தமிழகத்தில் கனிம வளங்கள்
- டைட்டானியம், லிக்னைட், மேக்னசைட், கிராபைட், லைம்ஸ்டோன், கிரானைட், பாக்சைட் போன்ற சுரங்கத் திட்டங்கள் தமிழகத்தில் உள்ளன.
- இவற்றில் முன்னோடித் திட்டமாக நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தை குறிப்பிடலாம் (NLC).
- இதன் வளர்ச்சியினால் அனல் மின்நிலையம், உரத் தொழிற்சாலை, கார்பன் சார்ந்த தொழில்கள் வளர்ந்து வருகின்றன.
- இதே போல் சேலத்தில் மாங்கனிசு சுரங்கமும ஏற்காட்டில் பாக்சைட் சுரங்கமும், கஞ்சமலையில் இரும்புத்தாது சுரங்கமும் அமைந்துள்ளன.
- மாலிப்டினம் எனும் இரசாயனத்தாது இந்தியாவிலேயே மதுரை மாவட்டத்தில் உள்ள கரடிக்குட்டம் என்னும் ஊரில் மட்டுமே கிடைக்கிறது.
கனிம வளங்கள்
கனிமம் | இருப்பு (டன்களில்) | நாட்டின் இருப்பில் தமிழகத்தின் பங்கு |
லிக்னைட் | 30,275,000 | 87% |
வேர்மிகுலைட் | 2,000,000 | 66% |
கார்னெட் | 23,000,000 | 42% |
ஜேர்கான் | 8,000,000 | 38% |
கிராபைட் | 2,000,000 | 33% |
லெமனைட் | 98,000,000 | 28% |
ரூட்டைல் | 5,000,000 | 27% |
மோனசைட் | 2,000,000 | 25% |
மேக்னசைட் | 73,000,000 | 17% |