இந்தியாவில் வகுப்புவாத அமைப்புகள்

வகுப்புவாத அமைப்புகள்

அகில இந்திய முஸ்லிம் லீக்

  • 1906 அக்டோபர் 1 ஆம் தேதி, அலிகார் இயக்கத்துடன் தொடர்புடைய 35-உறுப்பினர்கள் கொண்ட முஸ்லீம் உயர் வர்க்க குழு சிம்லாவில் ஆகா கான் தலைமையில் வைஸ்ராய் பிரபு மிண்டோவிடம் உரையாற்றுவதற்காக ஒன்றுகூடியது.
  • அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில், உயர் நீதிமன்றங்களில் முஸ்லிம் நீதிபதிகள் மற்றும் வைஸ்ராய் கவுன்சில் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
  • சிம்லா பிரதிநிதிகள் வைஸ்ராயிடமிருந்து உறுதிமொழியைப் பெறத் தவறிய போதிலும், இக்கூட்டம் அகில இந்திய முஸ்லீம் லீக் (AML) ஏற்படுத்தப்பட அடித்தளமிட்டது.
  • முஸ்லீம் லீக் டிசம்பர் 30, 1906 இல் நவாப் சலீம் உல்லாகான் தலைமையில் நிறுவப்பட்டது.
  • ஆரம்பத்தில், முஸ்லீம் லீக் நகர முஸ்லீம்களின் உயர் வர்க்க அமைப்பாக இருந்தது.
  • வங்காளப் பிரிவினையை முஸ்லீம் லீக் ஆதரித்தது, முஸ்லீம்களுக்குத் தனித் தொகுதிகளைக் கோரியது, அரசுப் பணியில் உள்ள முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு அளிக்க அழுத்தம் கொடுத்தது.

நோக்கங்கள்

  • பிரித்தானிய அரசாங்கத்தின் மீதான விசுவாச உணர்வுகளை இந்திய முஸ்லிம்களிடையே ஊக்குவித்தல், மேலும் அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கை தொடர்பாக எழக்கூடிய தவறான எண்ணங்களை நீக்குதல்.
  • இந்திய முஸ்லிம்களின் அரசியல் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல், அவர்களின் தேவைகளை அரசாங்கத்திற்கு பிரதிநிதித்துவப்படுத்துதல்.
  • சமூகங்கள் மீது எந்தவிதமான விரோத உணர்வும் இந்திய முஸ்லிம்களிடையே எழுவதைத் தடுப்பது.
  • உருவான மூன்று ஆண்டுகளுக்குள், முஸ்லீம்களுக்கென தனித் தொகுதி உரிமையை வெற்றிகரமாக அடைந்தது.
  • லக்னோ ஒப்பந்தம் (1916) முஸ்லீம் லீக்கிற்கான தனி அரசியல் அடையாளத்தை வழங்கியது.

அகில இந்திய இந்து மகாசபை

  • அம்பாலாவில் நடந்த ஐந்தாவது பஞ்சாப் இந்து மாநாட்டிலும், ஃபெரோஸ்பூரில் நடந்த ஆறாவது மாநாட்டிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, 1915ல் ஹரித்வாரில் இந்திய இந்துக்களின் முதல் மாநாடு கூட்டப்பட்டது.
  • டெராடூனை தலைமையிடமாகக் கொண்டு அகில இந்திய இந்து மகாசபை அங்கு தொடங்கப்பட்டது.
  • உ.பி, பம்பாய் மற்றும் பீகாரில் மாகாண இந்து சபைகள் பின்னர் தொடங்கப்பட்டன.
  • பம்பாய் மற்றும் பீகாரில் சபாக்கள் செயல்படவில்லை என்றாலும், மெட்ராஸ் மற்றும் வங்காளத்தில் சிறிய வரவேற்பு இருந்தது.
  • அரசியல் களத்தில் இந்து மறுமலர்ச்சி சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்து மகாசபை, முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகள் வேண்டும் என்ற முஸ்லீம் லீக்கின் கோரிக்கைக்கு எதிராக அகண்ட ஹிந்துஸ்தான் என்ற முழக்கத்தை எழுப்பியது.
  • தொடக்கத்திலிருந்தே, சுதந்திரப் போராட்டத்தில் மகாசபையின் பங்கு மிகவும் சர்ச்சைக்குரியது.
  • பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும், தேசியவாத இயக்கத்திற்கும் தனது முழு ஆதரவையும் வழங்கவில்லை.
  • கிலாபத் இயக்கம் வகுப்புவாதிகளின் பிரிவினைவாத அரசியலுக்கு சிறிது ஓய்வு கொடுத்தது, இதன் விளைவாக, 1920 மற்றும் 1922 க்கு இடையில், மகாசபை செயல்படுவதை நிறுத்தியது.
  • கிலாபத் இயக்கத்தின் போது முஸ்லிம்களை அணிதிரட்டியது இந்து அமைப்பினரையும் இதே போன்று இந்து மக்களை அணிதிரட்ட முடியும் என ஊக்கப்படுத்தியது.
  • 1921 இல் வேல்ஸ் இளவரசரின் வருகையைப் புறக்கணிப்பதில் இந்துக்களை ஈர்க்கும் முயற்சியில், சுவாமி ஷ்ரதானந்தா பசு பாதுகாப்புப் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்து மகாசபைக்கு புத்துயிர் அளிக்க முயன்றார்.
  • பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மற்றும் இந்து நிலப்பிரபுக்கள் இருவருக்கும் எதிராக முஸ்லீம் விவசாயிகளின் மலபார் கிளர்ச்சி, இந்து மகாசபாவின் பிரச்சாரத்திற்கு மற்றொரு காரணத்தைக் கொடுத்தது.
  • 1924 இல் லாலா லஜபதி ராய் பஞ்சாப் மாநிலத்தை இந்து மற்றும் முஸ்லிம் மாகாணங்களாகப் பிரிக்க வேண்டும் என்று வெளிப்படையாக வாதிட்டார்.

ஐக்கிய மாகாணங்களில் வகுப்புவாதம்

  • ஒத்துழையாமை இயக்கத்தின் விளைவாக, கிலாஃபத் இயக்கவாதிகளுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான கூட்டணி முறிந்தது.
  • ஐக்கிய மாகாணத்தில் இனவாத பதற்றம் இந்து மற்றும் முஸ்லீம் மதத் தலைவர்களின் ஆர்வத்தால் மட்டுமல்ல, சுயராஜ்ஜியவாதிகளின் அரசியல் போட்டிகளால் தூண்டப்பட்டது.
  • அலகாபாத்தில் மோதிலால் நேருவும் மதன் மோகன் மாளவியாவும் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர்.
  • 1923ல் நடந்த நகராட்சித் தேர்தலில் நேருவின் பிரிவு வெற்றி பெற்றபோது, மாளவியாவின் பிரிவு மத உணர்வுகளைப் பயன்படுத்தத் தொடங்கியது.

டெல்லி முஸ்லிம்களின் மாநாடு மற்றும் அவர்களின் முன்மொழிவுகள்

  • நான்கு முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், தனித் தொகுதிகளை விட்டுக்கொடுப்பதாக டெல்லியில் கூடிய முஸ்லிம்கள் மாநாடு மார்ச் 20, 1927 அன்று அறிவித்தது ஒற்றுமைக்கான முயற்சிககளுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது.
  1. பம்பாயிலிருந்து சிந்து பகுதியை தனி மாகாணமாக பிரித்தல்.
  2. பலுசிஸ்தான் மற்றும் அதன் எல்லைகளை மாற்றி அமைத்தல்.
  3. பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் மக்கள்தொகை மூலம் பிரதிநிதித்துவம் வழங்குதல்.
  4. மத்திய சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு முப்பத்து மூன்று சதவீத இடங்கள் வழங்குதல்.
  • மோதிலால் நேரு மற்றும் எஸ்.ஸ்ரீனிவாசன் ஆகியோர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை முஸ்லிம்கள் மாநாட்டின் டெல்லி முன்மொழிவுகளை ஏற்கும்படி வற்புறுத்தினர்.
  • சிக்கலைத் தீர்ப்பதற்கான வாய்ப்பைப்  பயன்படுத்துவதற்குப் பதிலாக, கமிட்டிகளை நியமிப்பதன் மூலம் காங்கிரஸ் அந்த வாய்ப்பை இழந்தது
  • சிந்துவை பம்பாயிலிருந்து பிரிப்பது நிதி ரீதியாக சாத்தியமா என்பதைக் கண்டறிய மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவம் முஸ்லீம் பெரும்பான்மையைப் பாதுகாக்கும் வழிமுறையா  என்பதை ஆராய என இரண்டு குழுக்களை நியமித்தது
  • இருவருக்குமிடையிலான பிளவைக் குறைக்க முன்முயற்சி எடுத்து, சரோஜினியால் இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவராகப் பாராட்டப்பட்ட ஜின்னா, 1928ல் கல்கத்தாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட இந்து மகாசபை உறுப்பினர்கள் தனது அனைத்துக் கோரிக்கைகளையும் நிராகரித்ததால் ஏமாற்றமடைந்தார்.
  • விரக்தியில் ஜின்னா நாட்டை விட்டு வெளியேறினார், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வகுப்புவாதியாகத் திரும்பினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!