தமிழ்நாடு மின்னாளுகை முகமை பெற்ற விருதுகளை பற்றி எழுதுக.

இ-பிஸ் (e-Biz) விருது – தமிழ்நாடு மின்ஆளுகை முகமை உருவாக்கிய ஒற்றைச் சாளர அமைப்பு

  • மாநிலத்தில் தொழில்துறைத் திட்டங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கும் பொருட்டு முதலீட்டாளர் சேவை இணையம் ஒன்றினை உருவாக்கியதற்காக தமிழ்நாடு மின்ஆளுகை முகமை இந்த விருதினைப் பெற்றது.
  • மேலும் பல்வேறு நிலையில் உள்ள அலுவலர்களிடமிருந்து அனுமதி பெறும் முறையை எளிமையாக்கியதற்காகவும், கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை எளிய முறையில் வடிவமைத்ததற்காகவும், இந்த விருது வழங்கப்பட்டது.

வெப் ரத்னா விருது

  • உலகளாவிய வலையின் ஊடகத்தைப் (World Wide Web) பயன்படுத்தி மின்-ஆளுகையில் முன்மாதிரியான முன்முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக டிஜிட்டல் இந்தியா விருதுகள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (MeitY) நிறுவப்பட்டுள்ளது.

குடிமக்களின் பல்வேறு விதமான எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய, மேம்பட்ட அணுகுதகமை கொண்ட வலைதளங்கள் மற்றும் இணையதளங்களுக்கு, பல்வேறு பிரிவுகளின் கீழ் “வெப் ரத்னா’ விருது வழங்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!