குழுவான இந்திய குடியரசு இராணுவம், ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் பெயரால் அழைக்கப்பட்டது.
  • 1930 ஏப்ரல் 18 ஆம் தேதி இரவு சிட்டகாங் ஆயுதக் கிடங்கு கைப்பற்றப்பட்டது.
  • கல்பனா தத்தும் இதில் பங்கேற்றவர்களில் ஒருவர்.
  • புரட்சியாளர்கள் தேசியக் கொடியை ஏற்றி, பந்தே மாதரம், இன்குலாப் ஜிந்தாபாத் என அடையாள முழக்கங்களை எழுப்பினர்.
  • கிராமங்களும் கிராம மக்களும், புரட்சியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் கொடுத்தனர், இதற்காக காவல்துறையால் பெரிதும் அவதிப்பட்டனர்.
  • மூன்று ஆண்டுகள்  முயற்சிக்குப் பின் பிப்ரவரி 1933ல் சூர்யா சென் கைது செய்யப்பட்டார், மேலும் 1934 ஜனவரி 12 அன்று தூக்கிலிடப்பட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!