ஒலி அலைகளை அதிர்வெண்ணைப் பொறுத்து வகைபடுதுக 

செவியுணர் ஒலி அலைகள்:

  • இவை 20Hz முதல் 20,000 Hz க்கு இடைப்பட்ட அதிர்வெண் உடைய ஒலி அலைகளாகும்.
  • இவை அதிர்வடையும் பொருட்களான குரல் நாண்கள் மற்றும் இழுத்துக் கட்டப்பட்ட கம்பி போன்றவைகளால் உருவாக்கப்படுகிறது.

குற்றொலி அலைகள்:

  • இவை 20 Hz ஐ விடக் குறைவான உடைய ஒலி அலைகளாகும், மனிதர்களால் கேட்க இயலாது.
  • நிலநடுக்கத்தின் போது உருவாகும் அதிர்வலைகள், கடல் அலைகள் மற்றும் திமிங்கலங்கள் ஏற்படுத்தும் ஒலி போன்ற ஒலிகள் குற்றொலி அலைகள் ஆகும்.

மீயொலி அலைகள்:

  • இவை 20,000 Hz க்கும் அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளாகும்.
  • மனிதர்களால் கேட்க இயலாது.
  • ஆனால் கொசு, நாய், வௌவால் மற்றும் டால்பின் போன்ற உயிரினங்களால் கேட்க இயலும். வௌவால் ஏற்படுத்தும் ஒலியினை மீயொலிக்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.

Also Read

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!