இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்

இனியவை நாற்பது

  • இனியவை நாற்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் பூதஞ்சேந்தனார்.
  • இனியவை நாற்பது நூலில் மொத்தம் 41 பாடல்கள் (1 + 40) உள்ளன.
  • இவை இவை இனிமை பயப்பவை என (நாற்பது) 40 பாடல்களில் கூறுவதால் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது. இனியவை நாற்பது நூலில் மொத்தம் 124 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளன.
  • இனியவை நாற்பது நூல் வெண்பா வகையால் எழுதப்பட்டுள்ளது.
  • பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகக் கூறும் வழக்கத்தை முதன் முதலாக கூறிய நூல் இனியவை நாற்பது
  • மும்மூர்த்திகளை வணங்கும் கடவுள் வாழ்த்து பாடல் இனியவை நாற்பது நூலில் இடம்பெற்றுள்ளது.
  • கடவுள் வாழ்த்து பாடலில் சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்தி மூவரையும் வணங்குதல் இனிது என இனியவை நாற்பது கூறுகிறது.

பூதஞ்சேத்தனார்

  • இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் பூதஞ்சேந்தனார்.
  • மதுரை தமிழாசிரியரின் மகனார் பூதஞ்சேந்தனார்
  • பூதஞ்சேந்தனார் பிறந்த ஊர் மதுரை.
  • பூதஞ்சேந்தனாரின் காலம் கி.பி (இர டாம்) 2ம் நூற்றாண்டு.

இனியவை நாற்பது நூலின் சில தொடர்கள்

  • ஊனைத் தின்று ஊனைப்பெருக்காமை முன் இனிதே
  • மானம் அழிந்த பின் வாழாமை முன் இனிது
  • வருவாய் அறிந்து வழங்கல் இனிது
  • கடமுண்டு வாழாமை காண்டல் இனிது
  • கயவரைக் கை கழிந்து வாழ்தல் இனிது ஒப்ப முடிந்தால் மனை வாழ்க்கை முன் இனிது .
  • குளவி தளர் நடை காண்டல் இனிது
  • தடமெனத் பணைத் தோள் தளிர் இயலாரை விடமென்று உணர்த்தல் இனிது.

முந்தைய ஆண்டு வினாக்கள்

‘இனியவை நாற்பது’ நூலின் ஆசிரியர் யார்?
(A) தாயுமானவர்
(B) சச்சிதானந்தன்
(C) பூதஞ்சேந்தனார்
(D) கபிலர்

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!