கில்ஜி வம்சம் (பொ.ஆ. 1290 – 1320)

ஜலாலூதீன் பெரோஸ் கில்ஜி (1290 – 1296)

  • அமைதியான முறையில் ஆட்சியை நடத்தினார். மேலும் இரத்தம் சிந்தாத ஆட்சியை வழங்க விரும்பினார்.
  • எனவே இவர் கருணை உள்ளம் கொண்ட ஜலாலூதின் எனப் புகழப்பட்டார்.
  • மங்கோலிய கூட்டங்களை எதிர்த்து அணிவகுத்த அவர், இந்தியாவுக்குள் அவர்கள் நுழைவதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினார் (1292)
  • காராவின் பொறுப்பு ஆளுநரான அலாவுதின் கில்ஜி, ஜலாலுதினின் உடன்பிறந்தாரின் மகனும் மருமகனுமாவார்.
  • அலாவுதீன் இச்சமயத்தில் மால்வா மீது படையெடுத்து பெருஞ்செல்வத்துடன் திரும்பினார்.
  • அலாவுதீன் கில்ஜியின் முக்கியப் படையெடுப்பு தக்காண அரசான தேவகிரிக்கு எதிராக மேற்கொண்டதாகும்.
  • அலாவுதீன் தேவகிரி யாதவ அரசர் ராமச்சந்திரனைத் தோற்கடித்த பின்னர் அந்நகரைக் கொள்ளையடித்துப் பெருஞ்செல்வத்தோடு திரும்பினார்.
  • டெல்லி திரும்பிய அலாவுதீனின் ஏற்பாட்டில் ஜலாலுதீன் கொல்லப்பட்டார்.
  • அதனைத் தொடர்ந்து 1296இல் தன்னை டெல்லியின் சுல்தானாக அறிவித்துக் கொண்டார்.
  • இவ்வாறாக ஜலாலுதீனின் ஆறாண்டுக் கால ஆட்சி 1296இல் முடிவுக்கு வந்தது.

அலாவுதீன் கில்ஜி (1296-1316)

  • தனது தலைமைத் தளபதி மாலிக் கபூரை 1310 இல் தென்புலத்தின் வெகுதொலைவிலுள்ள மதுரை வரை படையெடுக்கப் பணித்தார்.
  • தக்காண அரசுகளான தேவகிரி யாதவர்கள், துவார சமுத்திரத்தின் ஹொய்சாளர்கள், வாராங்கல் காகத்யர்கள், மதுரைப் பாண்டியர்கள் ஆகிய அனைவரும் அலாவுதீனின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர்.
  • பாண்டியப் பேரரசில் நிகழ்ந்த வாரிசுரிமைப் போரில் மாலிக்கபூர் தலையிட்டு சுந்தர பாண்டியனை அரியணையில் அமரச் செய்தார்.

இராணுவத் தாக்குதல்கள்

  • 1301 இல் அலாவுதீன் கில்ஜி ராந்தம்பூருக்கு எதிராக போர் தொடுத்தார். மூன்று மாத முற்றுகைக்குப்பின் அது வீழ்ந்தது.
  • ராஜபுத்திரப் பெண்கள்ஜவுஹர் என்ற வழக்கப்படி தீக்குளித்து மாண்டனர். 
சித்தூர் சூறையாடல் (1303)·         சித்தூரில் ராஜபுத்திரப் படைகளை அலாவுதீனின் படைகள் திணறடித்த நிலையில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற சூழலில் கோட்டைக்குள் இருந்த ஆடவரும் பெண்டிரும் தங்களது பண்டைய மரபின்படி ஜவ்ஹர் எனப்படும் சடங்கை நடத்தினர்.

·         இதன்படி ஆடவர் கோட்டையை விட்டு வெளியேறிப் போர்க்களத்தில் மாள்வர்.

·         பெண்கள் தீப்புகுந்து தங்களை மாய்த்துக் கொள்வர்.

·         ராஜா ரத்தன்சிங்கும் அவனது வீரர்களும் வீரத்துடன் போரிட்டனர்.

 

இராணி பத்மாவதி:Ø  இராணி பத்மாவதி உள்ளிட்ட ரஜபுத்திர மகளிர் தீக்குளித்தனர்.

Ø  பத்மினி கதையை பத்மாவத் என்ற நூலில் ஜெயசி அழகாக விளக்கியுள்ளார்.

  • 1307 ஆம் ஆண்டு தேவகிரி கோட்டையைக் கைப்பற்றுவதற்காக மாலிக் கஃபூர் தலைமையில் ஒரு பெரும் படையை அலாவுதீன் அனுப்பினார்.
  • தெலுங்கானா பகுதியிலிருந்த வாராங்கல்லின் காகதீய அரசர் பிரதாபருத்ரதேவா 1309இல் தோற்கடிக்கப்பட்டார்.
  • 1310இல் தோல்வியடைந்த ஹொய்சாள அரசர் மூன்றாம் வீரவல்லாளன், அவரது செல்வங்கள் அனைத்தையும் தில்லித் துருப்புகளிடம் ஒப்படைத்தார்.
  • மாலிக் கஃபூர் தமிழ்நாட்டுக்குப் புறப்பட்டார்.
  • கனத்த மழை, வெள்ளத்தால் கஃபூர் முன்னேறுவது தடைபட்டபோதும், சிதம்பரம், திருவரங்கம் ஆகிய கோயில் நகரங்களையும் பாண்டியர் தலைநகரம் மதுரையையும் சூறையாடினார்.

அலாவுதீன் கில்ஜியின் நிர்வாகச் சீர்திருத்தங்கள்

  • சுல்தானின் ஒப்புதலோடு மட்டுமே மரபுக் குடும்பங்களுக்கிடையில் திருமண உறவுகள் அனுமதிக்கப்பட்டன.
  • மதுவும் போதை மருந்துகளின் பயன்பாடும் தடை செய்யப்பட்டன. சூதாட்டமும் தடை செய்யப்பட்டது.
  • குதிரைகளுக்குதாக் எனப்படும் சூடுபோடும் முறையையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

சந்தைச் சீர்திருத்தங்கள் 

  • படை வீரர்களுக்குக் கொள்ளையில் பங்கு தராமல் பணமாக ஊதியம் வழங்கிய முதல் சுல்தான் அலாவுதீன் ஆவார்.
  • அத்தியாவசியப் பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, கள்ளச்சந்தை, பதுக்கல் குறித்த விவரங்களை சேகரிப்பதற்கு விரிவான ஒற்றாடல் வலைப்பின்னலை ஏற்படுத்தினார்.
  • ஏதேனும் எடைக் குறைவு கண்டுபிடிக்கப்பட்டால், விற்பவரின் உடலிலிருந்து அதற்குச் சமமான எடையுள்ள சதை வெட்டி அவரது கண் முன்னேயே வீசப்பட்டது.
  • அங்காடியைக் கட்டுப்படுத்த திவானி ரியாசத், சஹானா-இ-மண்டி என்று இரு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

அலாவுதீன் வாரிசுகள்

  • மாலிக் கபூர் தாமே அரசாங்க அதிகாரத்தை எடுத்துக்கொண்டார்.
  • ஆனால் ஆட்சிக்கு வந்த வெறும் முப்பத்தைந்தே நாள்களில் பிரபுக்களால் கொல்லப்பட்டார்.
  • மங்கோலியருக்கு எதிரான பல படையெடுப்புகளில் பங்கேற்ற திறமைசாலியான காஸி மாலிக், 1320இல் கியாசுதீன் துக்ளக் ஆக ஆட்சியில் அமர்ந்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!