குயில் பாட்டு – பாரதியார்

  • பாரதியின் குயில்பாட்டு என்ற படைப்பில் இசையின் பெருமை பேசப்படுகிறது.
  • குயில்பாட்டு பாரதியார் பாடிய கவிதைகளுள் ஒப்பற்ற கற்பனைக் கதைப்பாட்டாகும்.
  • இசையின் உருவகமாக பாரதி எடுத்துக்கொள்ளுவது குயில்.
  • குயிலின் குரல் ஒலியில் உள்ளத்தைப் பறிகொடுத்த கவிஞர் அதன்மேல் காதல் கொள்வதை ஒரு கனவுக் காட்சியாய்த் தத்துவக் கருத்துக்களை உள்ளடக்கி பாரதி பாடியது குயில் பாட்டு.
  • குயில் பாட்டு, தன்னுணர்ச்சி வெளிப்பாடாய், அகப்பொருள் நயமும் கவிதைச் சுவையும், கற்பனை நலமும்.அழகிய வருணனையும், நிறைந்த பாடல் ஆகும்.

முந்தைய ஆண்டு வினாக்கள்

‘நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும் பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்’ என்ற பாரதியின் வரிகள் இடம்பெற்ற நூல்
(A) கண்ணன் பாட்டு
(B) குயில் பாட்டு
(C) பாஞ்சாலி சபதம்
(D) பாப்பாப் பாட்டு
(E) விடை தெரியவில்லை

“பிறகு விழிதிறந்து பார்க்கையிலே சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி எழுதுகோல்” -இப்பாடலடி இடம் பெற்றுள்ள கவிதை நூல் எது?
(A) தேன் மழை
(B) குயில் பாட்டு
(C) கொடி முல்லை
(D) மாங்களி

பொருந்தாத இணையைக் கண்டறிக
(A) சிறுபஞ்சமூலம் – காரியாசான்
(B) ஞானரதம் – பாரதியார்
(C) எழுத்து – சி.சு.செல்லப்பா
(D) குயில்பாட்டு – கண்ணதாசன்

 

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!