பெரியார் வாங்கிய பட்டங்கள்
- ஈ.வே.ராமசாமிக்குப் ‘பெரியார்‘ என்னும் பட்டம் 13 நவம்பர் 1938ல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் வழங்கப்பட்டது.
- ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ என தந்தை பெரியாருக்கு பட்டத்தை 27 ஜூன் 1970-ல் யுனஸ்கோ மன்றம் வழங்கியது.
பெரியாரின் சிறப்பு பெயர்கள்
- ஈரோட்டுச் சிங்கம்
- புத்துலகத் தொலை நோக்காளர்
- பெண்ணினப் போர் முரசு
- சுயமரியாதை (தன் மதிப்பு) சுடர்
- வைக்கம் வீரர்
- வெண்தாடி வேந்தர்
- பகுத்தறிவுப் பகலவன்
- தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்
பெரியார் தொடங்கிய இயக்கம்
- பெரியார் தோற்றுவித்த இயக்கம் – சுயமரியாதை (தன் மதிப்பு) இயக்கம்.
- சுயமரியாதை இயக்கம் – தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1925.
பெரியார் நடத்திய இதழ்கள்
- உண்மை
- ரிவோல்ட் (ஆங்கில இதழ்)
- குடியரசு
- விடுதலை
பெரியார் எதிர்த்தவை
- இந்தித் திணிப்பு
- தேவதாசி முறை
- குழந்தைத் திருமணம்
- குலக்கல்வித் திட்டம்
- கள்ளுண்ணல்
- மணக்கொடை
பெரியார் விதைத்த விதைகள்
- பெண்களுக்கான இட ஒதுக்கீடு
- கலப்புத் திருமணம்
- குடும்ப நலத்திட்டம்
- பெண்களுக்கான சொத்து உரிமை
- சீர் திருத்தத் திருமணம் ஏற்பு
- கல்வி, வேலைவாய்பு இட ஒதுக்கீடு
திருக்குறளை போற்றிய பெரியார்
- அனைவருக்கும் பொதுவான வகையில் அறிவியல் கருத்துகளும் தத்துவக் கருத்துகளும் இடம் பெற்றிருப்பதால், தந்தை பெரியார் மதிப்பு மிக்க நூலாக திருக்குறளை கருதினார்.
- இந்நூலில் (திருக்குறள்) அரசியல், சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் அடங்கியுள்ளன, இதை (திருக்குறளை) ஊன்றிப் படிப்பவர்கள் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள் என்றார் தந்தை பெரியார்.
பெரியாரை போற்றிய பாரதிதாசன்
- தொண்டு செய்து பழுத்த பழம் (பெரியார்) தூயதாடி மார்பில் விழும் (பெரியார்) மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் அவர் தாம் பெரியார் பார் அவர் தாம் பெரியார்.
-புரட்சிகவி பாரதி தாசன்
பெரியாரின் சிந்தனைச் சிறப்புகள்
பெரியாரின் சிந்தனை கூறுகள்
- தொலைநோக்கு உடையவை
- அறிவியல் அடிப்படையில் அமைந்தவை
- மனிதநேயம் வளர்கப் பிறந்தவை
பெரியாரின் சிந்தனைகள் அறிஞர்கள் மதிப்பிடு
- அறிவுலகுக்கு – திறவுகோல்
- பகுத்தறிவுப் பாதைக்கு – வழிகாட்டி
- மனித நேயத்திற்கு – அழைப்பு மணி
- ஆதிக்க சக்திகளுக்கு – எச்சரிக்கை ஒலி
- சமூகச் சீர்கேடு களைவதற்கு – மகா மருந்து
பெரியாரின் சிந்தனைகள் எழுச்சியை ஏற்படுத்திய துறைகள்
- பகுத்தறிவு
- எழுத்துச் சீர்திருத்தம்
- மொழி, இலக்கியம்
- சிக்கனம்
- கல்வி
- பெண் கல்வி
- பெண்கள் நலம்
- சமூகம்
- மதம்
பெரியாரின் பகுத்தறிவு கொள்கை
- தந்தை பெரியார் என்றவுடன் நினைவுக்கு வருவது, அவரின் பகுத்தறிவுக் கொள்கை.
- சமூகம், செம்மாந்து சீர்மையுடன் திகழப் பாகுபாடுகளற்ற மனவுறுதி படைத்த மக்களை உருவாக்க இன்றியமையாதது பகுத்தறிவு.
- அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு.
- எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களை எழுப்பி, அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு ஆகும்.
- முன்னோர்கள் செய்தார்கள் என்பதற்காகவே ஒரு செயலை அப்படியே பின்பற்றி இன்றும் கடைப்பிடித்தல் கூடாது. அக்காலத்திற்கு ஏற்ற வகையில் அப்படிச் செய்திருப்பார்கள், இன்று காலம் மாறிவிட்டது.
- இக்கால வளர்ச்சிக்கு ஏற்ப அறிவு நிலையில், நடைமுறைக்கேற்ற வகையில் செயல்பட வேண்டும் என்ற கண்ணோட்டத்துடனே சிந்தித்தார்.
- சமூகம், மொழி, கல்வி, என அனைத்துத் துறைகளிலும் பெரியாரின் சிந்தனை புதிய எழுச்சியை ஏற்படுத்தியது.
பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்
- பெரியாரின் மொழி சீரமைப்பு கருத்தின் சில கூறுகளை தமிழக அரசு 1978 ஆம் ஆண்டு நடைமுறைபடுத்தியது.
- மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும்.
- மொழியின் பெருமையும் எழுத்துகளின் மேன்மையும் அவை எளிதில் கற்றுக்கொள்ளக் கூடியனவாக இருப்பதைப் பொறுத்தே அமைகின்றன.
- எனவே, மொழி ஆனது காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும், அவ்வப்பொழுது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும்.
- கால வளர்ச்சிக்கேற்பத் தமிழ் எழுத்துகளைச் சீரமைக்கத் தயங்கக் கூடாது.
- கால வளர்ச்சிக்கு மொழி சீரமைப்பு தேவை என்று கருதி மொழி சீரமைப்புக்கான மாற்று எழுத்துருக்களை (வரி வடிவம்) உருவாக்கினார்.
உயிர் எழுத்து சீரமைத்தல்
- ஐ என்பதனை அய் எனவும், (ஐயா அய்யா) ஒள என்பதனை அவ் எனவும் (ஔவை – அவ்வை)
மெய் எழுத்து சீரமைத்தல்
- மெய்யெழுத்துகளில் சில எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றார்.
- அவ்வாறு மெய்யெழுத்துகளை குறைப்பதால் தமிழ் மொழி கற்பதற்கும் தட்டச்சு செய்வதற்கும் எளிதாகும்.
பெரியாரின் மொழி, இலக்கிய கொள்கை
- மொழியோ நூலோ இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும் என்று கூறினார் தந்தை பெரியார்.
- ஒரு மொழியின் தேவை என்பது, அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது.
- தமிழில் இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் படைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
- ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மை அடைய அவற்றைப் பயன்படுத்தும் மக்களும் அறிவுடையவராக உயர தேவை
- மதம், கடவுள் ஆகியவற்றின் தொடர்பற்ற இலக்கியம் யாவருக்கும் பொதுவான இயற்கை அறிவைத் தரும் இலக்கியம்
- யாவரும் மறுக்க முடியாத அறிவியல் பற்றிய இலக்கியம் இந்தியாவிலேயே பழமையான மொழி தமிழ் மொழியாகும் என்றார்.
பெரியார் கூறிய சிக்கனம்
- தந்தை பெரியார் சிக்கனம் என்னும் அருங்குணத்தைப் பெரிதும் வலியுறுத்தினார். அதற்கேற்றவாறு தானும் வாழ்ந்து காட்டினார்.
- பொருளாதார தன்னிறைவு அடையாத நிலையில் அனைவரும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது கட்டாயம் என்றார்.
- விழாக்களாலும் சடங்குகளாலும் மூடப்பழக்கம் வளர்வதோடு, வீண் செலவும் ஏற்படுவதால் தேவையற்ற சடங்குகளையும் விழாகளையும் தவிர்க வேண்டும் என்றார்.
- பகட்டின்றி மிக எளிமையாகவும் சீர்திருத்த முறையிலும் திருமணம் போன்ற விழாக்களைப் நடத்த வேண்டும் என்றார்.
பெரியாரின் கல்வி கொள்கை
- சமூக வளர்ச்சிக்குக் மிகச் சிறந்த கருவியாகப் கல்வி என தந்தை பெரியார் கருதினார்.
- மனப்பாடத்திற்கு முதன்மை அளிக்கும் தேர்வு முறையையும், மதிப்பெண்களுக்கு முதன்மை அளிக்கும் முறையையும் கடுமையாக எதிர்த்தார்.
- கல்வியானது மக்களிடம் பகுத்தறிவையும். நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். சுயமரியாதை உணர்ச்சியையும்.
- கல்வியானது மேன்மை வாழ்வு வாழ்வதற்கேற்ற தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்.
- தந்தை பெரியார் பள்ளிகளில் அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் மூடப்பழக்கங்களையும் கற்றுத் தரக்கூடாது என தந்தை பெரியார் கூறினார்.
- பள்ளிகளில் தற்சிந்தனை ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் கல்வியினைக் கற்றுத்தர வேண்டும் என்று கூறினார் தந்தை பெரியார்.
- சமூகத்தின் அனைத்து நிலையினருக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்றார் தந்தை பெரியார்.
- குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே கல்வி உரிமையானது எனவும் சில பிரிவினர்க்குக் கல்வி கற்க உரிமை இல்லை எனவும் கூறப்பட்ட கருத்துகளைப் கடுமையாக எதிர்த்தார்.
பெரியாரின் பெண் கல்வி கொள்கை
- அனைவருக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும். குறிப்பாகப் பெண்களுக்குக் கல்வியறிவு புகட்ட முன்னுரிமை அளிக்க வேண்டும்.
- பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வியினால் சமுதாயம் விரைவாக முன்னேறும் என்று நம்பினார்.
பெரியாரின் பெண்கள் நலக் கொள்கை
- நாட்டு விடுதலையைவிட முதன்மையானது பெண்கள் விடுதலை தான்.
- பெண்களுக்கு வேலை வாய்ப்பில் (ஐம்பது) 50% விழுக்காடு இடஒதுக்கீடு தரப்பட வேண்டும்.
- குடும்பப் பணிகளில் ஆண்களுக்கு என்று தனிப் பணிகள் எதுவுமில்லை.
- ஆண்களும் குடும்பப் பணிகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
- இளம் வயதிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்க கூடாது.
- பெண்கள் தெளிந்த அறிவுடனும் தன்னம்பிக்கையுடனும் திகழ வேண்டும்.
- பெண்கள் நன்கு கல்வி சுற்று. சுய உழைப்பில் பொருள் ஈட்ட வேண்டும்.
- பெண்கள் பொருளாதாரத்தில் பிறறைச் சார்ந்து வாழ வேண்டிய நிலையில் இருக்கக்கூடாது.
- கல்வி, வேலை வாய்ப்பு, குடும்பம். குடும்ப சொத்து ஆகியவற்றில் ஆண்களுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் அளிக்கப்ப்பட வேண்டும்
- கைம்பெண்களுக்கு மறுமணம் செய்ய வழிவகை காணவேண்டும்.
- பெண்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
சமூகம்
- தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் சமூகத்தில் சாதி சமயப் பிரிவுகள் மேலோங்கி இருந்தன.
- சாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்க்கிறது. மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. மனிதர்களை இழிவுபடுத்துகிறது. அந்தச் சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும் என்றார் தந்தை பெரியார்.
- சாதியினால் மனித வாழ்விற்கு எவ்விதச் சிறு பயனும் விளையப் போவதில்லை. அதனால்
- வீண் சண்டைகளும் குழப்பங்களுந்தான் மேலோங்குகின்றன.
- அத்தகு சாதி, மனிதனுக்குத் தேவையில்லை என்று வலியுறுத்தினார்.
மதம்
- மதங்கள் என்பன மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப்பட்டன. ஆனால், இன்று மதத்தின் நிலை என்ன? நன்கு சிந்தித்துப் பாருங்கள்:
- மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்காக மனிதர்களா? மதம் என்பது மனிதர்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகவா? பிரித்து வைப்பதற்காகவா?’ எனப் பெரியார் பகுத்தறிவு வினாக்களை எழுப்பினார்.
- தந்தை பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தார்.
பெரியார் -மீள் பார்வை
- பாகுபாட்டு இருளுக்குள் சிக்கித் திணறிக்கொண்டிருந்த தமிழக மக்களைத் தம் பகுத்தறிவு ஒளியால் வெளிக்கொணரப் பாடுபட்டோருள் முதன்மையானவர் பெரியார்.
- (இருபதாம்) 20ம் நூற்றாண்டில் ஈரோட்டில் தோன்றிப் பகுத்தறிவு, தன்மதிப்பு (சுயமரியாதை) ஆகிய கண்களை மக்களுக்கு அளிக்க அரும்பணியாற்றியவர் பெரியார்.
- பெரியார் நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துகளை எப்பொழுதும் கூறியதில்லை.
- மூடப்பழக்கத்தில் மூழ்கிக கிடந்த தமிழ் மக்களைப் பகுத்தறிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றவர்.
- அடிமையாய் உறங்கிக் கிடந்த சமூகம் விழிப்பதற்குச் சுயமரியாதைப் பூபாளம் இசைத்தவர்.
- மானமும் அறிவும் கொண்டவர்களாகத் தமிழர்கள் வாழவேண்டும் என்று அரும்பாடுபட்டவர்.
- தானே முயன்று கற்று, தானாகவே சிந்தித்து அறிவார்ந்த சுருத்துகளை வெளியிட்டவர்.
- தமது சீரதிருத்தக் கருத்துளுக்கேற்ப வாழ்ந்து காட்டியவர்.
- தமது வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்தவர்.
- சமுதாயம் மூடப்பழக்கங்களிலிருந்து மீண்டெழ அரும்பாடுபட்டவர். அதற்காக பல முறை சிறை சென்றவர்.
- பலரின் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தவர்.
- இறுதி மூச்சு வரை சமூக சீர்திருத்தப் போராளியாகவே வாழ்ந்து மறைந்தவர்.