ஜிகா வைரஸ்:
- ஜிகா வைரஸ், வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில், ஏடிஸ் இனத்திலிருந்து, முக்கியமாக ஏடிஸ் எஜிப்தியிலிருந்து பாதிக்கப்பட்ட கொசு கடிப்பதால் பரவும் வைரஸ் ஆகும்.
- ஏடிஸ் கொசுவானது பொதுவாக பகலில் கடிக்கின்றன, அதிகாலை மற்றும் பிற்பகல்/மாலையில் அதிகம் கடிக்கிறது.
- டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்களை பரப்பும் கொசுக்களாலேயே ஜிகா வைரசும் ஏற்படுகிறது.
பரவல்
- ஜிகா வைரஸ் கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து கருவுக்கு பரவுகிறது.
- பாலியல் தொடர்பின் மூலமும், இரத்தம் (ம) இரத்தம் சார்ந்த பொருட்கள் பரிமாற்றுவதன் மூலமும் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையினாலும் பரவுகிறது.
ஜிகா வைரஸ் நோயின் சிக்கல்கள்:
- கர்ப்ப காலத்தில் ஜிகா வைரஸ் தொற்று ஏற்படுமாயின் புதிதாக பிறக்கும் குழந்தைக்கு அசாதாரண குறைபாடு, சிறிய தலையுடைய பிறப்பு போன்றவற்றிற்கு காரணமாகிறது.
- கர்ப்ப காலத்தில் ஜிகா வைரஸ் தொற்று ஏற்படுமாயின் கரு களைப்பு, குறைபிரசவம் மற்றும் பிரசவத்தின் போது சில கர்ப்ப கால சிக்கல்களுக்கு காரணமாகிறது.
தடுப்பு மற்றும் கட்டுப்பாடு:
- ஜிகா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அல்லது தடுப்பூசி இன்னும்
- கண்டறியப்படவில்லை.
- ஜிகா வைரஸ் நோய் தொற்றைத் தடுப்பதற்கான மிக முக்கிய நடவடிக்கையாக பகல் மற்றும் மாலை நேரங்களில் கொசு கடிப்பதிலிருந்து பாதுகாத்தல்.
- கொசு இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் குறைக்க உள்ளூர் அரசு மற்றும் பொது சுகாதார திட்டங்களை சமூக ஒற்றுமையுடன் சேர்ந்து ஆதரிப்பது அவசியமாகும்.
எல்லா விடைகளுமே மிக சுருக்கமாக இருக்கிறது. விடைகளை பெரிதுபடுத்தி, மேலும் நிறைய Pointsகளுடன் ஒரு 15 மதிப்பெண் விடை அளவில் அல்லது 30 மதிப்பெண் விடை அளவில் தந்தால் பயிற்சி பெற வசதியாக இருக்கும். 🙏
நிச்சயம் சிறப்பாக செய்வோம்.
கேள்விகளின் தன்மை பொருத்து அதன் அளவு இருக்கும்.