- இந்தியாவில் 1917-ல் தான் முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன.
- 1935-ல் பணப் பொறுப்பு அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்தது. 1947-ம் ஆண்டுவரை ஆறாம் ஜார்ஜின் உருவம் பொறித்த பணமே புழக்கத்தில் இருந்தது.
- ஆங்கிலேய அரசு, 1925ல் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக்கில் ஒரு அச்சகத்தை அமைத்தது.
- மத்தியபிரதேசத்திலுள்ள தேவாஸில் 1974-ல் ஓர் அச்சகம் தொடங்கப்பட்டது.
- 1990களில் கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரிலும், மேற்கு வங்காளத்திலுள்ள சல்பானியிலும் ரூபாய் மற்றும் வங்கிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அச்சடிக்க மேலும் இரு அச்சகங்களை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியது.
- பத்தாயிரம் ரூபாய் மதிப்புடைய நோட்டுகள் அச்சடிக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இருந்தாலும், தற்போது அதிகபட்சம் இரண்டாயிரம் ரூபாய் மதிப்பு வரையிலான பணத்தை மட்டுமே அச்சடிக்கிறது.
நாணயம் மற்றும் பணம் அச்சு ஆலை:
பதிப்பகம் | இடம் | தொடர்புடையது |
இந்திய பத்திர அச்சகம் (1922) | நாசிக் | தபால் தலை, நீதித்துறை வில்லைகள், காசோலை மற்றும் பத்திரங்கள் அச்சிடப்படுகின்றன. |
பத்திர அச்சு நிலையம் (1982) | ஹைதராபாத்
| மத்திய ஆயத்தீர்வை கட்டணவில்லை |
காகித நாணய அச்சகம் (1928) | நாசிக்
| பத்து ரூபாய் நூறு ரூபாய் தாள்களை பிரிவாக அச்சிடுகிறது |
வங்கி காகித நாணய அச்சகம் (1974) | திவாஸ் (மத்தியப் பிரதேசம்) | இது இரண்டு பிரிவுகளைக் கொண்டது அ) வங்கி நோட்டுகளான 20, 50, 100 ரூபாய் (ம) மேலுள்ள பிரிவுகள் ஆ) பத்திர தாள்களுக்கு தேவையான மை ஆலை. |
புதிய காகித நாணய அச்சகம் (1995) | மைசூரு (கர்நாடகா), சலபனி (மேற்கு வங்காளம்) | |
பத்திர காகித ஆலை | ஹோஸன்காபாத்
| இவை காகித நாணயத்திற்குத் தேவையான மற்றும் பிற பத்திரங்களுக்கு தேவையான காகிதத்தை உற்பத்தி செய்கிறது |
அரசாங்க விருது மற்றும் நாணய ஆலை | கல்கத்தா மற்றும் நொய்டா |
மதிப்பு | நிறம் | பின்புறம் |
1 | நீலம்
| சாகர் சிராத் எண்ணெய் கம்பளம் |
5 | பச்சை | இழுவை இயந்திரம் |
10 | சாக்லேட் பிரௌன் | கோனார்க் சூரிய கோவில் |
20 | சிகப்பு ஆரஞ்சு | மவுண்ட் ஹாரிட், போர்ட்பிளேயர் |
50 | அக்வா | ஹம்பி தேர் |
100 | ஊதா பச்சை மற்றும் நிலம்
| இமயமலை
|
200 | மஞ்சள் | சாஞ்சி கோபுரம் |
500 | ஸ்டோன் சாம்பல் | செங்கோட்டை |
2000 | மெஜந்தா | மங்கள்யான் |
காகித பணம்:
- ஷெர் ஷா சூரி என்பவரால் ரூ1 க்கு 40 செம்பு நாணயங்கள் என்ற விகிதத்தில் முதல் ரூபாய் வெளியிடப்பட்டுள்ளது.
- சமஸ்கிருதச் சொல்லான ரௌப்பியா (Raupya) விலிருந்து ரூபாய் என்ற வார்த்தை தோன்றியது.
- இந்தியாவின் ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் அதன் மதிப்பு 17 மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் (முன்பக்கத்தில் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் பின்பக்கத்தில் மற்ற 15 மொழிகளிலும்).