ஒளியின் பண்புகளை வரிசைப்படுத்துக.

ஒளியின் பண்புகள்

  • ஒளி என்பது ஒருவகை ஆற்றல்.
  • ஒளி எப்போதும் நேர்க்கோட்டில் செல்கிறது.
  • ஒளி பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை. வெற்றிடத்தின் வழியாகக் கூட ஒளிக்கதிர் செல்லும்.
  • காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் C = 3 ×108 மீவி-1
  • ஒளியானது அலை வடிவில் செல்வதால் அது அலைநீளம் (A) மற்றும் அதிர்வெண் (v) ஆகிய பண்புகளைப் பெற்றிருக்கும் இவை C = v λ என்ற சமன்பாட்டின் மூலம் தொடர்புபடுத்தப் படுகிறது.
  • ஒளியின் வெவ்வேறு நிறங்கள் வெவ்வேறு அலை நீளங்களையும், அதிர்வெண்களையும் பெற்றிருக்கும்.
  • கண்ணுறு ஒளியில் ஊதா நிறம் குறைந்த அலை நீளத்தையும், சிவப்பு நிறம் அதிக அலை நீளத்தையும் கொண்டிருக்கும்.
  • ஒளியானது இரு வேறு ஊடகங்களின் இடைமுகப்பை அடையும் போது, அது பகுதியளவு எதிரொளிக்கும், பகுதியளவு விலகல் அடையும்.

Also Read

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!