குப்தர்கள்
- மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் வட இந்தியாவில் குஷாணர்களாலும், தெற்கே சாதவாகனர்களாலும் நிறுவப்பட்டிருந்த வலிமை வாய்ந்த பேரரசுகள் பெருமையையும் வலிமையையும் இழந்தன.
- இச்சூழல் சந்திரகுப்தரை ஒரு அரசை உருவாக்கித் தனது வம்சத்தின் ஆட்சியை நிறுவ வைத்தது.
இலக்கியச் சான்றுகள்
- நாரதர், விஷ்ணு, பிருகஸ்பதி, காத்யாயனர் ஸ்மிருதிகள்.
- அரசருக்குக் கூறுவது போன்று எழுதப்பட்டுள்ள காமந்தகாரின் நீதிசாரம் என்ற தரும சாத்திரம் (பொ.ஆ.400)
- விசாகதத்தரின் தேவிசந்திரகுப்தம், முத்ராராட்சசம், பாணரின் ஹர் சரிதம் ஆகியவை குப்தரின் எழுச்சி குறித்த விவரங்களை அளிக்கின்றன.
- புத்த, சமண இலக்கியங்கள், காளிதாசர் படைப்புகள்.
- விஷ்ணு, மத்சய, வாயு, பாகவத புராணங்கள், நாரதரின் நீதி சாஸ்திரம்.
- இரண்டாம் சந்திரகுப்தரின் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த சீன பௌத்தத்துறவி பாகியானின் பயணக் குறிப்புகள்.
கல்வெட்டுச் சான்றுகள்
- மெஹ்ரோலி இரும்புத் தூண் கல்வெட்டு முதலாம் சந்திரகுப்தரின் சாதனைகளை குறிக்கிறது.
அலகாபாத்தூண் கல்வெட்டு: Ø சமுத்திரகுப்தரின் ஆட்சி, அவரது ஆளுமை, சாதனைகள் ஆகியவற்றை இது விளக்குகிறது. Ø இதனைப் பொறித்தவர் ஹரிசேனர். Ø இது 33 வரிகளில் நாகரி வரிவடிவத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. |
- இரண்டாம் சந்திரகுப்தரின் உதயகிரி குகைக் கல்வெட்டு, மதுரா பாறைக் கல்வெட்டு, சாஞ்சி பாறைக் கல்வெட்டு,
- ஸ்கந்த குப்தரின் பிதாரி தூண் கல்வெட்டு, கத்வா பாறைக் கல்வெட்டு, மதுபான் செப்புப் பட்டயம், சோனாபட் செப்புப் பட்டயம், நாளந்தா களிமண் முத்திரைப் பொறிப்பு.
நாணய ஆதாரங்கள்
- குப்த அரசர்களால் வெளியிடப்பட்ட தங்க, வெள்ளி, செப்பு நாணயங்கள்