ஐம்பெருங்காப்பியம் – சிலப்பதிகாரம் இளங்கோவடிகள்

ஐம்பெருங்காப்பிய முறை வைப்பு திருத்தணிகை உலா

  • “சிந்தாமணியாம் சிலப்பதிகாரம் படைத்தான் கந்தா மணிமேகலை புனைந்தான் – நந்தா வளையாபதி தருவான் வாசவனுக்கீந்தான் திளையாத குண்டலகேசிக்கும்” – திருத்தணிகை உலா

இரட்டைக் காப்பியங்கள்

  • தொடர்நிலைச் செய்யுள் வரியில் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழ்கின்றன.

சிலப்பதிகாரம்

  • கோவலன், கண்ணகி, மாதவி வாழ்கையைப் சிலப்பதிகாரம் பாடுகின்றது.

சிலப்பதிகாரம் சிறப்பு பெயர்கள்

  • தமிழின் முதல் காப்பியம்
  • உரையிட்ட பாட்டுடைச் செய்யுள்
  • குடிமக்கள் காப்பியம்
  • ஒற்றுமைக் காப்பியம்
  • புரட்சிக் காப்பியம்
  • முத்தமிழ்க் காப்பியம்,
  • மூவேந்தர் காப்பியம்
  • பொதுமைக் காப்பியம்
  • வரலாற்றுக் காப்பியம்
  • தமிழரின் கலை நாகரீகம் பண்பாடு உள்ளடக்கிய கருவூலம்
  • தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம் இது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
  • செய்யுளாகவும் பாடலாகவும் உரைநடையாகவும் பாடப்பட்டுள்ளதால் ‘உரையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்றும் சிலப்பதிகாரம் அழைக்கப்படுகிறது
  • அரசகுடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால் சிலப்பதிகாரம் ‘குடிமக்கள் காப்பியம்’ எனப்படுகிறது
  • முதன் முதலாகப் பெண்ணை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு, அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடியதால் ‘புரட்சிக் காப்பியம்’ எனப்படுகிறது சிலப்பதிகாரம்.
  • இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கூறுகளும இடம்பெற்றுள்ளதால் சிலப்பதிகாரம் ‘முத்தமிழ்க் காப்பியம்’ எனப்படுகிறது.
  • புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சோழ, பாண்டிய, சேர மன்னர்களைப் பற்றியது என்பதால் சிலப்பதிகாரம் ‘மூவேந்தர் காப்பியம்’ எனவும் அழைக்கப்படுகிறது.
  • குடிமக்கள் காப்பியம், ‘ஒற்றுமைக் காப்பியம்’ முத்தமிழ்க் காப்பியம். காப்பியம்’ எனவும் சிலப்பதிகாரம் அழைக்கப்படுகிறது
  • தமிழரின் கலை, நாகரிகம், பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகச் சிலப்பதிகாரம் திகழ்கிறது

.சிலப்பதிகாரம் நூல் அமைப்பு

  • சிலப்பதிகாரத்தில் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என (மூன்று) 3 காண்டங்கள் உள்ளது.
  • சிலப்பதிகாரம் (மூன்று) 3 காண்டங்களையும் (முப்பது) 30 காதைகளையும் உடையது.
  • திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக தொடங்குகிறது சிலப்பதிகாரம்

குறிப்பு : பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் மணிமேகலை

இளங்கோவடிகள்

  • சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.
  • இளங்கோவடிகள் இளங்கோவடிகள் கி.பி. (இரண்டாம்) 2ம் நூற்றாண்டு என்பர்.
  • இளங்கோவடிகள் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது.
  • இளங்கோவடிகள் தன் குறிப்பைத், தான் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பதையும் வரந்தரு காதையில் குறிப்பிட்டிருக்கிறார்.

சிலப்பதிகாரம் மணிமேகலை கதைத் தொடர்பு

  • மணிமேகலைக் காப்பியத்துடன் சிலப்பதிகாரம் கதைத் தொடர்புக் கொண்டிருப்பதால் சிலப்பதிகாரம் மணிமேகலை இவை இரண்டும் இட்டைக்காப்பியங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
  • சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.
  • மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்.
  • கோவலன் கண்ணகி கதையைக் கூறி சீத்தலைச் சாத்தனார், ‘இளங்ககோவடிகள் நீரே அருளுக’ என்றார்.
  • ‘நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் (சிலப்பதிகாரம்)’ என கூறி இளங்ககோவடிகளும் சிலப்பதிகார காப்பியம் படைத்தார் என்பர்.

இளங்கோவடிகளை பற்றி பாரதி

  • ‘சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்’ என்று பாரதி குறிப்பிடுகிறார்

பெருங்குணத்துக் காதலாள் நடந்த பெருவழி

  • கண்ணகியும் கோவலனும் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து உறையூர் மற்றும் திருவரங்கம் வழியாகக் கொடும்பாளூர் என்னும் இடத்தை அடைந்தனர்.
  • தென்னவன் சிறுமலையின் வலப்பக்கம் வழியாகச் சென்றால் மதுரையை அடையலாம்.
  • சிறுமலையின் இடப்பக்கம் வழியாகச் சென்றால் திருமால்குன்றம்(அழகர் மலை) வழியாக மதுரையை அடையலாம்.
  • இவ்விரண்டுக்கும் இடையில் சாலைகள் மிகுந்த ஊர்களும் காடுகளும் உள்ள இடைப்பட்ட வழியாகச் சென்றால் மூன்று வழிகளும் சந்திக்கும் மதுரைப் பெருவழியை அடைந்து, மதுரையை அடையலாம்.
  • கண்ணகியையும் கோவலனையும் இடைப்பட்ட வழியிலேயே கவுந்தியடிகள் அழைத்துச் சென்றார்.
  • மதுரையில் கணவனை இழந்தால் கண்ணகி.
  • மதுரையிலிருந்து புறப்பட்ட கண்ணகி வைகையின் தென்கரை வழியாக நெடுவேள் குன்றம் (சுருளி மலை) சென்று வேங்கை கானல் என்னுமிடத்தை அடைந்தாள்.

உரைப்பாட்டு மடை (உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்)

  • உரைப்பாட்டு மடை என்பது சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ்நடை.
  • உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு – உரைப்பாட்டு மடை.
  • வாய்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பிவிடுவது மடை,
  • உரை என்பது பேசும் மொழியின் ஓட்டம்.
  • பேசும் மொழியின் ஓட்டம், இதைச் செய்யுளாகிய வயலில் பாய்சுவது உரைப்பாட்டு மடை.

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!