இந்தியாவில் வகுப்புவாத வன்முறைகள் பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும் விவரித்து எழுதுக

வகுப்புவாத வன்முறைகள்:

  • வகுப்புவாத வன்முறை என்பது இரண்டு வெவ்வேறு மத சமூகங்கள் ஒவ்வொருக்கொருவர் அணி திரண்டு விரோதம், உணர்ச்சி சீற்றம், கரண்டல், சமூக உணர்வுகள் பாகுபாடு மற்றும் சமூக புறக்கணிப்பு ஆகிய உணர்வுகளை சுமந்து செல்வதாகும்.
  • வகுப்புவாத கலவரம் என்பது தென்னிந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவைக் காட்டிலும் வட இந்தியாவில் அதிக அளவில் உள்ளது.
  • வெடிகுண்டுச் சம்பவம் எ.கா. டிசம்பர் 1992 அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு மற்றும் 1993-ல் மும்பை வகுப்புவாத வன்முறைக்கு எடுத்துக்காட்டுகளாகும். ஆகியவை வகுப்புவாத கலவரங்களுக்கான காரணங்கள்

சமூகக் காரணிகள்

சமுதாயப் பிரச்சனைகள்:

  • வறுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் பாதுகாப்பின்மை இவையெல்லாம் வேலை மற்றும் பொருளாதார வாய்ப்பு பெறுவதில் ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கக்கூடும்.
  • சமத்துவமின்மை முதலாளித்துவ வளர்ச்சி என்பது சில சமூக அடுக்குகளுக்கு மட்டுமே செழிப்பை உருவாக்கியது.
  • சமூகப் பொறாமை, அதிகாரம் மற்றும் கௌரவம் குறைந்து இருப்பவர்களிடத்திலே தோன்றுவதும் ஒரு காரணமாகும்.
  • சமூகத்தின் மீதான கோபம் மற்றும் விரக்தி வாய்ப்பு வரும்போதெல்லாம் வறிய மக்கள் தன்னிச்சையான வன்முறையை வெளிப்படுத்துவதைக் காணலாம்.
  • மதத்தை அடிப்படையாகக் கொண்ட சமூக அடுக்கு
  • நிலப்பிரச்சனைகள், உள்ளூர் சமூக விரோதக் கூறுகள் மற்றும் குழு போட்டிகள்.

மதக் காரணிகள்

  • மதவாதி தனது அரசியலை மத வேறுபாடுகள், மத அடையாளம் ஆகியவற்றை முன்னிறுத்தி மக்களை ஒரு மதம்சார்ந்த ஒழுங்கமைக்கும் கொள்கையாக பயன்படுத்துகிறார்.
  • மக்களை அணிதிரட்டுவதற்கு மதத்தைப் பயன்படுத்துதல்
  • மத வேறுபாடு என்பது மதச்சார்பற்ற சமூகத்தின் தேவைகள், ஆர்வம் இவையனைத்தையும் மறைக்கப் பயன்படுகிறது.
  • சகிப்புத்தன்மை மற்றும் மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகளின் மதிப்பு சரிவு, குறுகிய மத நம்பிக்கைகள், மதத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துதல், மதத் தலைவர்களின் வகுப்புவாத சித்தாந்தம் ஆகியவை இதில் அடங்கும்.

அரசியல் காரணிகள்:

  • மதத்தை விட அரசியலைச் சார்ந்தே வகுப்புவாதக் கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
  • மதம் சார்ந்த அரசியல், மத ஆதிக்கத்தைக் கொண்ட அரசியல் அமைப்புகள் ஆகியவை இதில் அடங்கும்.
  • மதவிவகாரங்களில் அரசியல் தலையீடு, அரசியல்வாதிகளின் சொந்த நலனுக்காக மத விவகாரங்களை தூண்டுதல் மற்றும் ஆதரித்தல்
  • அரசியல் தலைமையின் தோல்வி

பொருளாதாரக் காரணிகள்:

  • சிறுபான்மையின சமூகங்கள் மீதான பொருளாதார சுரண்டல் மற்றும் பாகுபாடு அவர்களின் சமச்சீரற்ற பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது.
  • போட்டிச் சந்தையில் போதிய வாய்ப்புகள் இல்லாதிருத்தல், விரிவடையாத பொருளாதாரம், இடப்பெயர்வு, சிறுபான்மையின தொழிலாளர்கள் போட்டிச் சந்தையில் உள்ளடங்காமல் இருப்பது.
  • மதமோதல்களைத் தூண்டுவதில் வளைகுடா நாடுகளின் பணத்தின் தாக்கம்.

சட்டக் காரணிகள்:

  • ஒரே மாதிரியான பொது உரிமையியல் சட்டம் இல்லாதிருத்தல்
  • அரசியலமைப்பில் சில வகுப்புகளுக்கு மட்டும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டிருப்பது
  • குறிப்பிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, இட ஒதுக்கீடு கொள்கை.
  • வெவ்வேறு வகுப்புகளுக்கான சிறப்புச் சட்டங்கள்

உளவியல் காரணிகள்:

  • ஒரு குறிப்பிட்ட மதத்தை பற்றிய தவறான உணர்வு,
  • ஒரே மாதிரியான அணுகுமுறைகள், அவநம்பிக்கை, விரோதப்போக்கு மற்றும் அக்கறையின்மை.
  • வெகுஜன ஊடகங்கள் வழங்கும் தவறான தகவல் / தவறான விளக்கம்/ தவறான சித்தரிப்பு

நிர்வாகக் காரணிகள்:

  • காவல் துறைக்கும், பிற நிர்வாகத்துக்கும் இடையில் போதிய ஒருங்கிணைப்பு இல்லாமை.
  • காவல் பணியாளர்களுக்கு சரியான பயிற்சி இல்லாமை.
  • ஒரு பக்கச்சார்பான காவல் துறையினர் மற்றும் காவல் பணியாளர்களின் செயலற்றத் தன்மை.

வரலாற்றுக் காரணிகள்:

  • அந்நியப் படையெடுப்புகள் மத ஆலயங்களை சேதப்படுத்தின.
  • காலனித்துவ ஆட்சியாளர்களின் பிரித்தாளும் கொள்கை, பிரிவினையால் ஏற்பட்ட குழப்பங்கள்
  • வகுப்புவாத கலவரங்கள் மற்றும் நிலம், கோயில்கள், மசூதிகள் ஆகியவற்றின் மீதான பழைய பிரச்சினைகள்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!