திட்டமிடலின் பொருள் மற்றும் திட்டமிடலின் இலக்கணங்கள்

திட்டமிடலின் பொருள்

  • மைய திட்டமிடல் ஆணையத்தால் நன்கு வடிவமைக்கப்பட்ட, முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோள்களையும், நோக்கங்களையும், அடைவதற்கான வழிமுறையே திட்டமிடல் ஆகும்.

திட்டமிடலின் இலக்கணங்கள்

  • பொருளாதாரத் திட்டமிடல் என்பது தனியார் உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளை கூட்டாக கட்டுப்படுத்துவது அல்லது ஒடுக்குவதை குறிப்பதாகும். – ராபின்ஸ்
  • பொருளாதாரத் திட்டமிடல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை அடைய உரிய பொறுப்பில் உள்ளவர்கள் நிதானமாக சிந்தித்து, இருக்கக்கூடிய பொருளாதார வளங்களை அதிக அளவில் பயன்படுத்த சுட்டிக்காட்டும் வழிமுறைகளே ஆகும். – டால்ட்டன்
  • பொருளாதார திட்டமிடல் என்பது, “முக்கிய பொருளாதார முடிவுகளை எடுப்பது – என்ன, எவ்வளவு உற்பத்தி செய்யப்பட வேண்டும் மற்றும் பொருளாதார அமைப்பின் விரிவான கணக்கெடுப்பின் அடிப்படையில், ஒரு தீர்மானிக்கப்பட்ட அதிகாரத்தின் நனவான முடிவால் யாருக்கு ஒதுக்கப்பட வேண்டும் ஒட்டுமொத்தமாக”. – எச்.டி. டிக்கின்சன்
  • சோவியத் ஒன்றியம் திட்டமிடலை 1928-ல் செயல்படுத்தத் துவங்கியது.

பெருமந்தம்:

  • செப்டம்பர் 4, 1929 களில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பங்கு சந்தையின் பெரும்வீழ்ச்சிக்கு பிறகு தோன்றியது.
  • இதுவே இருபதாம் நூற்றாண்டின் மிக நீளமான, அழுத்தமான மற்றும் மிக அதிக அளவில் பரவிய மந்தமாகும்.
  • இந்திய விடுதலைக்குப்பிறகு 1948-ல் தொழில் கொள்கை அறிவிக்கப்பட்டது.
  • திட்டக்குழு மார்ச் 15, 1950ல் அமைக்கப்பட்டது.
  • ஏப்ரல் 1, 1951ல் முதல் திட்ட காலம் துவங்கியது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!