கல்கத்தாவின் ஆளுநர், தலைமை ஆளுநராக மாற்றப்பட்டு சென்னை மற்றும் மும்பை மாகாணங்கள் அவரின் தலைமைக்கு கீழ் கொண்டு செல்லப்பட்டது.
கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் ஏற்படுத்த வழிவகுத்தது. இதன்படி 1774ல் கல்கத்தாவில் உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டு இந்தியாவின் முதல் தலைமை நீதிபதியாக சர் எலிஜா இம்பே நியமிக்கப்பட்டார்.
தலைமை ஆளுநருக்கு உதவி செய்ய 4 பேர் அடங்கிய நிர்வாக் குழு ஏற்படுத்தப்பட்டது. தலைமை ஆளுநருக்கு அறுதி வாக்குரிமை வழங்கப்பட்டது.
இயக்குநர் குழுவின் பதவிக்காலம் 1 ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டது.
போர் மற்றும் அமைதி சார்ந்த விசயங்களில் தலைமை ஆளுநரும் அவர் குழுவும் உச்ச அதிகாரத்தை கொண்டிருந்தனர்.
கம்பெனியின் ஊழியர்கள் தலைமை நீதிபதி மற்றும் தலைமை ஆளுநர் பரிசுகள் பெறுவது தடைசெய்யப்பட்டது.
சட்டத்தின் சாதகங்கள்
கம்பெனியின் நடவடிக்கைகள் முதன் முறையாக பிரிட்டீஸ் பாராளுமன்றத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இந்திய மக்களின் நன்மையின் மேல் பாராளுமன்றம் அக்கறை கொண்டிருப்பதாக இச்சட்டம் காட்டியது.