செயற்கைக்கோள்கள் என்றால் என்ன? அதன் பயன்களை குறிப்பிடு. இந்தியாவால் செலுத்தப்பட்ட செயற்கைகோள்களை பற்றி விவரி

செயற்கைக்கோள்கள்

  • செயற்கைக்கோள்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட மற்றும் அருகில் உள்ள கோளப்பாதைக்கு அனுப்பப்படும் வாகனங்கள். அவற்றின் உள்ளே ஆராய்ச்சிக்கு தேவையான பல்வேறு கருவிகள் உள்ளன.
  • அவை ஆளில்லா மற்றும் பூமி சார்ந்த விண்வெளி நிலையங்களிலிருந்து கட்டுப்படுத்தப்படுகின்றன.
  • அவற்றை விண்வெளியில் செலுத்த, சிறப்பு மனித வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பயன்கள்:

  • ஆராய்ச்சி – விண்வெளி மற்றும் வான உடல்களைப் படிக்க;
  • வழிசெலுத்தல் – பூமியின் பொருள்களின் இருப்பிடத்தை தீர்மானிக்க, சிக்னல் ரிசீவரின் வேகத்தையும் திசையையும் தீர்மானிக்க (ஜிபிஎஸ், “க்ளோனாஸ்”);
  • தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் – பூமியில் தொலைதூர புள்ளிகளுக்கு இடையே ஒரு ரேடியோ சிக்னலை அனுப்பும்;
  • வானிலை – வானிலை முன்னறிவிப்பிற்கான வளிமண்டலத்தின் நிலை குறித்த தரவைப் பெறுகிறது.

இந்தியாவால் செலுத்தப்பட்ட செயற்கைகோள்கள்:

  1. தகவல் தொடர்பு செயற்கைகோள்:
  • தொலைதொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு, செயற்கைகோள் செய்தி சேகரிப்பு, சமூக பயன்பாடுகள், வானிலை முன்னறிவிப்பு, பேரழிவு எச்சரிக்கை மற்றும் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை சேவைகளை அளிக்கிறது.
  • (எ.கா) இந்திய தேசிய செயற்கைகோள் (INSAT) அமைப்பு.
  1. புவி கண்காணிப்பு செயற்கைகோள்:
  • உலகின் மிகப்பெரிய செயல்படும் தொலையுணர்வு செயற்கைகோள் அமைப்பாகும்.
  • வேளாண்மை, நீர்நிலை வளங்கள், நகர்புற திட்டமிடல், கிராமப்புற மேம்பாடு, கனிம ஆய்வுகள், சுற்றுச்சூழல், வனவியல், பெருங்கடல் வளங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • (எ.கா) ரிசோர்ஸ்சாட், கார்டோசாட், ரைசாட், ஓஷன்சாட்.
  1. இடங்காட்டி செயற்கைகோள்;
  • உள்நாட்டு தயாரிப்பிலே நிலைப்படுத்துதல், இடங்காட்டுதல் மற்றும் நேர சேவைகள் போன்ற பயனர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான செயற்கைகோள்.
  • (எ.கா) ககன், பிராந்திய இடங்காட்டி செயற்கைகோள் அமைப்பு (IRNSS).
  1. அறிவியல் விண்கலம்
  • வானியல், வான் இயற்பியல், கோள்கள் மற்றும் புவி அறிவியல், வளிமண்டல அறிவியல் மற்றும் தத்துவம் சார்ந்த இயற்பியல் போன்ற பகுதிகளின் ஆராய்ச்சிக்கான விண்கலம்.
  • (எ.கா) அஸ்ட்ரோசாட், சந்திரயான், செவ்வாய் சுற்றுகலன் திட்டம் (Mom).
  1. சோதனை செயற்கைகோள்:
  • முக்கிய சோதனை நோக்கங்களுக்காக சிறிய செயற்கைகோள்களின் தொகுதி. இந்த சோதனையில் தொலை உணர்வு, வளிமண்டல ஆய்வுகள், ஆய்வுப் பொருள் மேம்பாடு, மீட்பு தொழில்நுட்பம் போன்றவை அடங்கும்.
  • (எ.கா) ஆர்படபட்டா
  1. சிறிய செயற்கைகோள்கள்:
  • 500 கிலோ எடை அளவு கொண்ட செயற்கைகோள்கள் விரைவான – திருப்புமுனை நேரத்திற்குள் புவியை படம் பிடித்தல் மற்றும் அறிவியல் பணிகள் ஆகியவற்றிற்கான தனித்தனி ஆய்வும் பொருள் தளமாகும்.
  • (எ.கா) பூத்சாட், சரல்.
  1. மாணவர் செயற்கைகோள்:
  • நானோ/பைக்கோ செயற்கைகோள்களின் வளர்ச்சிக்கு பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்குவிக்க இஸ்ரோவின் மாணவர் செயற்கைகோள் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • (எ.கா) கலாம்சாட்-வி2, அனுசாட் போன்றவை.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!