வரதட்சணை தடைச் சட்டம், 1961:
- வரதட்சணை – எந்தவொரு சொத்து அல்லது மதிப்புமிக்கவற்றை ஒரு தரப்பு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மற்றொரு தரப்பினருக்கு திருமணத்திற்காக வழங்குதல் அல்லது வழங்கப்படுவதை ஒப்புக் கொள்ளுதல்.
- அபராதம் – வரதட்சணை கொடுப்பது / வாங்குவது/ கோருவது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும்.
- வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்டது.
- விதிகளை உருவாக்குவதற்கான அதிகாரம் அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிப்பதன் மூலம் பாராளுமன்றம் இந்த சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான விதிகளை உருவாக்கலாம்.
இந்திய தண்டனைச் சட்டம் – 304 பி மற்றும் இந்திய சாட்சிய சட்டம், 1872
- இதில் வரதட்சணை இறப்புகளின் வரையறை குறிப்பிடப்பட்டுள்ளது.
- தண்டனை – பெண்களின் கணவர் மற்றும் உறவினர்கள் ஏழு ஆண்டுகளுக்கு குறையாத, ஆனால் ஆயள்.வரை தண்டனை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனை.
இந்திய தண்டனைச்சட்டம் 498 ஏ
- பெண்களுக்கான வன்கொடுமைகள் எவை என்று வரையறுக்கப்பட்டது.
- தண்டனை – மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005:
- அனைத்து வகையான உடலளவிலோ, மனதளவிலோ, பொருளாதார ரீதியிலோ மற்றும் பாலியல் ரீதியிலோ தீங்கு விளைவித்தலை உள்ளடக்கியது.
- குடும்ப வன்முறை வரையறையின் கீழ் வரதட்சணைக்கான கோரிக்கை அடங்கும்.