தலைமை செயலரின் பணிகள் என்ன?

தலைமைச் செயலர்

  • தலைமைச் செயலர் மாநிலச் செயலகத்தின் செயல்துறைத் தலைவராக உள்ளார்.
  • மாநில நிர்வாகத்தின் நிர்வாகத் தலைவராக அவர் உள்ளார் மற்றும் மாநில நிர்வாகப் படிநிலையின் உச்சத்தில் நிற்கிறார்.
  • அவர் அனைத்து செயலர்களின் தலைவராக இருந்து அனைத்துத் துறைகளையும் கட்டுப்படுத்துகிறார்.
  • அவர் மாநிலத்தில் மிகவும் மூத்த சிவில் பணியாளராக இருக்கிறார்.
  • மாநில அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட செயல் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களையும் பணிகளையும் அவர் பெற்றுள்ளார்.
  • மேலும், மரபுகளிலிருந்தும் சில அதிகாரங்களை அவர் பெறுகிறார். அவர் பின்வருகின்ற பிரதான பணிகளையும், மற்ற பணிகளையும் செய்கிறார்.

பிரதான பணிகள்

  • முதலமைச்சருக்கு ஒரு ஆலோசகராக, மாநில அமைச்சர்களால் அனுப்பப்படும் முன்வரைவுகளின் நிர்வாக உள்ளடக்கங்களை தலைமைச் செயலர் விளக்குகிறார்.
  • அமைச்சர் குழுவிற்கு செயலராக, அமைச்சர்குழு கூட்டங்களுக்கான நிகழ்ச்சிநிரலை அவர் தயாரிக்கிறார் மற்றும் அதன் செயல்பாடுகளின் பதிவுகளைப் பாதுகாக்கிறார்.
  • சிவில் பணியின் தலைவராக, மூத்த மாநில சிவில் பணியாளர்களின் நியமனம், இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு தொடர்பானவற்றை அவர் கவனிக்கிறார்.
  • தலைமை ஒருங்கிணைப்பாளராக, துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணப்பை நோக்கி அவர் பணிபுரிகிறார்.
  • துறைகளுக்கிடையேயான சிக்கல்களைப் போக்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அவர் இருக்கிறார்.
  • சில குறிப்பிட்ட துறைகளின் தலைவராக, அவைகளை மேற்பார்வையிடுகிறார் மற்றும் கட்டுப்படுத்துகிறார்.
  • சிக்கல் தீர்க்கும் நிர்வாகியாக, வெள்ளம், வறட்சி, இனக் கலவரங்கள் போன்ற சிக்கலான நேரங்களில் மிகவும் முக்கிய பங்கில் அவர் செயல்படுகிறார்.

மற்ற பணிகள்

  • துறைகளுக்குள் அடங்காத அனைத்து விவகாரங்களையும் தலைமைச் செயலர் கவனிக்கிறார்.
  • ஒட்டுமொத்த செயலகத்தின் மீதான பொது மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டை அவர் செயல்படுத்துகிறார்.
  • தொடர்புடைய மாநில உறுப்பினராக உள்ள மண்டலக் கவுன்சிலின் செயலராக சுழற்சி முறையில் அவர் செயல்படுகிறார்.
  • செயலகக் கட்டிடம், அமைச்சர்களுடன் தொடர்புடைய பணியாளர்கள், செயலக நூலகம் மற்றும் செயலகத்துறைகளின் பணியாளர்கள் மீதான நிர்வாகக் கட்டுப்பாட்டை அவர் பெற்றுள்ளார்.
  • மாநில அரசாங்கம், மத்திய அரசாங்கம் மற்றும் பிற மாநில அரசாங்கங்கள் போன்றவைகளுக்கிடையே தகவலின் பிரதான வழியாக அவர் இருக்கிறார்,
  • சட்டம் மற்றும் ஒழுங்கு, திட்டமிடல் போன்ற நிர்வாகத்தில் ஒரு முக்கிய பங்கில் அவர் செயல்படுகிறார். மற்றும்
  • மாநில அரசாங்கத்தின் ஒரு பேச்சாளராக அவர் செயல்படுகிறார்.
  • தேசிய வளர்ச்சிக் கவுன்சிலின் கூட்டங்களில் அவர் கலந்து கொள்கிறார்.
  • மாநில அரசாங்கத்தின் தலைமை பொதுமக்கள் தொடர்பு அலுவலராக அவர் செயல்படுகிறார்.
  • அரசியலமைப்பு விதி 356-ன்படி மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்படும் போது, மத்திய ஆலோசகர்கள் நியமிக்கப்படாமல் இருக்கும்போது ஆளுநருக்கு முதன்மை ஆலோசகராக அவர் செயல்படுகிறார்.
  • இவ்வாறாக, மொத்தத்தில் தமிழ்நாட்டின் தலைமைச் செயலகம் மாநில நிர்வாகத்தின் நரம்பு மண்டலமாக இருக்கிறது.
  • இதேபோல, தமிழ்நாட்டில் அனைத்துச் செயலர்களின் தலைவராக உள்ள தலைமைச் செயலர் குறிப்பாகச் செயலக நிர்வாகத்தின் நரம்பு முறைமையாக இருக்கிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!