குமாரகுப்தர் – வரலாறு

குமாரகுப்தர்

  • இரண்டாம் சந்திரகுப்தரைத் தொடர்ந்து அவருடைய மகன் முதலாம் குமாரகுப்தர் அரியணை ஏறினார்.
  • அவரே நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர்.
  • இவர் பொ.ஆ. 455 வரை ஆட்சி செய்தார். இவர் சக்ராதித்யர் என்றும் அழைக்கப்பட்டார்.
  • குமாரகுப்தரைத் தொடர்ந்து அரசப் பதவியேற்ற ஸ்கந்தகுப்தர் ஹூணர்களின் படையெடுப்பைச் சந்திக்க நேரிட்டது.
  • ஸ்கந்தகுப்தர் அவர்களைத் தோற்கடித்து விரட்டி அடித்தார்.
  • இவர் வரலாற்றறிஞர்களால் குப்த பேரரசின் கடைசி பேரரசராக அறியப்படுகிறார்.
  • பாலாதித்யருக்குப் பின்னர் மாபெரும் குப்தப் பேரரசு தேய்ந்து காணாமற்போனது.
  • குப்தப் பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் விஷ்ணுகுப்தர் ஆவார்.
  • இவர் பொ.ஆ. 540 முதல் 550 வரை ஆட்சி புரிந்தார்.

நாளந்தா பல்கலைக்கழகம்

  • நாளந்தா பல்கலைக்கழகம் ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் குப்தப் பேரரசின் ஆதரவில் தழைத்தோங்கியது. பின்னர் கன்னோசியைச் சேர்ந்த பேரரசர் ஹர்ஷரின் ஆதரவில் சிறப்புற்றது.
  • இது யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படும் உலகின் தொன்மைச் சின்னமாகும்.
  • அந்த வளாகத்தில் எட்டு மகாபாடசாலைகளும் மூன்று மிகப்பெரிய நூலகங்களும் இருந்தன.
  • நாளந்தா பல்கலைக்கழகம் பொ.. 1200 இல் பக்தியார் கில்ஜி என்பாரின் தலைமையில் வந்த மம்லுக்குகள் என அழைக்கப்பட்ட துருக்கிய இஸ்லாமிய அடிமை வீரர்களால் அழித்துத்தரைமட்டம் ஆக்கப்பட்டது.
  • முறையான அகழாய்வு 1915 இல் ஆரம்பித்தது. அப்போது 12 ஹெக்டேர் பரப்பில் (30 ஏக்கர்) அமைந்திருந்த பதினோரு மடாலயங்களும், ஆறு செங்கல் கோயில்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!