கொரோனா வைரஸ் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

கொரோனா வைரஸ்

  • கொரோன வைரஸ் (CoV) என்பது மிகப் பெரிய வைரஸ் குடும்பமாகும், இது சாதாரண ஜலதோசத்திலிருந்து மிகக் கடுமையான நோய்கள் வரை ஏற்படுத்துகிறது, 
  • அதாவது மத்திய கிழக்கு சுவாச நோய்குறி கொரோனா – வைரஸ் (MEBS – CoV) மற்றும் கடுமையான நுட்பமான சுவாச நோய்குறி (SARS – CoV) வரை ஏற்படுத்துகிறது.
  • கொரோனா வைரஸ்கள் ஜீனோடிக் வைரஸ் ஆகும். அதாவது அவை விலங்குகள் மற்றும் மனிதர்களிடையே பரவுகிறது.
  • கொரோனா வைரஸ்கள் மிகப்பெரியவை (120 -160 nm) வைரஸானது RNA வால் மூடப்பட்ட ஒற்றை நிலையான மரபணுவாகும்.
  • வைரஸானது செண்டு வடிவம் அல்லது கிரீடத்தை போன்ற சூரிய கொரோனாவின் தோற்றத்தைக் கொண்டது.
  • மரபணு மாற்றங்களின் உயர் விகிதங்கள் கொரோனா வைரஸில் காட்டப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை விலங்குகளையும் பறவைகளையும் பாதிக்கின்றன. 
  • மனித நோய்த்தொற்று, மனித சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றக்கூடியவர்களால் மட்டுமே ஏற்படுகிறது.

பரவும் முறை

  • இரண்டு முக்கிய வழிகளில் பரவுகிறது.
  1. சுவாசம்
  2. தொடர்பு
  • வைரஸ் முக்கியமாக பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து இரும்மும் போதும், சளியின் போதும் வெளிவரும் சிறிய நீர் திவலைகளால் பரவுகிறது.
  • அசுத்தமான மேற்பரப்பையும், பாதிக்கப்பட்ட நபரை தொடுவதன் மூலமும் மக்கள் பாதிக்கப்படலாம். 
  • இந்த வைரஸ் பரவிய தன்மையைப் பொருத்து, சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை அந்த மேற்பரப்பில் உயிர் வாழும்.
  • கோவிட் 19க்கான அடைகாக்கும் காலம் 1-14 நாட்களாகும். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!