சிறுபஞ்சமூலம்
- பதினெண் கீழக்கணக்கு நூல்களில் ஒன்று சிறுபஞ்சமூலம்.
- சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான்.
- சிறுபஞ்சமூலம் என்றால் ஐந்து (5) சிறிய வேர்கள் என்பது பொருள்.
- சிறுபஞ்சமூலம் குறிப்பிடும் ஐந்து (5) சிறிய வேர்கள்
- நெருஞ்சி
- கண்டங் கத்திரி
- சிறு வழுதுணை
- பெரு மல்லி
- சிறு மல்லி
- ஐந்து வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றது. அதுபோலச் சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.
- சிறுபஞ்சமூலப் பாடல்கள் எடுத்துக்காட்டுகின்ற வாழ்வியல் உண்மைகள்
- நன்மை தருவன.
- தீமை தருவன,
- நகைப்புக்கு உரியன
காரியாசான்
- சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான்.
- மதுரைத் தமிழாசிரியர் மாக்காயரின் மாணாக்கர் காரியாசான்.
- காரி என்பது இயற்பெயர்.
- ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்த பெயர்.
- மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.
அணி: எடுத்துக்காட்டு உவமை அணி.
பாடல்-22
பூவாது காய்க்கும் மரம் உள;
நன்று அறிவார், மூவாது மூத்தவர், நூல் வல்லார்;
தாவா, விதையாமை நாறுவ வித்து உள;
மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு*
பாடலின் பொருள்
பூக்காமலே சில மரங்கள் காய்ப்பதுண்டு.
இதைப் போலவே நன்மை, தீமைகளை நன்குணர்ந்தவர்,
வயதில் இளையவராக இருந்தாலும்,
அவர் மூத்தவரோடு வைத்து எண்ணத் தக்கவரே ஆவார்
பாத்தி அமைத்து விதை விதைக்காமலே, தானே முளைத்து
வளரும் விதைகளும் உள்ளன.
அதைப் போலவே மேதையரும் பிறர் உணர்த்தாமல் எதையும் தாமே உணர்ந்துகொள்வர்.
சொல்லும் பொருளும்
- மூவாது – முதுமை அடையாமல்
- நாறுவ – முளைப்ப
- தாவா – கெடாதிருத்தல்
முந்தைய ஆண்டு வினாக்கள்
‘சிறுபஞ்சமூலம்’ – என்பதில் ‘பஞ்சமூலம்’, என்பது எதைக் குறிக்கிறது?
(A) மூன்று வேர்கள்
(B) ஐந்து வேர்கள்
(C) நான்கு வேர்கள்
(D) ஆறு வேர்கள்
(E) விடை தெரியவில்லை
சிறுபஞ்சமூலம் என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் சமயம்
(A) இந்து சமயம்
(B) சமண சமயம்
(C) கிருத்துவ சமயம்
(D) பௌத்த சமயம்
“கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை” இடம்பெற்றுள்ள நூல்
(A) திரிகடுகம்
(B) நாலடியார்
(C) நான்மணிக்கடிகை
(D) சிறுபஞ்சமூலம்
நூலின் 97 வெண்பாவிலும் மனநோய் போக்கும் 5 கருத்துகள் கொண்டது
(A) மலைபடுகடாம்
(B) சிறுபஞ்சமூலம்
(C) ஏலாதி
(ID) திரிகடுகம்
சிறுபஞ்சமூலம் என்ற நூலில் கடவுள் வாழ்த்துடன் வெண்பாக்கள் உள்ளன.
(A) தொண்ணூற்றொன்பது
(B) தொண்ணூற்றேழு
(C) தொண்ணூற்றாறு
(D) நூற்றெட்டு
‘கண் வனப்புக் கண்ணோட்டம்,
கால் வனப்புச் செல்லாமை’ என உறுப்பழகு பாடியவர்
(A) பரணர்
(B) கபிலர்
(C) காரியாசான்
(D) முடியரசன்
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————