உயிரி வாயு என்றால் என்ன? அதன் நன்மைகள் மற்றும் மேன்மைகள் யாவை?

உயிரி வாயு

  • உயிரி வாயு என்பது மீத்தேன் (75%), ஹைட்ரஜன் சல்பைட், கார்பன்-டைஆக்ஸைடு, மற்றும் ஹைட்ரஜன் சேர்ந்த கலவையாகும். இவ்வாயு விலங்குகள் மற்றும் தாவரங்களின் கழிவுகள், காற்றில்லாச் சூழலில் மட்கும் போது (சிதைவடையும் போது) உருவாகிறது. 
  • பொதுவாக இவை “கோபர் கேஸ்” (கோபர் (ஹிந்தி) = மாட்டுச் சாணம்) என்றும் அழைக்கப்படுகிறது.

உயிரி வாயுவின் பயன்கள்:

  • சமையலுக்கான எரிபொருளாகப் பயன்படுகிறது.
  • நீரேற்றப் பயன்படும் மோட்டார்களையும் இயந்திரங்களையும், இயக்குவதற்குப் பயன்படுகிறது.
  • மின்சார உற்பத்திக்குப் பயன்படுகிறது.

உயிரி வாயுவின் மேன்மைகள்:

இவை எரியும் போது 

  • புகையை வெளியிடுவதில்லை. எனவே இவை குறைந்த மாசினை உண்டாக்குகின்றன.
  • உயிரியக் கழிவுகள் மற்றும், கழிவுப்பொருட்கள் போன்ற கரிமப் பொருள்களை சிதைவடையச் செய்வதற்கு மிகச் சிறந்த வழியாகும்.
  • படியும் கழிவுகளில் பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் அளவு மிகுந்திருப்பதால், அதனை சிறந்த உரமாக பயன் படுத்தலாம்.
  • இது பயன்படுத்த, பாதுகாப்பானதும் வசதியானதுமாகும். 
  • பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறும் அளவை பெருமளவில் குறைக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!